திருப்பாலை கிருஷ்ணன் கோயில் குடமுழுக்கு:

திருப்பாலை கிருஷ்ணன் கோயில் மகா கும்பாபிஷேகம்: அமைச்சர் பங்கேற்பு:

மதுரை:

மதுரை புது நத்தம் ரோடு, திருப்பாலை அருகே பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி திருவாலயம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு, வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி மற்றும் தொழிலதிபர் அன்னபூர்ணா தங்கராஜ் வந்திருந்து கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார் விழா கமிட்டியினர் அமைச்சர், தொழிலதிபரை வரவேற்றனர். கும்பாபிஷேக விழாவிற்கு சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து திரளானோர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தில், பங்கேற்ற பக்தர்களுக்கு, கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷே
கத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: