பல்கலை. யில் முறைகேடு விசாரணை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பதவி உயர்வு, பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தலைமையிலான குழு 2-வது நாளாக விசாரனை:

மதுரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு பேராசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் அவர்களின் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில்., அதுதொடர்பாக 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிதாக பொறுப்பேற்ற பல்கலைக்கழகத் துணைவேந்தர் கிருஷ்ணன் பொறுப்பேற்றார். பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்றம் பல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, கடந்த ஆண்டு நீதியரசர்கள் அக்பர் அலி தலைமையில் கமிஷன் அமைக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து,
விசாரணை கமிஷன் விசாரணை நிறைவடைந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட மூன்று பல்கலைக்கழகங்களில், நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க , ஐ. ஏ.எ ஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டனர். இந்த நிலையில், உயர்கல்வி துறை இணைச் செயலாளர் கார்த்திகா தலைமையிலான குழுவினர் , பல்கலைக்கழகத்தில் விசாரணையை துவக்கினர்.
இந்த விசாரணையில், பேராசிரியர்கள் பணி நியமன பதவி உயர்வில் நடைபெற்ற முறைகேடு ,மற்றும் அக்பர் அலி கமிஷன் பரிந்துரை ஆகியவற்றை ஆய்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணையில், இரண்டாம் நாளாக பல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், விசாரணை முடிந்த பிறகே பல்வேறு தகவல்கள் வெளிவரும் என, ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: