Connect with us

LatestNews

திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற ்று: முன்னாள் அமைச்சர் உதயக்குமார்.

Published

on

பெட்ரோல் விலையை குறைப்போம் என, தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதி: என்னவாயிற்று, முன்னாள் அமைச்சர் கேள்வி:

மதுரை

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் அதிகாரத்தில் அரசு உள்ளது.
விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது தயக்கம் ஏன், என
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் அதிகாரத்தில் அரசு உள்ளது விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது தயக்கம் ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் ,திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்
இந்த கூட்டதிற்கு, முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார்
இந்த கூட்டத்தில்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ,மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், வக்கீல் தமிழ்ச்செல்வன், வேலுச்சாமி, போத்திராஜா,
ஜஹாங்கீர், சிங்கராஜ பாண்டியன், சரவணபாண்டியன், ராமகிருஷ்ணன்,பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி,கொரியர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர் பி உதயகுமார் பேசியதாவது.
உலக அளவில் தடுப்பூசிக்கு, டெண்டர் விட்டு இதன் மூலம் கோடிக்கணக்கில் தடுப்பூசி பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால், மக்களுக்கு ஏமாற்றத்தை அரசு தந்தனர். அதேபோல், நீட் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். தற்போது, தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை தந்து உள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்று 7.5 சதவீத இட ஒதுக்கீடை எடப்பாடியார் செய்தார்.
இதன் மூலம் 435 மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்கின்றனர்
அம்மாவின் அரசை அடிமை அரசு என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் விமர்சனம் செய்தார். ஆனால், இதே காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாட்கள் முடக்கினர். அதனைத் தொடர்ந்து, மத்திய அரசை வலியுறுத்தி காவிரி ஆணையத்தை எடப்பாடியார் பெற்றுத்தந்தார். தோழமை கூட்டணியாக இருந்தாலும், தமிழகத்தின் உரிமைகளை என்றைக்கும் விட்டுக் கொடுத்ததில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும், அரசு ஒரு லிட்டர்பெட்ரோல், டீசல்வரியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பீகாரை எடுத்துக்கொண்டால், ஒரு லிட்டருக்கு பெட்ரோல்க்கு 24.71 சதவீதமும், டீசலுக்கு 18.34 சதவீதமும், டில்லியில் பெட்ரோலுக்கு 27 சதவீதமும் டீசலுக்கு 17.24 சதவீதமும் கோவாவில் பெட்ரோலுக்கு 16.66 சதவீதமும்,டீசலுக்கு 18.88 சதவீதமும், குஜராத்தில் 25.45 சதவீதமும், டீசலுக்கு 25.55 சதவீதம், மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோலுக்கு 25.25 சதவீதமும் டீசலுக்கு 17.54 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் பெட்ரோலுக்கு 26.90 சதவீதமும், டீசலுக்கு 16.84 சகவீதமும், உத்தரகாண்டில் பெட்ரோலுக்கு 27.15 சதவீதமும், டீசலுக்கு 16.82 சதவீதமும்வரி விதிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் பெட்ரோலுக்கு 32.16 சகவிதமும் டீசலுக்கு 24.08சகவீதமும் விதிக்கப்படுகிறது. இதன் மூலம், பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு 27.75 ரூபாயும் டீசலுக்கு 20.35 ரூபாயும் அரசுக்கு கிடைக்கிறது.
திமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும்,
டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தற்போது, 75 நாட்களாகயும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப் படவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைக்கும் அதிகாரத்தில் அரசு உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் விலையை அரசு குறைக்க வேண்டும். இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்
ஜெயலலிதா அம்மா
கைத்தறி தொழிலாளர்களுக்கு ,
200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார்கள். அதேபோல், விசைத்தறி தொழிலாளர்களுக்கும் இலவசமாக 750 யூனிட் மின்சாரம் வழங்கினார்கள். இதன் மூலம், 1,20,968 கைத்தறி தொழிலாளர்களும், அதேபோல், 1,06,432விசைத்தறி தொழிலாளர்கள் பயன் பெற்று வந்தார்கள். தற்போது, இந்த இலவச மின்சாரத் திட்டத்தை அரசு தொடந்து வழங்கிட வேண்டும்.
தடுப்பூசியில், வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் கூறியுள்ளார்.
இதை விட அரசுக்கு தயக்கம் ஏன். ஆனால், எங்கள் மீது பழி சுமத்தும் வண்ணம் தடுப்பு ஊசி அதிமுக ஆட்சியில் வீணடிக்க பட்டதாக கூறுகின்றனர். அப்போது தடுப்பூசி போடுதல் மக்களிடத்தில் விழிப்புணர்வு குறைவாக இருந்தது. மேலும், தடுப்பூசி போடுவதால், உயிர்பலி ஏற்படும் என்று மக்கள் மத்தியில் சிலர் அச்சத்தை பரப்பி விட்டனர்.
தற்போது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே, எங்கள் மீது பழி சுமத்தாமல், தடுப்பூசியில், வெள்ளை அறிக்கை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

பஸ்ஸில் கொரோனா விழிப்புணர்வு:

Published

on

திருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்
அனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

LatestNews

சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:

Published

on

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:

சோழவந்தான்:

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.
சிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
வணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

LatestNews

பார்வையற்றோர்களுக்கு அரிசி வழங்கும் விழ ா:

Published

on

பாரதி யுவகேந்திரா சார்பில் பார்வையற்றோர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி:

மதுரை:

மதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில், பார்வையற்றோருக்கு
மாதா மாதம் வழங்கப்படும், ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி மற்றும் போர்வை வழங்கும் நிகழ்ச்சி, மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதி ஹோட்டல் பிரேம் நிவாஸ் அரங்கில் நடந்தது. மதுரையின் அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, ரோட்டரி உதவி ஆளுநர் வி. கார்மேகம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், மதுரை ஊரக வளர்ச்சி துறை முன்னாள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரின் முன்னாள் நேர்முக உதவியாளர் சுப்பு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை முன்னிலை வகித்து, பார்வையற்றோருக்கு அரிசி மற்றும் போர்வை வழங்கினர். நிகழ்ச்சியில், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரபு கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா!

ஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஓலா வின் எலக்ட்ரிக் பைக்! முன்பதிவு ரூ.499 மட்டுமே!

ஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]

நாளை மின்தடை! உங்க பகுதி இருக்கா..?

சென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]

செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்!

குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: