Connect with us

LatestNews

மதுரை கிரைம் செய்திகள்…

Published

on

மதுரை கரிமேட்டில்
தவறி விழுந்து கால் முறிவு வேதனையில் மூதாட்டி தற்கொலை மதுரை மே 5 தவறி விழுந்து கால் முறிந்த வேதனையில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல அண்ணாதோப்புபகுதியைசேர்ந்தவர்வசந்தா 68.இவர் இரண்டுமாதங்களுக்கு.முன்பு தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மனவேதனையில் இருந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மகன் செந்தில்குமார் கரிமேடுபோலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**************************
செல்லூர் பகுதியில்
மூச்சுத்திணறல்நோய் வந்த வாலிபர்
தூக்குபோட்டு தற்கொலை
மதுரை மே 5 மூச்சுத்திணறல் நோயால் அவதிப்பட்டு வந்த வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.செல்லூர் சிவகாமி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் 26 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதை தொடர்ந்து திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அண்ணன் ரமேஷ் குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*************************
எஸ் எஸ் காலனியில்
வீடு புகுந்து 2 லட்சம் திருட்டு போலீஸ் விசாரணை
மதுரை மே 5 எஸ் எஸ் காலனி பகுதியில் வீடுபுகுந்து ரூபாய் 2 லட்சம் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
எஸ் எஸ் காலனி நடராஜ் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 46.இவர் வீட்டில் இல்லாத போது பின் கதவை உடைத்து வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 2 லட்சத்தை திருடிச் சென்று விட்டார்‌ இந்த சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுஆசாமியை தேடி வருகின்றனர்.
**********************

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

ஐ.ஜி. பொறுப்பேற்பு…

Published

on

மதுரை தென் மண்டல ஐஜியாக பொறுப்பேற்றார், டி.எஸ். அன்பு.

Continue Reading

LatestNews

ஊராட்சி சார்பில் கபசுரகுடிநீர்…

Published

on

ஊராட்சி சார்பில் கபசுர குடிநீர்:

சோழவந்தான்,மே.17:

சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சி மன்றத்தின் சார்பாக கிராம பொது மக்களுக்கு கபசுரக்குடிநீர்,முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் ஆனந்தன் தலைமைதாங்கினார்.உதவித்தலைவர் பிரதாப், ஊராட்சிமன்ற செயலாளர் ரேவதி,கரும்புஅலுவலர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ட்ரை சைக்கிள் மூலம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு முககவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கினார்கள்.இதில் வார்டுஉறுப்பினர்கள் அங்கம்மாள்,பாஸ்கரன், செல்வராணி,சாந்தி,தெய்வராஜன்,செல்வி, வசந்தா,முத்துராஜ் உட்படஊராட்சிபணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,மகளிர் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

LatestNews

மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும்…

Published

on

எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு சவால்களை எதிர்கொண்டு மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும்:

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி:

மதுரை

எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு சவால்களை எதிர்கொண்டு மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டியளித்தார்
கழக அம்மா பேரவை சார்பில் தொடர்ந்து இரண்டு நாளாக திருமங்கலம் தொகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
தற்பொழுது லட்சத்தீவில் தென் கிழக்கு இந்திய கடலில் காற்று வலுவிழந்து டவ்டே புயல் இன்று புயல் கரையை கடக்கிறது
இதனால் 10 மாவட்டத்திற்கு இடி மின்னல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதில் திண்டுக்கல் தேனி கோவை நீலகிரி தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை இடி மின்னல் ஏற்படும் என்று கூறிப்பட்டுள்ளது
கடந்த காலத்தில் இது போன்ற பேரிடர் ஏற்படும் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொட்டும் மழையில் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக வந்து உரிய அறிவுரை வழங்குகினார்
அதேபோல் கஜா புயல் ஓக்கி போன்ற கடுமையான பேரிடர் காலங்களில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை
அதேபோல், மின்சாரத்தால் தாக்கியும் இடியால் தாக்கியும் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை ஆகவே இதையெல்லாம் முன்மாதிரியாக வைத்துக் கண்டு
அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
குறிப்பாக தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்த அவர்களை உரிய நிவாரண முகாமுக்கு மாற்றிட வேண்டும் அதேபோல் நிவாரண முகாம்களில் தற்போது கோவியட் காலம் இருப்பதால் சமூக இடைவெளியை கடை பிடித்து கிருமி நாசினி மருத்துவ பாதுகாப்பு வழங்கி அவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் சுகாதாரமான உணவு சுகாதாரமான படுக்கை சுகாதார கழிப்பறை உருவாக்கித் தர வேண்டும் மீன்வர்களுக்கு உரிய அறிவுரையை வழங்க வேண்டும்
மேலும் ,
சூரை காற்று வீசும் பகுதிகளில் மக்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் புயல் கரையை கடக்கும்போது மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் மேலும் புயல் நகர்வை கண்காணித்து வலுவடைகிறதா இல்லை வலுஇழுக்கிறதா என்று
அரசு கண்காணிக்க வேண்டும்
தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் எங்கள் மீது பழி சுமத்துகிறார்.
இதே முதல் அலை போது மதுரை மாவட்டத்தில் 18 சதவீதம் பாதிப்பு இருந்த பொழுது போர்க்கால நடவடிக்கை முன்னாள் முதலமைச்சர் மேற்கொண்டு அதை 0.5 விதமாக குறைத்தார் .
மேலும், மக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் படுக்கை வசதி உள்ளிட்டவை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டது
வீட்டு சிகிச்சையில் இருக்கும் நோய் தொற்றார்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான பலசரக்கு மருந்து உள்ளிட்ட அனைத்தையும் அவர்களுக்கு வழங்க தேவையான அலுவலகர்கள் ஒதுக்கப்பட்டன
முதல் அலையில் நாங்கள் எப்படி எதிர்கொண்டு மக்களை பாராட்டு பெற்றோம் என்று அனைவருக்கும் தெரியும்
தற்போது நாங்கள் செய்த நடைமுறையை தெரிந்துகொண்டு அவர்கள் ஆய்வு பணி செய்ய வேண்டும் ஒருவர் மீது பழி சுமத்தி தப்பிக்க முடியாது இதே தோப்பூர் மருத்துவமனையில் நீங்கள் ஆய்வு செய்து உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள் நீங்கள் வெளியே சொன்னால் நற்பெயர் முன்னாள் முதலமைச்சருக்கு கிடைத்துவிடும் என்று நினைக்கிறீர்கள்
எதிர்க்கட்சி போல் குறை கூறுவதை விட்டுவிட்டு சவால்களை எதிர்கொண்டு மக்களை காக்க அரசு சிந்திக்க வேண்டும்
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மறந்து மக்களுக்கு கடுமையான பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன் ராமசாமி மகாலிங்கம் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் முன்னாள் சேர்மன் தமிழழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

கொரோனா: அஜித் பட இயக்குநரின் தாய் மறைவு!

முதலில் இயக்கிய திரைப்படம் உல்லாசம். கொரோனா: அஜித் பட இயக்குநரின் தாய் மறைவு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

இறந்த எஜமானி! தண்ணீர், உணவு விடுத்து  தகன மேடையருகே இருந்த நாய்!

தொடர்ந்து 4 நாட்களாக அந்த நாய் வீடு திரும்பவில்லை. இறந்த எஜமானி! தண்ணீர், உணவு விடுத்து தகன மேடையருகே இருந்த நாய்! முதலில் தினசரி தமிழ் தளத்தில்… [...]

நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன்! நேர்ந்த விபரீதம்!

குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன்! நேர்ந்த விபரீதம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

அந்த உறுப்பை கட் செய்த கள்ளக் காதலி! காப்பாற்றிய மனைவி!

அந்த பெண் அங்குள்ள ஒரு கத்தியை எடுத்து மஞ்சியின் ஆண் குறியை துண்டாக வெட்டியுள்ளார். அந்த உறுப்பை கட் செய்த கள்ளக் காதலி! காப்பாற்றிய மனைவி! முதலில்… [...]

திருப்பதியில் புதையல் தேடி 80 அடி சுரங்கம்! மூவர் கைது!

தமக்கு தெரிந்த சாமியார் ஒருவருடன் சேர்ந்து புதையல் எடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். திருப்பதியில் புதையல் தேடி 80 அடி சுரங்கம்! மூவர் கைது! முதலில் தினசரி தமிழ்… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: