மதுரையில் சிலம்பு போட்டிகள்: மாணவ, மாணவி யர் பங்கேற்பு:

மதுரையில் சிலம்பு போட்டிகள்: மாணவ, மாணவியர்களுக்கு பரிசு:

மதுரை:

சிங்கப்பூர் இந்தியன் அசோசியேசன், இன்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ், தேவராட்டம் சிலம்பம், இந்தியன் சிலம்பம் பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய சிலம்பம் போட்டியானது, மதுரை கே.கே. நகரில் உள்ள ஏ. ஆர். பார்க்கில், நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாநகர் தல்லாகுளம் உதவி ஆணையாளர் சூரக் குமார் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர், செயலாளர் தவமணி கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக சிலம்பம் சுற்றி விளையாடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். உடன் , சிலம்ப ஆசான்கள் எஸ்.எம்.மணி,முத்துமாரி ஷிஜோ சரவணன் ஷேக் அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: