Connect with us

LatestNews

குற்றச் செய்திகள்…

Published

on

மதுரை தல்லாகுளம்பகுதியில் வாக்காளருக்கு பணம் விநியோகம் செய்தபோது பறிமுதல் வழக்குப்பதிவு
மதுரை ஏப்ரல்3 தல்லாகுளம் பகுதியில் வாக்காளருக்கு பணம் விநியோகம் செய்தவரிடம்இருந்து போலீசார் பணம் பறிமுதல் செய்தனர்.
தல்லாகுளம் விசாலாட்சிபுரம் காலாங்கரை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிமைதீன்பாட்சா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்‌ அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் 62 என்பவரிடமிருந்து வாக்காளர் பட்டியலும் பணம் ரூபாய் 20 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*************************//
குடும்ப பிரச்சனைகாரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை மனைவி புகார் போலீஸ் விசாரணை மதுரை ஏப்ரல் 3 குடும்ப பிரச்சனை காரணமாக மனமுடைந்த கணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
மதுரைசொக்கிகுளம் அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில் வேல் 40. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த செந்தில்வேல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாக மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில்தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
********************************
மதுரை கே.புதூரில் நூதன மோசடி நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க நகை அபேஸ்
மர்ம நபர்கள் கைவரிசை
மதுரைஏப்ரல் 3 கே.புதூர்பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை நூதனமாக ஏமாற்றிபறத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கே.புதூர்கற்பகநகர்நான்காவதுதெருவை சேர்ந்தவர் கண்ணன் 46.இவரதுதாய் கற்பகநகர் ஆறாவது தெரு சந்திப்பில் நடந்து சென்றபோது 3 மர்ம நபர்கள் அவருக்கு நன்மை செய்வது போல் நடித்தனர். அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகையை வாங்கி பேப்பரில் மடித்து பத்திரமாகவைத்துக்ஙகொள்ளும்படி கொடுத்தனர். பின்னர் அந்தப் பெண் வீட்டிற்குசென்று பார்த்த போது தங்க நகைக்கு பதிலாக கற்கள் வைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் அந்த பெண் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன்கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஏமாற்றிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
************************
மதுரையில்
பத்திர எழுத்தர் அலுவலகத்தை உடைத்து 3 லட்சம் கொள்ளை
மதுரை ஏப் 3 மதுரை தல்லாகுளம் பகுதியில் பத்திர எழுத்தர் அலுவலகத்தை உடைத்து 3 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர் .
மீனாம்பாள்புரம் 9வது தெரு ஆபீஸர் டவுன் மேற்குப் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் 37 .இவர் தல்லாகுளம் சிங்கராயர் காலனி வடக்கு பகுதியில் பத்திரம் எழுதும் அலுவலகம் வைத்துள்ளார்.இவர் வழக்கம்போல அலுவலகம்முடிந்து மூடி சென்றுவிட்டு மறுநாள் வந்து பார்த்தார்.அப்போது அதன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே அலுவலகத்தில் வைத்திருந்த ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகுமார் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
********************************

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

அழகர்கோயில் மலையில் வனவிலங்குகளுக்கு தா கம் தீர்க்க சிறப்பு ஏற்பாடு..

Published

on

வனவிலங்குக்கு தாகம் தீர்க்கும் ஆலயம்:

மதுரை:

மதுரை மாவட்டம், அழகர் கோவிலில், வனவிலங்கின் தாகத்தை போக்க 25 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அழகர்கோவிலில் மலைபகுதியில் வனவிலங்குகள் உள்ளன.
இந்த விலங்குகள் அப்பகுதியில் உள்ள நூபுர கங்கைக்கு இரவு நேரங்களில் தாகத்தை தீர்த்துக் கொள்ளுமாம்.
அதாவது நூபுர கங்கையிலிருந்து வெறியேறும் தண்ணீரை மலையில் வசிக்கும் வனவிலங்குகள் பயன்படுத்தி வருகின்றன.
மலைகாலங்களில் நூபுர கங்கையில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்குமாம்.
தற்போது, மதுரை மாவட்டத்தில், மழை இன்றி பகல் பொழுது கடுமையான வெப்பம் நிலவுகிறது.
இதனால், அழகர் கோயில் மலையில் வசிக்கும் வனவிலங்குகள், மலையை விட்டு கீழே தண்ணீருக்காக அலைய நேரிடலாம், என கருதிய கோயில் நிர்வாகமானது, மலைப் பகுதியில் 25 இடங்களில் சிறிய தொட்டி அமைத்து, தினசரி குடிநீரையும் நிரப்பி வருகின்றனராம். இந்த தண்ணீர் தொட்டியானது திருக்கோயில் வளாகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கோயில் நிர்வாகமானது, வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் ஆலயமாக செயல்படுவதை, சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Continue Reading

LatestNews

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன் ஜாமீன்.

Published

on

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு:

மதுரை:

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சாம் இன்பென்ட் ஜோன்ஸ். இவர் மீது, இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சாம் இன்பென்ட் ஜோன்ஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பி்த்த உத்தரவு:மனுதாரர் எம்இ பட்டதாரி, பிஎச்டி படித்து வருகிறார். சம்பவம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. செல்போன், சிம்கார்டு ஆகியவற்றை போலீஸாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, அவர் அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கில் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க , வேண்டியதில்லை. கொரோனா தொற்று காலமாக இருப்பதை மனதில் கொண்டு மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்வது என்பது தீவிரமாக அணுக வேண்டியது பிரச்சினை. முதல் முறை தவறில் ஈடுபடுவோர்களுக்கும், டிஜிட்டல் உலகில் தொடர்ந்து ஆபாச படங்களை பகிர்ந்து வருவோர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. போக்சோ சட்ட விதிகள் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இது மட்டும் போதுமானது அல்ல. நல்லொழுக்க கல்வி மட்டுமே இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் அரணாக இருக்கும். என உத்தரவில் கூறியுள்ளார்.

Continue Reading

LatestNews

சசிகலாவுடன் தொடர்பு: நடவடிக்கை வேண்டி தீ ர்மானம்..

Published

on

சசிகலோவுடன் தொடர்பு:
நடவடிக்கை வேண்டி தீர்மானம்.

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்திற்கு களங்கம் கற்பிப்போர் மீதுகழகஒருங்கிணைப்பாளர்கள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி

மதுரை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி மூலம் 18 மாவட்டங்களில் தீர்மானம்

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலம்வி.வி.ஆர் ராஜ் சத்யன் தலைமையில் நடைபெற்றது இதில் மண்டல பொறுப்பாளர்கள் மதுரை மண்டல நிர்வாகிகள் டி,செல்வகுமார் டி கௌரிசங்கர் ,கவின்ராஜ் ,மணிகண்டன் கிருஷ்ணன , நல்லகுமார் ஹாஜா அமீர் ஹுசைன் சாஹிப் ,விக்னேஷ் ,கருப்பசாமி பாண்டியன் ,மலேஷ் , துணைச் மந்திர மூர்த்தி , துணைச் தமிழ்ச்செல்வன் சிவ ஆனந்த் ,பான்பிரதாப் சேலம் நாமக்கல் கரூர் மதுரை சிவகங்கை ராமநாடு கன்னியாகுமரி தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கனகராஜ் ,ஜெயகாந்தன் ,முரளி பாலுசாமி , அபிஸ் செல்வம் , ஜெயபாலன் , சிங்கராஜ பாண்டியன் மாணிக்கம் ,கருப்பசாமி பாண்டியன் , பாண்டியராஜன் ,கோபி ,சரவணகுமார் , அருண்குமார் , மசூத் , ஸ்ரீதர் ,அருண் ஜெபராஜ் , செதீஷ் குமார் , மனோ , ஆகியோர் பங்கேற்றனர் இதில் கீழ்கண்ட தீர்மானத்தைவி.வி.ஆர்.ராஜ்சத்யன் நிறைவேற்றினார்

மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த பாதையில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுப்பாட்டோடு தொண்டர்களின் பேராதரவோடு கழகத்தை வழிநடத்தி வருகின்றனர் .

நாளுக்குநாள் கழகம் வலுவும் , பொழிவும் மக்கள் செல்வாக்கும் பெற்று சிறப்புடன் செயலாற்றி வரும் நிலையில் , கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த திருமதி . சசிகலா அவர்கள் ஒவ்வொரு நாளும் கழகம் குறித்து சம்பந்தமில்லாத கருத்துக்களை சிலருடன் தொலைபேசி வாயிலாக பேசி வருவதையும் அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக , ஒரு வினோத செயலை செய்து வருகிறார் ,

ஆனால் அஇஅதிமுக – வின் ஒன்றரை கோடி தொண்டர்களும் இதை நம்பவும் இல்லை , ரசிக்கவும் இல்லை . அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் பேரியக்கமாகவே வரலாற்றில் நிலை பெற்றுள்ளதே தவிர , ஒரு குடும்பத்தில் வசப்படுத்தி கொள்ள தன்னை ஒருபோதும் வசப்படுத்திக் கொள்ளாது என்பதை உறுதிபடுத்தி கொள்வதோடு , திருமதி.சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் புகழுக்கு கலங்கம் விளைவித்தவர்கள் அனைவரையும் கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ,

இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மதுரை மண்டலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்களையும் , மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டலத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு ,

நமது இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இடும் ஒவ்வொரு கட்டளைக்கும் இரவு பகல் பாராது பணியாற்றி கழகம் மீண்டும் வெற்றிச் சரித்திரம் படைக்க சூளுரை ஏற்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ .1000 / – வழங்குவதாக அறிவித்திருந்த திரு.ஸ்டாலின் அவர்கள் தாங்கள் வாக்குறுதி அளித்தது போல அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ .1000 உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
அதனைத் தொடர்ந்து, 18 மாவட்ட கழக செயலாளர்கள் காணொளி காட்சி மூலம் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஜூன் 19: தமிழகத்தில் 8,183 பேருக்கு கொரோனா; 180 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜூன் 19: தமிழகத்தில் 8,183 பேருக்கு கொரோனா; 180 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஊதியம் ரூ.76.000! TMP யில் வேலை!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள மூத்த நிதி அதிகாரி, டிஜிட்டல் ஆபிசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் கீழ்… [...]

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

Anna University அதிகாரபூர்வ இணையதளத்தில் Peon & Clerical Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 5th, 8th, Any… [...]

பல்கலைக்கழகத்தில் Website Designer பணி!

மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் பல்கலைக்கழகத்தில் Website Designer பணி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

மலைக்கோவிலில் ஸ்பெஷல் பூஜை! துர்கா ஸ்டாலின் ஏற்பாடு!

மலை மந்திர் அர்ச்சகரை சந்தித்து சிறப்பு பூஜைகளையும் நடத்தியுள்ளார் துர்கா. மலைக்கோவிலில் ஸ்பெஷல் பூஜை! துர்கா ஸ்டாலின் ஏற்பாடு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: