மதுரையில் வ.உ.சி. பிறந்த தினம்:

மதுரையில் செக்கிழுத்த செம்மல்வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது திருஉருவச் சிலைக்கு மரியாதை:

மதுரை :

மதுரையில்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையில் 150- வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது திருஉருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.
மதுரை சிம்மக்கல்லில், உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், பொன் சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
அதிமுக சார்பில், மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், காங்கிரஸ் கட்சி சார்பில் இரு பிரிவுகளாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: