பணி நிரந்தரம் கோரி பாரதிய டாஸ்மாக் பணியா ளர்கள் ஆர்ப்பாட்டம்:

டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பாரதிய டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்:

மதுரை:

டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம்,டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி பணி நேரத்தை திருத்தம் செய்வது அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாரதிய டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மதுரை அண்ணாநகரில் உள்ள மதுரை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு மதுரை பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாநில துணைத் தலைவர் மாயவன் தலைமையில்,
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊழியர்களின் பணி நிரந்தரம், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி நேரத்தை குறைப்பது, அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்வது, பணியாளர்களுக்கு அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை திண்டுக்கல் விருதுநகர் மதுரை தெற்கு வடக்கு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: