கலாம் நினைவு நாளில் மரக்கன்று வழங்கல்:

கலாம் நினைவு நாளில் மதுரை வழிகாட்டி மணிகண்டனின் நற்பணி.

முன்னாள் குடியரசுத் தலைவர் அய்யா அப்துல் கலாம் நினைவு தினம் (ஜூலை-27) மற்றும் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் (ஜூலை-28) ஆகிய இரண்டு முக்கிய தினங்கள் கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை சிம்மக்கல் நகர்ப்புற வீடற்ற முதியோர் இல்லத்தில் நற்பணிகள் நடைபெற்றது.

இங்கு இருக்கும் தோட்டத்தை இல்ல பொறுப்பாளரின் வழிகாட்டலுடன் முதியோர்கள் பல்வேறு மரங்கள் மற்றும் அழகிய செடிகளுடன் சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.

இங்கு நீர் பாய்ச்சும் குழாய் பழுதடைந்து மாற்ற வேண்டிய நிலையில் இருப்பது வழிகாட்டி மணிகண்டனின் கவனுத்துக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து முதியோர்களின் பசுமைப் பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அப்துல் கலாம் நினைவு தினம் மற்றும் உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஆகியவற்றை முன்னிட்டு நீர் பாய்ச்சும் குழாய் மற்றும் வாதாம் மரக்கன்று ஆகியவற்றை வழிகாட்டி மணிகண்டன் வழங்கினார்.

இவைகளை பெற்றுக்கொண்ட இல்ல பொறுப்பாளர் கிரேசியஸ் வழிகாட்டி மணிகண்டன் அவர்களிடம் நன்றி தெரிவித்தார்.

One thought on “கலாம் நினைவு நாளில் மரக்கன்று வழங்கல்:

  1. சிறப்பான பதிவு. மிக்க மகிழ்ச்சி.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: