கல்குவாரியில் குளிக்க சென்ற சிறுமி பலி…

மேலூர் அருகே கிரானைட் கல்குவாரியில் குளிக்கச் சென்ற 7ம் வகுப்பு சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு …

மேலூர் :

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பூதமங்கலத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, இவருடைய 14 வயது மகளான ரக்சனா மேலூரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், கீழவளவு அருகேயுள்ள தனது பெரியப்பாவான முருகேசன் என்பவரது வீட்டிற்கு விடுமுறைக்காக சென்ற நிலையில், அங்கு தனது சித்தி முருகேஸ்வரியுடன் அப்பகுதியில் உள்ள கிரானைட் கல்குவாரி பள்ளத்தில் குளிக்கச் சென்றப்போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் சிறுமியின் உடலை மீட்ட நிலையில் இதுகுறித்து , கீழவளவு காவல் த்துறை சார்பு ஆய்வாளர் முருகராஜா வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: