மத்திய அரசு நிபந்தனையை ஏற்றால் மட்டுமே, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் சேர்க்கும் ம ுடிவை தமிழக அரசு மறுபரீசீலனை: அமைச்சர்.

ஒன்றிய அரசு நிபந்தனையை ஏற்றால் மட்டுமே பெட்ரோல் டீசலை ஜி எஸ் டி க்குள் சேர்க்கும் முடிவை மாநில அரசு மறுபரிசீலனை செய்யும்

-மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை :

பெட்ரோல் டீசலை ஜி எஸ் டி யில் கொண்டு வர வேண்டும் என்பதை 2018 ஆம் ஆண்டு எங்கள் தலைவர் கூறி இருக்கிறார்.ஆனால் இன்றைக்கும் 2018 ஆண்டுக்கும் அதற்கும் மேல் 2014 ஆண்டுக்கும் பல மாறுபட்ட சூழ்நிலைகள் இருக்கிறது.கச்சா எண்ணெய் சந்தையிலும் ,பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் இருக்கிறது. சரக்கு பொருட்களின் சுழற்சி அடிப்படையில் பல வருடங்கள் ஏறி இறங்குவது வழக்கம்.2001 -2002 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 10 டாலர் ,12 டாலர் இருந்தது. ஆனால் 2013 -2014 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 130 டாலர் இருந்தது.இது நிர்ணயிக்கப்பட்ட விலையாகும்.பண வீக்கம் போன்றவை கருத்தில் கொள்ளப்படாமலேயே இவ்வளவு வேறுபாடு இருந்தது. ஐக்கிய முற்போக்கு அரசு டெல்லியில் இருந்த போது திரு.மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில் இருந்த சூழ்நிலையில்,கச்சா எண்ணெய் விலை ஓரளவுக்கு அதிகரித்த உடனே,பல முறையை வரியை குறைத்து மற்றும் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் நஷ்டத்தில் இயக்குகிற அளவிற்கு அதனையும் குறைத்து எல்லா வகையிலும் விலையை கட்டுப்படுத்தி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்று கொண்டு இருந்தது. ஆட்சி மாறும் போது நேர்முக வரி ஒன்றிய அரசாங்கத்திற்கு 55 சதவிகிதமும்,45 சதவிகித மறைமுக வரியும் இருந்தது.நேர்முக வரி என்பது மாநகராட்சி வரியும் ,வருமான வரியும் ஆகும் இவை நியாயமானவை.வருமானம் அதிகரிக்க அதிகரிக்க விலையை அதிகரிக்கலாம்.மறைமுக வரி என்பது (POINT OF SALE TAX ) என்பது யார் வாங்குகிறார்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரியாது.வாங்குகிறவர்கள் மேல் விற்கிறவர்கள் அந்த வரியை தீட்டி அதனால் அரசாங்கத்திற்கு வரியை ஈட்டி கொடுக்கலாம் .அந்த மாதிரி வரியே தேய்வுவிகித வரி ஆகும் .வரி விதிக்கத்தக்கத் தொகை கூடக்கூட வருமான வரி விகிதம் குறைந்தால் அம்முறை தேய்வீத வரிவிதிப்பு எனப்படுகிறது.தனிநபர் நோக்கில் இந்த வரிவிதிப்பு முறை ஏழைகளின் வரிச்சுமையைக் கூட்டி பணக்காரர்களின் வரிச்சுமையைக் குறைக்கின்றது (அவர்களது வரிகட்டும் ஆற்றலோடு ஒப்பிடுகையில்). இவ்வரிவிதிப்பு முறைக்கு நேரெதிர் முறை வளர்விகித வரி எனப்படுகிறது. தொடர்ந்து இன்றைக்கு இருக்கிறே ஒன்றிய பாஜக அரசாங்கம் நேர்முக வரியை குறைத்து குறைத்து பணக்காரர்கள் நியாயமாக கட்ட வேண்டிய வரியை வரியை குறைத்து ஒன்றிய அரசிற்கு 100 ரூபாய் வரி வருமானம் வருகிறது என்றால் அதில் வெறும் 45 முதல் 47 ரூபாய் தான் நேர்முக வரி ஆகும்.அந்த இடைவெளியை சரி செய்வதற்காக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு இறங்கி ஏறி இருந்துள்ளது.ஆனால் ஒன்றிய அரசுஇந்த வரியை கடுமையாக அதிகரித்தது.2014 ஆம் ஒன்றிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது மொத்த ஒன்றிய அரசாங்கத்துடைய பெட்ரோல் வரி ஒரு லிட்டருக்கு சுமார் 10 ரூபாயும்.டீசல் மீதான வரி 5 ரூபாயும் இருந்தது .இதில் 90 சதவிகிதம் கலால் வரியாக எடுக்கப்பட்டு 5 முதல் 10 சதவிகிதம் தான் செஸ் சர் சார்ஜாக எடுக்கப்பட்டது.அப்படியென்றால் 90 சதவிகிதம் ஒன்றிய அரசாங்கம் எடுத்த பிறகு மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுத்தது ஒரு காலத்தில் 32 சதவிகிதம் ,14 வது நிதிக்குழு வந்த பிறகு 42 சதவிகிதம் இருந்தது.அதனை நேராக மாற்றி படிப்படியாக அந்த வரியை உயர்த்தி இன்றைக்கு பெட்ரோலுக்கு 32 ரூபாய் 90 பைசாவும்,டீசலுக்கு 31 ரூபாயும் வரியை ஒன்றிய அரசாங்கம் தீட்டுகிறார்கள்.அந்த வரியில் 4 சதவிகிதம் வெறும் 1 ரூபாய் 40 பைசா தான் கலால் ஆக பிரிக்க கூடிய வரி மீதமுள்ள 90 சதவிகிதம் ஒன்றிய அரசாங்கம் செஸ் சர் சார்ஜாக எடுத்து பகிர்ந்து கொடுக்கப்படாமல் வைத்துள்ள வரி ஆகும்.இந்த சூழ்நிலை எல்லாம் மாறின பிறகு இந்த ஜி எஸ் டி கூட்ட குறிப்பில் ஒன்றிய அரசு இதனை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வருவதாக சொல்லவில்லை .கேரள மாண்பமை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு தொடர்பாக அளித்த தீர்ப்பில் ,பெட்ரோல் ,டீசல் விலையை ஏன் ஜி எஸ் டி க்குள் கொண்டு வரக்கூடாது என்பதை ஜி எஸ் டி கவுன்சிலில் வைத்து அந்த முடிவை எங்களுக்கு தெரிவியுங்கள் என கூறி இருக்கிறார்கள் .ஏனெனென்றால் ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட அரசாங்கத்திற்கு தான் நிதி குறித்த முடிவுகளை எடுக்க முடியும் .ஆனால் இதில் ஒன்றிய அரசிற்கும் இதில் விருப்பமில்லை எந்த மாநில அரசுகளும் இதனை விரும்ப மாட்டார்கள் .ஏனென்றால் ஒன்றிய அரசின் மொத்த வருமானம் இருபது சதவிகிதம் பெட்ரோல் மற்றும் டீசலில் மட்டும் வருகிறது .

இதனை இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டுமென்றால் பிசினெஸ் ஸ்டாண்டர்ட் என்ற ஆங்கில நாளிதழில் பொருளாதார பேராசிரியர் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் .அதில் எந்த அளவிற்கு ஒன்றிய அரசாங்கம் வசதி படைத்தவர்களிடம் இருந்து வரியை குறைத்து சாமான்ய மக்களின் மீது மாற்றியதோ உள்ளீட்டு பொருட்களின் வரியை அதிகப்படுத்தியதால் விலை வாசியை அதிகரிக்கும்.அதுவும் ஏழை சாமான்ய மக்களை தான் கூடுதலாக பாதிக்கும்.அப்படியென்றால் இந்த ஒன்றிய அரசாங்கம் அவர்களது நண்பர்களான பெரிய பணக்காரர்களுக்கு வரியை குறைத்ததினால் ஏழை எளிய சாமான்ய மக்கள் இரண்டு வகையில் வரியை அதிகரித்து இருக்கிறார்கள் .ஒருவகை பாயிண்ட் ஆப் சேல் பெட்ரோல் டீசலில் மற்ற பொருட்களில் அதிகரித்து உள்ளார்கள் .இதெல்லாம் வந்த பிறகு எல்லா மாநிலங்களும் ஒரே கருத்தை தான் கூறினோம்.ஏனென்றால் ஜி எஸ் டி வந்த பிறகு சட்டமைப்பில் கொஞ்சம் இருந்த மாநில அரசுகளின் வரி உரிமை ஜி எஸ் டி மூலம் எடுக்கப்பட்டு விட்டது .ஜி எஸ் டி வந்த பிறகு 100 சதவிகித வரி விதிக்கும் முறையை ஒன்றிய அரசிற்கு எடுத்துக்கொண்டது .இது போன்ற நடைமுறை உலகில் எந்த நாடுகளிலும் இல்லை .சீனா போன்ற கம்யூனிச நாடுகளிலும் கூட ஏன் முதலாளித்துவம் இருக்கிற அமெரிக்காவில் கூட இல்லை .அங்கெல்லாம் ஒன்றியமும் வரி விதிக்கும் வருமான வரி நேர்முக வரி மாநிலமும் விதிக்கும்,மாவட்டமும் விதிக்கும் மாநகரமும் விதிக்கும் .ஆனால் இங்கு அந்த வரியை சட்டமைப்பிலேயே இழந்து விட்டோம்.70 ஆண்டுகளுக்கு பிறகு ஜி எஸ் டியை உருவாக்கி இருந்த மறைமுக வரி உரிமையையும் 75 சதவிகிதம் இழந்து விட்டோம்.மீதமுள்ள இரண்டு வகை பெட்ரோல் டீசல் மற்றும் மதுபான பொருட்கள் மீதான வரிகள் மட்டும் தான்.மாநிலங்கள் எங்களுடைய உரிமைகளை எல்லாம் எடுத்து விட்டீர்கள் என்றால் நாங்கள் எப்படி எங்கள் பொருளாதாரத்தை மேலாண்மை செய்வோம் என கேட்கிறோம்.

இங்கே இருக்கிற திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் மாண்புமிகு அமைச்சர் உதயகுமார் சட்டமன்றத்தில் ஒரு குறிப்பை பேசினார் .அதை நான் முழுமையாக பின்பற்றினேன்.நீதிக்கட்சியால் தொடங்கப்பட்டு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்த போது அரசிடம் நிதி இல்லை.அப்போது எம் ஜி ஆர் 7 சதவிகிதம் இருந்த தமிழ்நாடு விற்பனை வரியை 8 சதவிகிதமாக ஆக்கி அதில் வந்த நிதியை முழுமையாக பயன்படுத்தி உணவளிக்க ஏற்பாடு செய்தார் .இதுதான் முடிவெடுப்பதற்கான சுதந்திரம் ஆகும்.அந்த 90 சதவிகித உரிமையை இழந்து விட்டோம்.எந்த மாநிலமும் எங்கள் உரிமையை கொடுத்து விடுகிறோம் என்றோ ,ஒன்றிய அரசும் ஒப்புதல் அளிக்கவில்லை .ஆனால் அதனை மீறி ஒரு கருத்தை சொன்னோம் .ஏனென்றால் எங்கள் தலைவர் வழியில் நாங்கள் கருத்து மாறாதவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சியாக இருக்கும் போதும் ஒரே கருத்துதான்.சிறந்த பொருளாதார நிபுணர் பொருளாதார நிபுணர் ஜான் மேனார்டு கேன்ஸ் சொன்னது போல "when the facts change " சூழ்நிலை மாறும் போது எங்களுடைய நிலைப்பாடும் மாறும்.ஒரு காலத்தில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் எடுத்து கொண்டிருந்த வரியை இன்றைக்கு 32 ரூபாய் எடுக்கிற போது நீங்கள் எப்போது செஸ் சஸ்சார்ஜை கைவிடுகிறீர்களோ அதாவது பகிர்ந்து கொடுக்காத வரியை எப்போது கைவிடுகிறீர்களோ எங்கள் வரியை விட்டு ஜி எஸ் டி யில் சேருவதற்கு மறுபரிசீலனை செய்வோம்.நாம் இதில் இருந்து ஜி எஸ் டி க்கு பெட்ரோல் டீசலை கொண்டு போய் வைத்தால் இன்றைக்கு ஜி எஸ் டி ஸ்லாப் ல் 28 சதவிகிதத்தில் கொண்டு போய் பெட்ரோல் டீசலை வைப்பார்கள் .14 சதவிகிதம் SGST 14 சதவிகிதம் CGST அதில் பகிர்ந்து கொடுக்க வேண்டியது ஒரு சதவிகிதம் வரும் .அதனால் நம்முடைய 20 சதவிகிதம் 15 சதவிகிதம் ஆகும்.ஆனால் அதனுடைய விளைவை நாம் காண முடியும்.ஏற்கனவே 3 ரூபாய் குறைத்த போது அதன் விளைவை காண முடிந்தது .அதனால் பெட்ரோல் டீசல் மீதான மொத்த வரி குறைந்தால் நாட்டிற்கும் நல்லது சாமான்யர்களுக்கும் நல்லது .இந்த
ஐந்து ஆறு சதவிகித்தை ஏற்க தமிழ்நாடு மாதிரி அரசாங்கம் ஏற்க தயார் ஆனால் ஒன்றிய அரசுக்கு விதிக்கும் நிபந்தனை எல்லாம் அவர்கள் எடுத்து வரும் 31 ரூபாயை எடுத்து விட வேண்டும் .அதனை அவர்கள் என்று செய்கிறார்களோ அன்று அனைவரும் சேர்ந்து ஜி எஸ் டி க்குள் சென்று விடுவோம் என்றார் .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: