சென்னையில் பலத்த மழை:

சென்னையில் பலத்த மழை

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுப்பு

குரோம்பேட்டை, தாம்பரம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், ராசகீழ்பாக்கம், கேம்ப்ரோடு, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியதால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து. இதனால், சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாமல், போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கூவத்திலும் நீர் பெருக்கெடுத்தது. சில இடங்களில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் முழ்கின.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: