விநாயகர் சதுர்த்தி:

பிள்ளையார்பட்டி விநாயகருக்கு 18 கிலோ அரிசியில் செய்யப்பட்ட முக்கூரணி கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

பிள்ளையார்பட்டி :

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி எளிமையான சம்பிரதாய நடைமுறைகளை கடைபிடிக்க விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட்டது. காலை 10 மணி அளவில் கோவில் திருகுளத்தில் சண்டிகேசர் மற்றும் அங்குசதேவருக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் 18 கிலோ அரிசியில் செய்யப்பட்ட முக்கூரணி கொழுக்கட்டை விநாயகப்பெருமானுக்கு படைக்கப்பட்டது. அரசு வழிகாட்டுதலின்படி தேர்த் திருவிழா மற்றும் சந்தன காப்பு அலங்காரம் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான வந்து தரிசனம் செய்யும் இத்திருவிழாவில் குறைந்த அளவே பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசித்து சென்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: