ரஜினி மன்ற நிர்வாகி வீட்டில் ஆடு திருட்ட ு:

அலங்காநல்லூர் அருகே ரஜினி மன்ற நிர்வாகி வீட்டில் ஆடு திருட்டு:

அலங்காநல்லூர், ஜூலை. 28.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ரஜினி மன்ற நிர்வாகி வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு திருடு போனதாக போலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் அருகே கல்லனை ஊராட்சியில் வசிப்பவர் கருப்பையா. இவர், அலங்காநல்லூர் ஒன்றிய ரஜினி மன்ற இணைச் செயலாளராகவும், முடுவார்பட்டியில் கேபிள் டிவியும் நடத்தி வருகிறார்.
இவரது வீட்டு முன்பாக பசுமாடும், நான்கு ஆடுகளும் கட்டப்பட்டிருந்தன.
நள்ளிரவு மர்ம ஆசாமிகள், ரூ. 10 ஆயிரம் பெறுமான ஆட்டுக் கிடாயை திருடிச் சென்றதாக, கருப்பையா அலங்காநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்ததின் பேரில், விசாரனையும் நடந்து வருகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: