கிராமத்தில் ரேசன் கடை முற்றுகை

ரேசன் பொருளை முறையாக வழங்கக் கோரி கிராம மக்கள் முற்றுகை: பரபரப்பு

மதுரை

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கம்பூர் ஊராட்சிக்குட்பட்ட அய்வைத்தான் பட்டி கிராம மக்கள் ரேஷன் பொருட்களை உரிய நாளில் எடை குறைவின்றி வழங்கக் கோரி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இங்குள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறித்த காலத்தில் பொருட்களை வழங்காமல், கடைக்காரர் அலைகழிப்பு செய்வதாக பேசப்படுகிறது. மேலும் மாதத்தின் முதல் வாரத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை மாத கடைசியில் வழங்குவதாக, அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: