Photo

வாடிப்பட்டி பகுதியில் நடைபெற்ற
வ.உ.சி.பிறந்தநாள்விழாவில்
அன்னதானம்

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நீரேத்தான்,போடிநாயக்கன்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி உள்ளிட்டபகுதிகளில் வாடிப்பட்டிநகர வெள்ளாளர் உறவின்முறைசங்கம், வ.உ.சி. இளைஞர் பேரவை சார்பாக வ.உ.சி.பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. நீரேத்தானில் பஸ்நிலையம் முன்பு நடந்த விழாவிற்கு சங்கதலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் பாபநாசம், மரக்கடைபொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராம்மோகன் வரவேற்றார். மாரியப்பன் கேக்வெட்டினார். இந்தவிழாவில் போலீஸ்சப்இன்ஸ்பெக்டர்கள் வாண்டையார், பாலசுப்பிரமணி ஆகியோர் மரக்கன்றுகள் வழங்கினர். இதில் பழக்கடைபாண்டி, சந்தனபாண்டி உள்பட பலர்கலந்துகொண்டனர். செயலாளர் சங்கர் நன்றிகூறினார். போடிநாயக்கன்பட்டியில் நாகமுத்துராஜா தலைமை தாங்கினார். தங்கராஜ், ஞானசேகரபாண்டியன், கருப்புவீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குப்புசாமி வரவேற்றார். நாட்டாண்மை சாமியப்பன் அன்னதானம் வழங்கினார். இதில் தங்கராஜ், கருத்தபாண்டியன், சோனைபாண்டி உள்பட பலர்கலந்துகொண்டனர். விக்னேஷ் நன்றிகூறினார். தாதப்பநாயக்கன்பட்டியில் கிராமதலைவர் ராமு தலைமை தாங்கி அன்னதானம் வழங்கினார். மகாராஜன், கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி கார்த்திக்மணி வரவேற்றார். இதில் ராஜா,ராமர் உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் சரவணன் நன்றிகூறினார். தமிழ்மாநிலகாங்கிரஸ்கட்சி சார்பாக வட்டாரதலைவர் பாலசரவணன் தலைமையில் வ.உ.சி.படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கச்சைகட்டிபாண்டி, கராத்தேசிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராம்குமார், அர்சுணன், எம்.ஏ.முத்து உள்பட பலர்கலந்து கொண்டனர். பரவையில் முன்னாள்பேரூராட்சிதலைவர் ராஜா வ.உ.சி.படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: