நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க ம ாநில நிர்வாகிகள் கூட்டம்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் விருதுநகரில்
காணொலி காட்சி மூலம் நடைபெற்றது .

மதுரை

மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட முடிவுகளை கோட்ட நிர்வாகிகள் , உட்கோட்ட நிர்வாகிகள் மிகச்சிறப்பாக அமுல்படுத்த வேண்டுகிறோம்
கொரோனா நோய்த்தொற்று பரவிவரும் நிலையில் சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து சாலைப் பணியாளர்களுக்கும் தரமான முக கவசம்,கையுரை, சோப்பு. கிருமிநாசினி திரவம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர்,பழனி, திருவள்ளூர், இராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய கோட்டங்களில் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய நெடுஞ்சாலைகள், நீண்ட கால பராமரிப்பு ஒப்பந்தம் மூலம் தனியார் பராமரிக்க வழங்கியுள்ள ஒப்பந்தத்தால் சாலைப்ணியாளர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்து பொருளாதார சிரமம் மற்றும் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் வகையிலான நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்

கொரானா நோய்த்தொற்று பரவலில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுக்க தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள் மிகப்பெரும் செலவினங்கள் ஏற்பட்டு வருகிறது இந்நிலையை தமிழக அரசு கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளை தனியார் பராமரிக்க வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்துசெய்ய வேண்டும் சாலைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் சாலைகளை பராமரிக்கும் பணியை மேற்கொள்ள தயாராக உள்ளோம் எனவே ,தமிழக அரசு தனியார் பராமரிக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட 5000 கோடி ரூபாய்க்கு மேலான தொகையினை திரும்ப தமிழக அரசின் கஜானா வில் சேர்த்து கொரானா மீட்பு பணிக்கும் மக்கள் சேவைகள் பணிக்கும் பயன்படுத்த வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் 41- மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளர்கள் அனைவருக்கும் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியருக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வழியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம்
நினைவு (29-07-2020) நாளை போராட்ட பதாகையினை உயர்த்தி பிடிக்கும் தினமாக அனுசரிப்பது என்று மாநில நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்துள்ளது

1) 29-07-2020 அன்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில மையத்தின் சார்பில் சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டு ,
தமிழக முதலமைச்சர் , கூடுதல் தலைமைச் செயலாளர் நெடுஞ்சாலைத் துறை, முதன்மை இயக்குனர், தலைமைப் பொறியாளர், அனைத்து கண்காணிப்பு பொறியாளர், அனைத்து கோட்டம் பொறியாளர் , அனைத்து உதவிக்கோட்டப் பொறியாளர் களுக்கும் சங்கத்தின் மாநில மையத்தின் சார்பில் கோரிக்கை மனு மின்னஞ்சல் (e mail )அனுப்பும் இயக்கம் நடத்திடுவது.

2).29-07-2020 அன்று அனைத்து உதவி கோட்டப்பொறி யாளர் அலுவலகங்கள் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்திடுவது என்ற முடிவினை அனைத்து உட்கோட்டங்களிலும் மிக எழுச்சியுடன் நடத்திட வேண்டும்.

3).1-08-2020 முதல் 10-08-2020வரை கோட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்களிலும் சாலைப்பணியார் களை பணி தளங்களில் சந்தித்து பிரச்சார இயக்கம் அனைத்து சாலைப் பணியாளர்களையும் சங்கத்தின் உறுப்பினராக சேர்க்கும் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தையும் நடத்திடுவது உறுப்பினர் சந்தா தொகையை 15-08-2020 க்குள் மாநில மையத்தின் வங்கி கணக்கில் செலுத்திட வேண்டும்.

4).10-08-2020 அன்று கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கோட்ட,உட்கோட்ட நிர்வாகிகள் கோரிக்கை முழக்க போராட்டத்தை நடத்தி கோட்டப் பொறியாளர் அவர்களிடம் கோரிக்கை சாசனம் வழங்கும் இயக்கம் நடத்திடுவது ,
மேற்சொன்ன இயக்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக்கிட கோட்ட ,உட்கோட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தி திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டுவதுடன் தங்களது கோட்டத்திற்கான பொறுப்பு மாநில நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து நடைமுறை படுத்த வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: