அப்துல் கலாம் நினைவஞ்சலி

சோழவந்தான் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 5ம் ஆண்டு நினைவஞ்சலி

சோழவந்தான்,ஜூலை

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு சோழவந்தான் பகுதியில் பொதுமக்கள் அப்துல் கலாம் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிபள்ளம் கிராமத்தில் இங்கு உள்ள கலையரங்கத்தில் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஏழைகளின் எழுச்சிநாயகருமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் படத்திற்கு காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் ராஜா முன்னிலையில் மன்னாடிமங்கலம் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறிவியல் மன்ற தலைவர் சரவணன் மற்றும் மன்னாடிமங்கலம் கிளை நிர்வாகிகள் முள்ளிப்பள்ளம் பஞ்சாயத்து கிராம நிர்வாகிகள் மற்றும் முள்ளிப்பள்ளம் அப்துல் கலாம் அறிவியல் மன்ற கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் அப்துல் கலாம் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது இவரது நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கபசுரசூரணம் மரக்கன்றுகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது அனைவரும் அப்துல்கலாமின் பசுமைப்புரட்சி என்றும் தொடர மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழை நீர் உயிர் நீர் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: