Connect with us

LatestNews

மதுரை நகரில் நடந்தவைகள்:

Published

on

வாகனம் நிறுத்துவதில் முன்விரோதம் :
வக்கீல் அலுவலகம் புகுந்து தாக்குதல்
போலீஸ் விசாரணை :

மதுரை ,ஜூலை .18:

வாகன நிறுத்துவதில் இருந்த முன்விரோதம் காரணமாக வக்கீல் அலுவலகம் புகுந்து தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வடக்கு வெளி வீதியை சேர்ந்தவர் வக்கீல் மணிவேல்.
அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர்களுக்குள், வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இதைத் தொடர்ந்து ,
சதீஷ்குமார் ,வக்கீலின் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்கி உள்ளார். இது தொடர்பாக மணிவேல் கொடுத்த புகாரின் பேரில், திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடல் புதூரில்
வீடு கட்டுவதில் தகராறு:
ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 4 பேர் கைது :

மதுரை ஜூலை 18 :

வீடு
கட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை விஸ்வநாதபுரம் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் காளிராஜ் 65. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .
அதே முகவரியில் பெயிண்ட் கடையும் நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவருக்கும் வீடு கட்டுவது தொடர்பாக கருத்து வேறுபாடும் முன்விரோதமும் இருந்து வந்துள்ளது. இதனால், செல்லபாண்டியனும் மேலும் சிலரும் காளிராஜின் கடைக்குள் புகுந்து டியூப்லைட்டுகளை உடைத்து, கத்தியால் அவரை தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக, காளிராஜ், கூடல்புதூர் போலீசில் புகார் செய்யதார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாகைக்குளத்தை
சேர்ந்த செல்லப்பாண்டி 23 , அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற கமல்19, சரவணன் 18, ராஜா 22 .ஆகியோரை கைது செய்தனர்.

திருமண ஆசைகாட்டி
பியூட்டி பார்லர் பெண பலாத்காரம் 10 லட்சம் மோசடி :
போலீஸ் விசாரணை :

மதுரை ஜூலை 18 :

திருமண ஆசை காட்டி பியூட்டி பார்லர் பெண்ணிடம் பலாத்காரமாக நடந்து கொண்டு 10 லட்சம் மோசடி செய்த புகாரில், 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாராயணபுரம் தேவர் காலனி புது நத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா என்ற ரங்கநாயகி 32. இவர், நாராயணபுரத்தில் பியூட்டி பார்லர் மணமக்கள் அலங்கார நிலையமும் ஸ்டுடியோவும் நடத்தி வருகிறார்.
இங்கு , ராஜேந்திரபிரசாத், ராஜா ராம் பிரசாத் ,உமா மகேஸ்வரி ஆகியோர் வேலை செய்தனர் .
ராஜேந்திர பிரசாத்தும், ஹேமலதாவும்வும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஹேமலதாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய ராஜேந்திர பிரசாத் பலமுறை அவரை பலவந்தமாக கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், அவரிடம் ரூபாய் 10 லட்சமும் ,4 பவுன் நகை, மேக்கப் கிட், லேப்டாப், பாஸ்போர்ட்முதலியவைகளை பறிமுதல் செய்து வைத்துள்ளார்.
இதை திருப்பி கேட்டதால் ,அவற்றை தரமறுத்து அவரின் புகைப்படங்களை ஆபாசமாக சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக , அவர் கொடுத்த புகாரில், தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திர பிரசாத் ,ராஜா ராம் பிரசாத் ,உமா மகேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புற்று
நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தீக்குளித்து தற்கொலை :

மதுரை ஜூலை 18 :

புற்று
நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாப்பா 80. இவர் கடந்த இரண்டு வருடமாக புற்று நோயால்,
அவதிப்பட்டு வந்தார்.
இதனால், மனமுடைந்து வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
தீக்காயங்களுடன், உயிருக்கு போராடியவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ,அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து, சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த பெண்ணை
பெற்றோர் புறக்கணித்ததால்
விஷம் குடித்து தற்கொலை:

மதுரை .ஜூலை.18:

காதல் திருமணம் செய்த பெண்ணை பெற்றோர் புறக்கணித்ததால் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை ஊமச்சிகுளம் திருமால்புரத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வி 24. இவர் ,செல்வகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், இவர்கள் தனியாக வசித்து வந்தனர்.
இதனால், தாமரைச்செல்வியின் பொற்றோர் அவரை புறக்கணித்து வந்தனர்.
தங்கையின் திருமணத்திற்கும் அவரை அழைக்கவில்லை.
இதனால் ,மனமுடைந்த தாமரைச் செல்வி வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.
அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனில்லாமல், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது
குறித்து, திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்
மகாத்மா சர்வோதயா இயக்கம் கோரிக்கை:

மதுரை ஜூலை18:

அரசுப்பள்ளிமாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று மாத்மா சர்வோதயா இயக்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்‌.
மதுரை மகாத்மா சர்வோதயா இயக்கச் செயலாளர் காந்தியவாதி மதுரைவீரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் காமராஜர் கட்டிய அணைகளை குடிமராமத்து வாயிலாக தூர்வாரி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக அரசு பள்ளிகளில், காமராஜர் மதிய உணவுத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படவேண்டும்.
தனியார் கட்டுப்பாட்டில் உள்ள முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தை அரசு நேரடியாக ஏற்று நடத்தவேண்டும்.
சமூகநலத்துறை வாயிலாக நான்கு ஆண்டுகள் நிலுவையில் உள்ள திருமண உதவித்தொகை,
இருபெண் குழந்தைகள் திட்டத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும்.
தமிழக அரசு காலிப் பணியிடங்களில், அரசுப்பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தமாணவ மாணவிகள் நியமனம் செய்யப்படவேண்டும்.ஜூலை பதினைந்தாம் தேதி கல்வி வளர்ச்சிநாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் .
இவ்வாறு கூறிஉள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.

Published

on

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:

மதுரை:

மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோயில்கள்:
மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

LatestNews

பஸ்ஸில் கொரோனா விழிப்புணர்வு:

Published

on

திருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்
அனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

LatestNews

சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:

Published

on

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:

சோழவந்தான்:

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.
சிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
வணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா!

ஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஓலா வின் எலக்ட்ரிக் பைக்! முன்பதிவு ரூ.499 மட்டுமே!

ஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]

நாளை மின்தடை! உங்க பகுதி இருக்கா..?

சென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]

செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்!

குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: