தென்கரையில் கொரோனா:

தென்கரையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தெரு அடைக்கப்பட்டது

சோழவந்தான், ஜூலை. 27.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், தெரு அடைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தென்கரை அக்ரஹாரத்தில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தியாகராசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவரது குடும்பத்தில் மூன்று பேருக்கும் இத் தொற்றானது பரவியதாம்.
இதனால், தென்கரை ஊராட்சி நிர்வாகமும், மருத்துவக் குழுவினரும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, தெருவை தடுப்புகள் கொண்டு அடைத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: