Connect with us

LatestNews

வணிகம் பாதிப்பு…வணிகர்கள் கண்ணீர்..

Published

on

கொரோனவால் வணிகம் பாதிப்பு வியாபாரிகள் அவதி:

சோழவந்தான்,மே.16.

கொரோனா நோய் கட்டுப்பாடு
உடன் முழு ஊரடங்கு உத்தரவு அரசு பிறப்பித்துள்ளது.இதன் காரணமாக சிறுவணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஊர்அடங்கால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதில் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் வாங்கி வைத்த பொருள்கள் விற்பனை செய்ய முடியாமல் சேதம் அடைந்தது.
இதனால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்நிலையில் , இருந்து தற்போது கொஞ்சம் நிலைமை மாறி வியாபாரம் தொடங்கி ஒரளவுக்கு பழைய நிலைமைக்கு மாறி வருகின்ற நிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு உத்தரவால் வியாபாரிகள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.சிறு வணிகர் மீண்டும் கடன்களை வாங்கி சரக்குகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவால் வாங்கிய கடனைக் கூட அடக்க முடியாத அவல நிலையில் உள்ளனர். தமிழக அரசு சிறு வணிகர்கள் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து சிறு வணிகர் ரமேஷ் கூறியதாவது:
நான் சிறு வணிகம் செய்து வருகிறேன் என்னைப் போன்ற சிலர் இதுபோன்ற சிறு வணிகம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் நாங்கள் இங்கு உள்ள கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறுவணிக கடன் பெற்று தொழில் நடத்தி வருகிறோம்.நாங்கள் தொழில் நடத்தக்கூடிய கடையும் வாடகை கடை,குடியிருக்க கூடிய வீடும் வாடகை வீடு.இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனாநோய் காரணமாக அரசு ஊரடங்கு பிறப்பித்தது.வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாத நிலையில் இருந்தோம் அரசு தவணைகளை ஆறு மாதம் கழித்து கட்டலாம் என்று அறிவித்தது.
இதன் பேரில், கட்டுப்பாடு முடிந்தவுடன் மீண்டும் தொழிலை ஆரம்பித்து தொழில் பழைய முறையில் நடக்க ஆரம்பித்தவுடன் இதில் கிடைக்கக்கூடிய வருவாயைக் கொண்டு வீட்டுக்கு செலவும்,வீட்டு வாடகையும்,கடை வாடகை, தொழிலுக்கு வாங்கிய கடனையும் சிறுகச்சிறுக அடைத்து வந்தோம்.தற்போது கொரானா தொற்று நோய் பரவல் காரணமாக அரசு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாத அவல நிலையில் உள்ளோம்.அரசு பல் வேறு துறைக்கு கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. இதில் பல்வேறு மக்கள்,பல்வேறு விவசாயத்திற்கு தள்ளுபடி பெற்றுள்ளனர்.இது சுமார் 12 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது
.சிறு வணிக கடன் அதிகபட்சம் ஆயிரம் கோடி கூட இருக்காது. அரசு வியாபாரிகள் மீது கருணை உள்ளம் கொண்டு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் சிறு வியாபாரிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்து மற்றும் வீடுவாடகை,கடைவாடகை,மின்சார கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று மன வேதனையுடன் கேட்டுக்கொண்டார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

சடலம் அருகே வசித்த வந்த மனநலம் பாதிக்கப் பட்ட பெண்…

Published

on

சகோதரன் உயிரிழந்தது தெரியாமல் துர்நாற்றத்துடன் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி:

மதுரை:

மதுரை முனியாண்டிபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயச்சந்திரன் (65) என்பவருடன் அவரது சகோதரி சுப்புலட்சுமி (55) தனியாக வீட்டில் வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில், அண்ணன் வழுக்கிவிழுந்து உயிரிழந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி தன் அண்ணன் தூங்குவதாக நினைத்து.
அண்ணனின் உடல் மேல் ஏறி நின்றபடி சமையல் செய்து வாழ்ந்து வருகிறார்.
இறந்தவர் உடல் அழுகியதால், கால்கள் உடல் பகுதியில் சிக்கியதால் சேதமடைந்த இருந்தது.
அவர் வீடு அருகே வசித்து வந்தவர்கள் உடலில் துர்நாற்றம் வீசியதையடுத்து, கதவை உடைத்து காவல்துறையினர் உடலை மீட்டு சுப்ரமணியபுரம் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

LatestNews

கிரைம் செய்திகள்..

Published

on

அவனியாபுரத்தில்
பைக் மோதி நடந்து சென்றவர் பலி :
மதுரை ஜூன் 17

மதுரை
மண்டேலா நகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் காஜா மைதீன் 50.ஆவர் மண்டேலாநகர் சந்திப்பில் சாலையை கடந்த போது, அந்த வழியாக சத்தியமங்கலத்தை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காஜாமைதீன் பலியானார் .
இந்த விபத்து குறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை முன்பு பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது :
பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்:

மதுரை.ஜூன்17.

மதுரை அருகே
திருப்பரங்குன்றம் கூடல் மலை தெருவை சேர்ந்தவர் சத்யா 28. இவர் அரசு மருத்துவமனை மெயின் கேட் அருகே சென்றபோது, கத்தி முனையில் மிரட்டி வாலிபர் ஒருவர் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டார்.
அப்போது, சத்யா கூச்சல் போடவே பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்தனர். .அந்த வாலிபரை தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரித்தபோது , அவர் சிவகங்கை மாவட்டம் பழையனேந்தலை சேர்ந்த பெரிய பாண்டி மகன் நாகராஜன் 26 என்று தெரிய வந்தது .அவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை செல்லூரில்
லோடுமேன் பூச்சி மருந்தை தின்று தற்கொலை
போலீஸ் விசாரணை:

மதுரை ஜூன் 17 :

மதுரை
செல்லூர் அருள்தாஸ்புரம் தேங்காய் கடை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 32. இவர் லோடுமேன் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்தது. தற்போது, லாக்டவுன் காரணமாக இவருக்கு வேலை இல்லை.
இதனால் , வருமானம் இன்றி சிரமப்பட்டார். இதன் காரணமாக, மனமுடைந்து பூச்சிமருந்தைதின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

LatestNews

கிணற்றில் மிதந்த ஆண் சடலம்..

Published

on

ராஜபாளையம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த, அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…..

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியில் இருந்து, சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் செல்லும் வழியில், தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் சடலமாக மிதந்தது. அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள், கிணற்றில் ஆண் சடலம் மிதப்பது குறித்து சேத்தூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் சடலமாக மிதந்த உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை யாரவது கொலை செய்து உடலை கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து, சேத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

மது போதையில் நடுச்சாலையில் மலைப்பாம்பைப் பிடித்து இளைஞர் நடனம்!

மது போதையில் பாம்பை தூக்கி சாலைக்கு கொண்டு வந்து நடனமாடினர், மது போதையில் நடுச்சாலையில் மலைப்பாம்பைப் பிடித்து இளைஞர் நடனம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

கஞ்சா விற்ற காதலர்கள்! போலிஸிடம் சிக்கிய சிட்டுக்கள்!

அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. கஞ்சா விற்ற காதலர்கள்! போலிஸிடம் சிக்கிய சிட்டுக்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆண் நண்பருடன் ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை கைது!

அந்த அறைக்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். ஆண் நண்பருடன் ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை கைது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஜாடிக்கேத்த மூடி: யூடியூப் மதன் மனைவி கைது!

கணவன் - மனைவியும் இணைந்தே யூடியூபில் சிறார்களை கெடுக்கும் ரீதியில் குற்றங்களை செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. ஜாடிக்கேத்த மூடி: யூடியூப் மதன் மனைவி கைது! முதலில் தினசரி… [...]

கொரோனா: இளம் நடிகர் உயிரிழப்பு!

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் கொரோனா: இளம் நடிகர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: