மதுரை நகர குற்றச் செய்திகள்:

மதுரை அருகே சிலைமானில்
வீடு புகுந்து 8 பவுன் நகை ரூபாய் 2 லட்சம் திருட்டு:
மர்ம ஆசாமி கைவரிசை:

மதுரை:

மதுரை அருகே சிலைமானில் வீடு புகுந்து 8 பவுன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சத்தை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அருகே சக்கிமங்கலம் செல்வராஜ் காலனியை சேர்ந்தவர் அழகு பாண்டி 39. இவர், சலவைத் தொழிலாளி ஆவார் .இவர், தனது வீட்டில் கப்போர்டில் பெட்டியில் எட்டு பவுன் தங்க நகையும் ரூபாய் இரண்டு லட்சம் மும் வைத்திருந்தார். இந்நிலையில், அவசர தேவைக்காக அந்த பணத்தை எடுக்க சென்றபோது, பெட்டியுடன் பணமும் நகையும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ,அழகு பாண்டி சிலைமான் போலீசில் புகார் செய்தார் .புகாரில், இந்த திருட்டில் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப் படுவதாகவும் அவர்கள் பெயரையும் தெரிவித்துள்ளார். .சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை வண்டியூரில்
வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை:
நஷ்டம் காரணமாக ,
விபரீத முடிவு:

மதுரை:

வண்டியூரில் நஷ்டம் காரணமாக வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டியூர் சௌராஷ்டிரபுரம் முதல் தெருவைச்சேர்ந்தவர் சேதுராமன் 62.
இவர், வியாபாரம் செய்து வந்தார்.
வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன உலச்சலில் இருந்து வந்தார்.
இதற்கான சிகிச்சையும் பெற்றுவந்தார்.
இந்நிலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ,அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை தெற்குவாசலில்
செல்போன் தொலைந்து போனதால்
வாலிபர் விஷம்குடித்து தற்கொலை:

மதுரை:

தெற்குவாசல் பகுதியில் செல்போன் தொலைந்து போனதால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தெற்குவெளிவீதி முத்துக்கருப்பபிள்ளை சந்துவை சேர்ந்தவர் பார்த்திபன் 31.இவரது, செல்போன் தொலைந்துவிட்டது.
இதனால் ,மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, தெற்குவாசல் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

திருமண ஆசை காட்டி
இளம்பெண் கற்பழிப்பு
தாய்,மகனிடம் போலீஸ் விசாரணை:

மதுரை:

திருமண
ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக, தாய் மகன்மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தேனி மாவட்டம் அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் முப்பது வயது இளம்பெண்.
இவர் ,காளவாசல் சொக்கலிங்கநகர் இரண்டாவது தெருவில் வசித்து வருகிறார்.மதுரை பரவையை சேர்ந்தவர் இருபத்தேழுவயது வாலிபர்.
இவரும் அந்தப்பெண்ணும் காதலித்து வந்தனர்.
அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய வாலிபர் அவரை பலமுறை பலாத்காரம் செய்து கற்பழித்துள்ளார்.
பின்னர், திருமணம்‌செய்ய மறுத்துவிட்டார்.
இதற்கு அந்த வாலிபரின், தாயாரும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ,அந்தப்பெண் கொடுத்த புகாரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் தாய்,மகன்மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரையில் பெண்ணிடம்
கந்துவட்டி கேட்டு மிரட்டல்:
கணவர் மனைவி உட்பட மூன்று பேர் கைது:

மதுரை:

மதுரையில் பெண்ணிடம் கந்துவட்டிகேட்டு மிரட்டிய கணவர் மனைவி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
வடக்குமாசிவீதி கம்பளி மாற சந்துவை சேர்ந்தவர் சரஸ்வதி47.
இவர் சிவகங்கைமாவட்டம், காஞ்சிரங்குளம் வடக்குத்தெருவைசேர்ந்த தனிக்கொடி 48. என்பவரிடம், ரூபாய் ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
அதற்கு வட்டி செலுத்தி வந்த நிலையில், கூடுதல் வட்டி கேட்டு வந்தனர்.
இந்நிலையில், தனிக்கொடி,மனைவி தனலெட்சுமிஉறவினர் பூமாதேவி மூவரும்சேர்ந்து அதிக வட்டிகேட்டு சரஸ்வதியை மிரட்டிவந்தனர்.இது குறித்து சரஸ்வதி திலகர்திடல் போலீசில்புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிக்கொடி,மனைவி தனலெட்சுமி,உறவினர் பூமாதேவி மூவரையும் கைது செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: