பென்சனர் நேர்காணல் ஒத்திவைப்பு:

ஓய்வூதியர்கள் நேர்காணல் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு:

மதுரை

தமிழ்நாடு அரசு கருவூலகங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மூலமாக ஓய்வூதியம் பெறும் அரசு ஓய்வூதியர்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேர்காணல் நடைபெற்று கொண்டிருந்தது,ஆனால் , கடந்த வருடம் (Covid-19) வைரஸ் தொற்று முதல் அலையின் காரணமாக ஜூலை 2021 முதல் ஆகஸ்ட் 2021 மாதம் நேர்காணல் நடைபெற இருந்தது,மீண்டும் (Covid-19) ரைவஸ் தொற்று இரண்டாவது அலையின் காரணமாக நேர்காணலுக்கு ஓய்வூதியர்கள் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் மதுரை மாவட்ட க் கருவூலம் மற்றும் இதர சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் அனைத்து தமிழக அரசு ஒய்வூதியர்களும் இந்த ஆண்டிற்கான நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாகவும் மேலும்,அடுத்த நடைபெறும்(ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர்) 2022-ம் ஆண்டில் ஆஜரானால் போதுமானது என, மதுரை மாவட்ட கருவூலம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: