சிபிஐ அதிகாரிக்கு கொரோனா:

மேலும் ஒரு சி.பி.ஐ.
அதிகாரிக்கு கொரோனா

கொரோனா பாதித்த அதிகாரி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

மதுரை :

*சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் சிபிஐ அதிகாரிகள் மேலும் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி*

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரணை செய்வதற்காக டெல்லியிலிருந்து 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் கடந்த 10ஆம் தேதி வருகை புரிந்தனர்

மதுரை மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளில் ஏற்கனவே இரண்டு பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே
4 அதிகாரிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அனில்குமார் என்ற சி.பி.ஐ அதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்து வரும் 5 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிறப்பு காவல் ஆய்வாளர் பால் துரைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் மதுரை கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: