Connect with us

LatestNews

தமிழகம் வளம் நிறைந்த மாநிலமாக திகழவேண்ட ும்: நிதி அமைச்சர்:

Published

on

உலகத்திலேயே சிறந்த மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பது, முதல்வர் மு.க. ஸ்டாலினின் இலக்கு: ஆய்வுக் கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு:

மதுரை:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சார்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுவாக நிதி மேலாண்மையும், ஆளுமையும் நல்லாட்சியும் ஒன்றாக செயல்பட வேண்டும். நிதியை தேவையான அளவில் ஈட்டுவது அதனை முறையாக ஈட்டுவது யாரிடமும் இருந்து எவ்வளவு நிதி ஈட்ட வேண்டும் இதனை சரியாக செயல்படுத்துவதுதான் அரசாங்கத்திற்கு அழகு. துறை அமைச்சர் தெரிவித்தபடி, அடிப்படை பொருளாதாரம் படித்தால் மூலதனச் செலவு எந்தெந்த மாநிலம் அதிகமாக்குகிறதோ, அந்தந்த மாநிலங்களில் வளர்ச்சி இருக்கும். இந்த துறையை பொறுத்தவரை சாலைகள், சிறு துறைமுகங்கள், கட்டடங்கள் ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி தனியார் முதலீடு ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்கும். உற்பத்தி திறன் அடிப்படையில் 14வது நிதிக்குழு, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய தணிக்கை குழு ஆகியவை ஒரு பொதுவான கருத்தை முன்வைத்துள்ளது. 2016- 2021 கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் வருமானம் உற்பத்தியில் 10 சதவீதமாக இருந்தது. 6.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. திமுக தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் 11.5 சதவீதமாக இருந்த வருமானம் தற்போதைய காலகட்டத்தில் 7.5 சதவீதமாக குறைந்துவிட்டது. கொரோனா காலத்தில் 6.5 சதவீதமாக குறைந்துவிட்டது. சுமார் 70,000 முதல் 80 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வர வேண்டி உள்ளது. இது குறித்து விரிவாக வெள்ளை அறிக்கையில் வெளியிடப்படும். எந்தெந்த துறைகளில் இருந்து எவ்வளவு தரவேண்டும் என்பது அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படுவது அல்ல.நிதி ஆதாரங்களை திருத்துவதன் மூலம் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியும் உதாரணமாக 80,000 கோடி என்பது நிதிநிலையில் ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி துறை கல்வி ஆகிய மூன்று துறைகளுக்கும் சேர்த்து செய்யப்படும் செலவினம் ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த மூலதன செலவு ஒரு லட்சம் கோடி கூட செலவிடவில்லை அதாவது வருடத்திற்கு இருபத்தி ஐந்தாயிரம் கோடி கூட செலவிடவில்லை. நல்லாட்சியின் அடையாளம் என்பது உற்பத்தியில் 3 சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் .ஆனால் ,கடந்த வருடம் உற்பத்தியில் 1.5 சதவீதம் கூட செய்யவில்லை. அதனால் கூடுதலாக 30 ஆயிரம் கோடி முதல் 40,000 கோடி வரை மூலதன செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இதுவரைக்கும் செய்ததைவிட இரண்டு மடங்கு செய்ய வேண்டும் கூடுதல் சாலை, விவசாயம், குடிநீர் துறைமுகங்கள் விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் செய்திட வேண்டும். இதனை செய்தால்தான், வளர்ச்சியில் தெளிவான பாதையில் செல்ல முடியும். முதலமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கிறார். இந்தியாவிலேயே ஏன் தென் கிழக்கு ஆசியாவிலேயே மூலதனம் செய்யக் கூடிய இடமாக தமிழ்நாடு திகழவேண்டும். உலக அளவில் மனித வளம் மிகுந்த மாநிலமாக இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்கள் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களாக மாற்றும் வகையில் அந்த அளவில் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் என்பது இலக்கு. இதற்காக பல அடிப்படைத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் அத்தகைய திருத்தங்களை கொண்டு வர தயாராக இருக்கிறோம் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். உலகத்திலேயே சிறந்த பொருளாதார நிபுணர்கள் வைத்து அமைக்கப்பட்ட குழு கூட்டத்தில் இதனை முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதற்கெல்லாம் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் மிகவும் முக்கியமானவை மூலதன செலவை இரண்டு மடங்கு ஆக்கிட வேண்டும் அதற்கு நிதி எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வரக்கூடிய வருமானத்திற்கு சரியான முறையில் சரியான நேரத்தில் செயல்களுடன் அவை செலவிடப்பட வேண்டும் .அந்த அடிப்படையில் துறையின் அமைச்சர் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. எங்கள் கட்சியில் இயக்கத்தின் சரியான செயல் வீரராக இருக்கக் கூடியவர் சரியான விஷயங்களை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பவர்.
அவரின் சீரிய மேலாண்மையில், இந்தத் துறை இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நிதி துறையின் சார்பில் செய்ய வேண்டியவைகளை செய்வோம் எனக் கூறினார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.

Published

on

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:

மதுரை:

மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோயில்கள்:
மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

LatestNews

பஸ்ஸில் கொரோனா விழிப்புணர்வு:

Published

on

திருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்
அனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

LatestNews

சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:

Published

on

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:

சோழவந்தான்:

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.
சிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
வணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா!

ஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஓலா வின் எலக்ட்ரிக் பைக்! முன்பதிவு ரூ.499 மட்டுமே!

ஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]

நாளை மின்தடை! உங்க பகுதி இருக்கா..?

சென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]

செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்!

குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: