பிரியாணிக் கடைக்கு சீல்:

*மதுரையில் ஐந்து பைசா பிரியாணி கடைக்கு சீல்*

*மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை*

மதுரை:

மதுரையில் 5 பைசாவிற்கு பிரியாணி வழங்கியதால், கூட்ட நெரிசலை ஏற்படுத்திய கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரை செல்லூர் பகுதியில் புதியதாக திறந்த பிரியாணி கடை ஒன்று கடையை பிரபல படுத்தும் நோக்கோடு 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்வதாக கூறி விளம்பரம் செய்யப்பட்டது. உரிய கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பிரியாணி விற்பனை செய்ததால் கடை முன் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் – மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவு மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: