LatestNews
வாறுகால்: அமைச்சர் ஆய்வு
சிவகாசி கவிதா நகரில்
ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் வாறுகால்
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் ஆய்வு
சிவகாசி, ஜூலை. 27; சிவகாசி அருகே கவிதா நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள வாறுகால் பகுதியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி-சித்துராஜபுரம் ஊராட்சியுடன் இணைக்கும் கவிதாநகர் உள்ளது. இந்த கவிதா நகரில் சுமார் 700 மீட்டர் தூரம் வாறுகால் செல்கின்றது. இந்த வாறுகால் முறையாக பராமரிப்பு இல்லாததாலும் வாறுகால் கட்டப்படாததாலும் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து கவிதா நகர் ஓடையில் அதிகாரிகளுடன் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். 700 மீட்டர் தூரம் உள்ள இந்த கழுவுநீர் செல்லும் பாதையில் வாறுகால் அமைக்க சுமார் ஒன்றறை கோடி செலவாகும் என்று திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. வாறுகால் கட்ட உரிய அனுமதி வாங்கியவுடன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆய்வின் போது சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராமமூர்த்தி, நவாஸ். தொழில் அதிபர் காளீஸ்வரி குரூப் செல்வராஜன், விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், ஏ.ஆர்.டி குரூப் ஜெயராஜ், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் பலராம், புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், திருத்தங்கல் நகரக் கழகச் செயலாளர் பொன்சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் நல்லதம்பி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், மாவட்ட சிறுபாண்மையினர் அணி செயலாளர் சையதுசுல்தான்இப்ராஹீம், சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளர் சங்கர், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், வெம்பக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலம், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், பாலாஜி , நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமிபாணடியன், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் மற்றும் அரசு அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
படம விளக்கம், சிவகாசி அருகே கவிதா நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கப்பட உள்ள பகுதியை பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
LatestNews
லாரிகள் சிறை பிடிப்பு…

திருமங்கலம் சுங்கச்சாவடியில் 3 லாரிகள் சிறைபிடிப்பு
சுங்கச்சாவடி யினர் அட்டூழியம்
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் 3 லாரிகளை சுங்கச்சாவடியினர் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் அருகே 800 மீட்டர் தொலைவில் கப்பலூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.விதிகளுக்கு புறம்பாக இந்த சுங்கச்சாவடி அமைந்துள்ளதாக ஐந்து வருடங்களுக்கும் மேலாக கப்பலூர் தொழிற்பேட்டையைச் சேர்ந்தவர்களும்,திருமங்கலம் பகுதி மக்களும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தனியார் கோதுமை மாவு தொழிற்சாலைக்கு சென்ற மூன்று லாரிகளை சுங்கச்சாவடியினர் சிறை பிடித்தனர்.
சுங்க கட்டணம் செலுத்தாமல் லாரிகளை விட முடியாது என்று சுங்கச்சாவடியினர் கூறியுள்ளனர்.உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று திருமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சென்று வந்தது.
இந்நிலையில் சுங்கச்சாவடிக்கு புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டதால் இதுகுறித்து தெரியாதவர்கள் உள்ளூர் வாகனங்களை கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்தி வருகின்றனர்.இதனால் தினந்தோறும் சுங்கச்சாவடியில் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உண்டாவது தொடர்கதையாகி வருகிறது.
கோதுமை மாவு தொழிற்சாலையினர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தங்கள் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று இடைக்கால தடை வாங்கி உள்ளனர்.இந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது என்றும் அதனால் தங்கள் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தொழிற்சாலை சார்பாக வாதிட்டனர்.கப்பலூர் தொழில் அதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா சுங்கச்சாவடி க்கு சென்று சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களின் வாகனங்களும் இதேபோல நெருக்கடிக்கு ஆளாவதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
தகவல் கிடைத்து திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டர் சிவசக்தி போலீசாருடன் சென்று இரு தரப்பினரையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றார்.திருமங்கலம் பகுதி மக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
LatestNews
தமிழகத்தில் மீண்டும் அதிமுக…பாஜக ஆட்சி… முருகன்
*பெண்களிள் ஓட்டு அதிகமாக பதிவாகிருப்பதால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக – பாஜக ஆட்சி அமையும் என மதுரை விமானநிலையத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி:
மதுரை
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிகளவில் பாஜகவில் இணைவதினால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலை சிறுத்தையினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்,டாக்டர். அம்பேத்கர் உலக தலைவர் எனவும் அவரை ஒரு ஜாதிய வட்டாரதிற்குள் அடைக்கக்கூடாது எனவும் கூறினார்..!
*கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் போதிய ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத நிலையில், பிரதமரின் நிவாரண நிதி எங்கே என்ற ராகுல் காந்தி கேள்விக்கு*
ராகுல்காந்திக்கு கேள்வி கேட்பதை தவிர்த்து வேறென்ன தெரியும் என கேள்வி எழுப்பிய முருகன், எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டுமே தவிர கேள்விகள் மட்டும் கேட்க கூடாது என விமர்சனம் செய்தார்.!
*தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என கேள்விக்கு*
இந்த சட்டமன்ற தேர்தலில் பெண்களில் ஓட்டு அதிகளவில் பதிவாகியிருப்பதாகவும், பொதுவாக பெண்களின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என்றும், எனவே இந்த தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறினார்.
LatestNews
மீன்பிடி திருவிழா..

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா:
சோழவந்தான்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது. இதில் 5 மாவட்டத்தை சேர்ந்த மீன் பிடி வீரர்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து சென்றனர். இங்கு உள்ள முதலைக்குளம் கருப்பு கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் அருகே முதலை குளம் கண்மாய் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது இங்கு உள்ள கருப்பு கோவில் வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிய பின்னர் கண்மாயில் மீன் குஞ்சுகளை விட்டுச் செல்வது வழக்கம் .இந்தக் கண்மாய் ஏலம் விடுவது இல்லை. வருடந்தோறும் ஐந்து மாவட்டங்களில் நடைபெறும் சந்தைகளில் தாம்பூலம் மாற்றிபின்பு முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெறும் என்று அறிவிப்பார்கள்
இந்த அறிவிப்பினை ஏற்று வெளி ஊர்களில் இருந்து மீன் பிடி வீரர்கள் முதல் நாள் இரவே கோவிலில் தங்கி இருப்பார்கள். இவர்களுக்கு உணவு மற்றும் கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்வது வழக்கம் இதேபோல் இந்த ஆண்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பேரில் திருச்சி, விருதுநகர் ,தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து நேற்று இரவே கருப்பு கோவிலுக்கு வந்திருந்தனர் இவர்களுக்கு உணவு ஏற்பாடு வழங்கப்பட்டு கலை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருந்தனர் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் இங்குள்ள கருப்புசாமி கோவிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பூஜைகள் நடைபெற்ற பின்னர் மூன்று வெடிகள் விடப்படும். முதல் வெடி விட்டவுடன் மீன் பிடி வீரர்கள் தயாராக இருந்தனர். இரண்டாவது வெடி விட்டவுடன் வலைகளை எடுத்து தயாராக இருந்தனர் . மூன்றாவது வெடி விட்டவுடன் கண்மாய்க்குள் மீன் பிடி வீரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினார்கள். இதை ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கொடி பாண்டி தொடங்கி வைத்தார்
இதுகுறித்து பெரியார் பாசன கூட்டமைப்பு தலைவர் எம்பி இராமன் கூறுகையில் கருப்பு கோயில் அருகே கண்மாய் உள்ளது மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் இது ஒன்று இக்கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக கண்மாயில் குஞ்சுகளை விட்டுச் செல்வது வழக்கம் .இதை பாதுகாத்து வளர்த்து வருடந்தோறும் மீன்பிடித் திருவிழா நடத்தி வருகிறோம். இத்திருவிழாவை 5 மாவட்டத்திற்கு தெரிவிப்போம் இதன்படி முதல் நாள் இரவே வந்துவிடுவார்கள் அவர்களுக்கு உணவு தங்கும் வசதி மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொடுப்போம். இந்த ஆண்டு ஒரு மீன் சுமார் 5 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த மீன் சாப்பிடுபவர்கள் நோய் குணமடைவதாக எங்களது முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்தக் கண்மாய் ஏலம் விடுவது இல்லை .ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்வது யாராக இருந்தாலும் கருப்புசாமி யால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்
செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள்
வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் ஆகியோர் கூறும்பொழுது முதலக்குலம் கண்மாயில் மீன்பிடி திருவிழா எங்களது கிராமத்தில் டம் டம் மூலம் தெரிவிப்பார்கள் இந்த அறிவிப்பின் பேரில் நாங்கள் முதலைக்குளம் கிராமத்தில் இரவே வந்து தங்கி இருந்து கருப்பு சாமி கும்பிட்டு முறைப்படி கமண்மாயில் இறங்குவோம் எங்களுக்கு கிடைக்கக்கூடிய மீன்களை கடவுள் கொடுத்ததாக நினைத்து சமைத்து சாப்பிடுவோம். இதனால் எங்களுக்கு நோய்கள் குணமாகிறது நாங்கள் மட்டுமல்ல இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த மக்களும் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் இங்கு வந்து மீன் பிடித்து செல்கின்றனர். என்று தெரிவித்தனர்