மதுரை நகர குற்றச் செய்திகள்:

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில்
மதுகுடிக்கும்போது தகராறு
ஆட்டோடிரைவரை தாக்கிய வாலிபர் கைது:

மதுரை.ஜூலை21.

மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் காளிமுத்து.
இவர், ஆட்டோ ஓட்டிவருகிறார்.இவரும் ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரத்தை சேர்ந்த பெருமாள் 35. என்பவரும்சேர்ந்து மது அருந்தியபோது, தகராறு ஏற்பட்டது.
இதில், ஆறுமுகத்தை பெருமாள் தாக்கிவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து பெருமாளை கைது செய்தனர்.

மதுரை சிறுமிக்கு திருமணம்
குழந்தை பிறந்தபின்பு வழக்குப்பதிவு:
போலீஸ் விசாரணை:

மதுரை ஜூலை21.

மதுரை செல்லூர் பண்டிட்ஜிநேருநகரைசேர்தநவர் மதுரை வீரன்26.இவர் ஒரு வருடத்திற்குமுன்பு பதினேழுவயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.
சிறுமிக்கும் ஆண் குழந்தை பிறந்தது.அதன் பின்னர், சிறுமி திருமணம் வெளியே தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மதுரை மேற்கு யூனியன் சமூகநல அலுவலர் சாந்தி இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.பின்னர், இது தொடர்பாக ,தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்கு ப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை முனிச்சாலையில்
கணவர் தாக்கி மனைவி இறந்தாரா
போலீஸ் விசாரணை:

மதுரை ஜூலை21:

மதுரை முனிச்சாலையில் கணவர் தாக்கி மனைவி இறந்தாரா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முனிச்சாலை கான்பாளையம் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மனைவி சண்முகப்பிரியா 22. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ,பெண்குழந்தை ஒன்று உள்ளது.கணவர் பிரான்சிஸ்க்கு குடிப்பழக்கம் உள்ளது.கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்.
இதனால், கணவர் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் வந்த பிரான்சிஸ் மனைவி‌ சண்முகப் பிரியாவை பலமாகத் தாக்கியுள்ளார்.பின்னர், உடல்நலக்குறைவு ஏற்பட்டநிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சையில்இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து, தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நணத்தி வருகின்றனர்.

விபத்தில் பாதிப்பு
மூதாட்டி விஷம்குடித்து தற்கொலை:

மதுரை, ஜூலை.21:

மதுரை
திருநகர் பாண்டியன்நகரைச்சேர்ந்தவர் மீனா 62.இவருக்கு ஒருவருடத்தின்கு முன்பு நடந்த விபத்துகாரணமாக தொடர்ந்து வயிற்றுவலி,கால்வலி இருந்தது.இதனால், வலி தாங்கமுடியாமல், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக உரிரிழந்தார்.
இது குறித்து, திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மேலவாசலில்
தீராத வயிற்றுவலியால்
சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை:

மதுரை. ஜூலை,21:

மதுரை மேலவாசல் வீட்டு வசதிவாரிய குடியிருப்பைச்சேர்ந்தவர்பாலமுருகன் மகள் ஹரிஜோதி16.இவர் தொடர்ந்து வயிற்றுவலியால் அவதிபட்டுவந்தார்.அதற்கான சிகிச்சையும்பெற்றுவந்தார் .ஆனால் வலி நிற்கவில்லை.
இதனால், மனமுடைந்து வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: