மாணவர்கள் முன்னேறினால், பெருமைபடுபவர்கள ் ஆசிரியர்களே:

*தனது மாணவர்கள், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் கலெக்டராக, காவல் துறை அதிகாரியாக முன்னேறினால் பொறாமை படாமல் பெருமை படுபவர்கள் ஆசிரியர்கள் மட்டும் தான் என 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு*

மதுரை கோசாகுளம் சிஇஒஏ
பள்ளி வளாகத்தில் பாரதி யுவகேந்திரா மற்றும் சிஇஒஏ
மேல்நிலைப்பள்ளி சார்பில்
சிஇஒஏ
பள்ளி நிறுவனத் தலைவர் ராஜா கிளைமாக்சு தலைமையில் பாரதி யுவகேந்திரா நிறுவனர்
நெல்லை பாலு வரவேற்பில்,
தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று 12 ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவ – மாணவியர்க்கு தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டி பரிசுகள் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ,சிஇஒஏ
பள்ளி ச்செயலாளர் சாமி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், காவல் துறை உதவி ஆணையாளர் லில்லி கிரேஸ், பள்ளி முதல்வர் ஹேமா ஆட்ரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களை பாராட்டி அவர்களுக்கு முக கவசம், கப சுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
அரசு பள்ளியில் படித்து
500மதிப்பெண் பெற்ற திருப்பரங்குன்றம் அரசு பள்ளி மாணவி, குடு குடுப்பைகாரரின் மகள் தேவயானி,
மற்றும் தனியார் பள்ளியில்
594 மதிப்பெண் பெற்ற நிகிலேஸ்வரி,
586 மதிப்பெண் பெற்ற தர்னீஷ்,
578 மதிப்பெண் பெற்ற ஹரிபிரியா, ஆகிய மாணவ – மாணவியரை பாராட்டி பாராட்டு கேடயங்கள் மற்றும் ரொக்கப்பரிசுகளையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மேலும், நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு வழங்க 1000 பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை கல்வி துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,
தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது இந்த காலத்தில் மிக கடினம்,
தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க உற்று நோக்குதல் மிக அவசியம்.
ஒரு நிமிடம் கந்த ஷஷ்டி கவசத்தை கேட்டாலே, உற்று நோக்கினாலே கறுப்பர் கூட்டம் உள்ளே நுழைந்து விடுகிறது.
மதிப்பெண்கள் பெறுவது யாருடைய சிபாரிசும் தேவை இல்லை, கவனமாக படித்தாலே போதும்.
பாராட்டு விழாவை இந்த நேரத்தில் நடத்தக் கூடாது. இருந்தபோதிலும், மருந்துகள் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியாகவே இது உள்ளது.
வரும் 31ம் தேதி வரை 144 தடை சட்டம், பேரிடர் மேலான்மை சட்டம் நடைமுறையில் இருக்கிறது.

ஆனால் ,பேரிடர் மேலான்மை துறை அமைச்சராகிய நான், 144 தடை சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரி லில்லி கிரேஸ் கல்வி அதிகாரி ஆகியோர் இருக்கும் மேடையில் தான் பாராட்டு விழா நடக்கிறது.
ஆனால் ,இது பாராட்டு விழா மட்டும் அல்ல கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டமும் கூட,
அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் மாணவ – மாணவிகளை பாராட்டுவதுடன் மாணவ-மாணவிகளுக்கு முக கவசம், கப சுர குடிநீர்,நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளையும் வழங்குகிறோம்.
நான் ஆசிரியர்களை மிகவும் வணங்குபவன், அவர்கள் மீது அதிக மரியாதை வைத்திருப்பவன்.
ஏனென்றால் ஒரு மனிதனின் அருகில் இருக்கும் அவனது நண்பன் ஒரு படி முன்னேறினால் கூட மனிதனுக்கு பொறாமை வரும்.
ஆனால் ,தனது மாணவர்கள், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் கலெக்டராக, காவல் துறை அதிகாரியாக முன்னேறினால் பொறாமை படாமல் பெருமை படுபவர்கள் ஆசிரியர்கள் மட்டும் தான் என 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: