Connect with us

LatestNews

நீர் நிலைகளை தூர்வாரியது அதிமுக அரசு….தம ிழக முதல்வர்..

Published

on

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முதல்வர் பிரச்சாரம்….

நீர்நிலைகளை தூர்வாரி, வேளாண் பணி இந்தாண்டு சிறப்படைந்துள்ளது.

இந்தாண்டு, மேட்டூர், முல்லைபெரியாறு அணை இரண்டும் நிரம்பியது இந்தாண்டு தான் –

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..

மதுரை :

கிராமம் சூழ்ந்த . பகுதியான மேலூர் ஏற்றம் அடைய வேண்டும் என பலமுறை பெரியபுள்ளான் கோரிக்கை மனுவை என்னிடம் அளித்தவர்.

கிராமபகுதியாக உள்ள பகுதிக்கு தண்ணீர் மிக முக்கியமான ஒன்று, விவசாயம் செய்ய நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்து, இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் நீர்மேலாண்மையில் விருது வாங்கியுள்ளோம். விவசாயியும் ரவுடியும் ஒன்னா..! விவசாயியை கொச்சைபடுத்தி ஸ்டாலின் பேசுகின்றார். நான் விவசாயி என்றால் ஸ்டாலின் பொங்கி எழுகின்றார்..
விவசாயிகளிடம் எங்களுடைய மதிப்பு உயர்ந்து கொண்டு வருகின்றது. இதனை நாங்கள் பெருமையாக கருதுகின்றோம். வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும். ஒருவரை சிறுமை படுத்தி பேசுவதால் அவர்களுக்கு சறுக்கல்,ஏற்படாது. நன்மதிப்பு தான் ஏற்படும்.

தரங்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் கட்சி திமுக.

நாட்டு மக்களுக்காக திமுக இல்லை. திமுக என்பது கம்பெனி. வாரிசு அரசியலை செய்கின்றனர்..
நாட்டின் முதுகெலும்பு விவசாயி, ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைபடூத்தி பேசினால் எதிர்கட்சி கூட கிடைக்காது.

விவசாயிகள் என்றால் தீண்டதாகவர் போல நினைக்கின்றார். முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. அவர் செய்த அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமல்ல…

ஸ்டாலின் அணிந்திருக்க செருப்பை விட 1 ரூபாய் குறைந்தவன் நான் என என்னை விமர்சனம் செய்கின்றார். அவர் 1 லட்சத்து 74 ஆயிரம் கோடி ஊழல் செய்தவர் அவர். நான் விவசாயி
ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசுகின்றார். நேற்று நடந்த விழுப்புரம் கூட்டத்தில் என்னை பற்றியே பேசிவிட்டு செல்கின்றார்.

விவசாயிக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன தேவை என்பதனை நாங்கள் செய்து வருகின்றோம்.
கண்ணுக்கு தெரியாத காற்றையே ஊழல் செய்தவர்கள் தான் அவர்கள். அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுங்கள்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மக்களுக்காக உழைத்து மறைந்தனர். அவர்களுக்கு நாம்தான் வாரிசு.

அந்த வழியிலே அதிமுக அரசு செயல்பட்டு வருகின்றது.
கொள்ளையடிப்பதில் திமுகவினர் மன்னர்கள்.

திமுக அராஜக, ரவுடி கட்சி.. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்து உங்களிடம் இருக்காது.. நாட்டையே பட்டா போட்டுவிடுவார்கள்..
41 % அரசாங்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவ கனவை, நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் 7.5% சதவீத உள்ஒதுக்கீட வழங்கி 435 மாணவர்கள் மருத்துவ படிப்பை இந்தாண்டு மேற்கொள்கின்றனர்..
அதிகாரிகளையும், டிஜிபியையும் உதயநிதி மிரட்டுகின்றார்.

காவல்துறையின் உச்சபட்ச அதிகாரியை மிரட்டுகின்றனர் என்றால் நாட்டு மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்.

கட்டபஞ்சாயத்து ரவுடிசம் திமுக வந்தால் தலைதூக்கிவிடும்.

சாதிசண்டை.,மதசண்டை இல்லாமல் நிம்மதியாக வாழ்கின்றோம். திமுக வந்தால் நாடு தங்காது..
தை பிறந்தால் வழி பிறக்கும். தை பொங்கல் கொண்டாட கடந்தாண்டு 1000 தந்தோம். இந்தாண்டு பொங்கல் தொகுப்பு 2500 ருபாய் தந்தது அதிமுக.
மருத்துவ கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்கும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
பெண்கள் சுமையை குறைக்கும் விதமாக அரிசி அட்டைதாரர்களுக்கு வாஷிங்மிஷின் வழங்கப்படும், பெண்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படும்,

ரேசன் பொருள் வீடு தேடி வரும்,18 வயது நிரம்பியவர்களுக்கு அரசாங்கமே ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படும்..
கூட்டுறவு கடன் ரத்து, மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து செய்யப்படும்.. நகைகடன் தள்ளுபடி செய்யப்படும்.

அதிமுக தேர்தல் அறிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் கட்சியாக உள்ளது.

ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.. வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு சொந்தமாக கான்கீரிட் வீடு கட்டி தரப்படும் – இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

அழகர்கோயில் மலையில் வனவிலங்குகளுக்கு தா கம் தீர்க்க சிறப்பு ஏற்பாடு..

Published

on

வனவிலங்குக்கு தாகம் தீர்க்கும் ஆலயம்:

மதுரை:

மதுரை மாவட்டம், அழகர் கோவிலில், வனவிலங்கின் தாகத்தை போக்க 25 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அழகர்கோவிலில் மலைபகுதியில் வனவிலங்குகள் உள்ளன.
இந்த விலங்குகள் அப்பகுதியில் உள்ள நூபுர கங்கைக்கு இரவு நேரங்களில் தாகத்தை தீர்த்துக் கொள்ளுமாம்.
அதாவது நூபுர கங்கையிலிருந்து வெறியேறும் தண்ணீரை மலையில் வசிக்கும் வனவிலங்குகள் பயன்படுத்தி வருகின்றன.
மலைகாலங்களில் நூபுர கங்கையில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்குமாம்.
தற்போது, மதுரை மாவட்டத்தில், மழை இன்றி பகல் பொழுது கடுமையான வெப்பம் நிலவுகிறது.
இதனால், அழகர் கோயில் மலையில் வசிக்கும் வனவிலங்குகள், மலையை விட்டு கீழே தண்ணீருக்காக அலைய நேரிடலாம், என கருதிய கோயில் நிர்வாகமானது, மலைப் பகுதியில் 25 இடங்களில் சிறிய தொட்டி அமைத்து, தினசரி குடிநீரையும் நிரப்பி வருகின்றனராம். இந்த தண்ணீர் தொட்டியானது திருக்கோயில் வளாகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கோயில் நிர்வாகமானது, வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் ஆலயமாக செயல்படுவதை, சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Continue Reading

LatestNews

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன் ஜாமீன்.

Published

on

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு:

மதுரை:

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சாம் இன்பென்ட் ஜோன்ஸ். இவர் மீது, இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சாம் இன்பென்ட் ஜோன்ஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பி்த்த உத்தரவு:மனுதாரர் எம்இ பட்டதாரி, பிஎச்டி படித்து வருகிறார். சம்பவம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. செல்போன், சிம்கார்டு ஆகியவற்றை போலீஸாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, அவர் அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கில் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க , வேண்டியதில்லை. கொரோனா தொற்று காலமாக இருப்பதை மனதில் கொண்டு மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்வது என்பது தீவிரமாக அணுக வேண்டியது பிரச்சினை. முதல் முறை தவறில் ஈடுபடுவோர்களுக்கும், டிஜிட்டல் உலகில் தொடர்ந்து ஆபாச படங்களை பகிர்ந்து வருவோர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. போக்சோ சட்ட விதிகள் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இது மட்டும் போதுமானது அல்ல. நல்லொழுக்க கல்வி மட்டுமே இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் அரணாக இருக்கும். என உத்தரவில் கூறியுள்ளார்.

Continue Reading

LatestNews

சசிகலாவுடன் தொடர்பு: நடவடிக்கை வேண்டி தீ ர்மானம்..

Published

on

சசிகலோவுடன் தொடர்பு:
நடவடிக்கை வேண்டி தீர்மானம்.

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்திற்கு களங்கம் கற்பிப்போர் மீதுகழகஒருங்கிணைப்பாளர்கள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி

மதுரை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி மூலம் 18 மாவட்டங்களில் தீர்மானம்

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலம்வி.வி.ஆர் ராஜ் சத்யன் தலைமையில் நடைபெற்றது இதில் மண்டல பொறுப்பாளர்கள் மதுரை மண்டல நிர்வாகிகள் டி,செல்வகுமார் டி கௌரிசங்கர் ,கவின்ராஜ் ,மணிகண்டன் கிருஷ்ணன , நல்லகுமார் ஹாஜா அமீர் ஹுசைன் சாஹிப் ,விக்னேஷ் ,கருப்பசாமி பாண்டியன் ,மலேஷ் , துணைச் மந்திர மூர்த்தி , துணைச் தமிழ்ச்செல்வன் சிவ ஆனந்த் ,பான்பிரதாப் சேலம் நாமக்கல் கரூர் மதுரை சிவகங்கை ராமநாடு கன்னியாகுமரி தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கனகராஜ் ,ஜெயகாந்தன் ,முரளி பாலுசாமி , அபிஸ் செல்வம் , ஜெயபாலன் , சிங்கராஜ பாண்டியன் மாணிக்கம் ,கருப்பசாமி பாண்டியன் , பாண்டியராஜன் ,கோபி ,சரவணகுமார் , அருண்குமார் , மசூத் , ஸ்ரீதர் ,அருண் ஜெபராஜ் , செதீஷ் குமார் , மனோ , ஆகியோர் பங்கேற்றனர் இதில் கீழ்கண்ட தீர்மானத்தைவி.வி.ஆர்.ராஜ்சத்யன் நிறைவேற்றினார்

மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த பாதையில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுப்பாட்டோடு தொண்டர்களின் பேராதரவோடு கழகத்தை வழிநடத்தி வருகின்றனர் .

நாளுக்குநாள் கழகம் வலுவும் , பொழிவும் மக்கள் செல்வாக்கும் பெற்று சிறப்புடன் செயலாற்றி வரும் நிலையில் , கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த திருமதி . சசிகலா அவர்கள் ஒவ்வொரு நாளும் கழகம் குறித்து சம்பந்தமில்லாத கருத்துக்களை சிலருடன் தொலைபேசி வாயிலாக பேசி வருவதையும் அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக , ஒரு வினோத செயலை செய்து வருகிறார் ,

ஆனால் அஇஅதிமுக – வின் ஒன்றரை கோடி தொண்டர்களும் இதை நம்பவும் இல்லை , ரசிக்கவும் இல்லை . அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் பேரியக்கமாகவே வரலாற்றில் நிலை பெற்றுள்ளதே தவிர , ஒரு குடும்பத்தில் வசப்படுத்தி கொள்ள தன்னை ஒருபோதும் வசப்படுத்திக் கொள்ளாது என்பதை உறுதிபடுத்தி கொள்வதோடு , திருமதி.சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் புகழுக்கு கலங்கம் விளைவித்தவர்கள் அனைவரையும் கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ,

இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மதுரை மண்டலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்களையும் , மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டலத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு ,

நமது இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இடும் ஒவ்வொரு கட்டளைக்கும் இரவு பகல் பாராது பணியாற்றி கழகம் மீண்டும் வெற்றிச் சரித்திரம் படைக்க சூளுரை ஏற்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ .1000 / – வழங்குவதாக அறிவித்திருந்த திரு.ஸ்டாலின் அவர்கள் தாங்கள் வாக்குறுதி அளித்தது போல அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ .1000 உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
அதனைத் தொடர்ந்து, 18 மாவட்ட கழக செயலாளர்கள் காணொளி காட்சி மூலம் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஜூன் 19: தமிழகத்தில் 8,183 பேருக்கு கொரோனா; 180 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜூன் 19: தமிழகத்தில் 8,183 பேருக்கு கொரோனா; 180 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஊதியம் ரூ.76.000! TMP யில் வேலை!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள மூத்த நிதி அதிகாரி, டிஜிட்டல் ஆபிசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் கீழ்… [...]

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

Anna University அதிகாரபூர்வ இணையதளத்தில் Peon & Clerical Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 5th, 8th, Any… [...]

பல்கலைக்கழகத்தில் Website Designer பணி!

மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் பல்கலைக்கழகத்தில் Website Designer பணி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

மலைக்கோவிலில் ஸ்பெஷல் பூஜை! துர்கா ஸ்டாலின் ஏற்பாடு!

மலை மந்திர் அர்ச்சகரை சந்தித்து சிறப்பு பூஜைகளையும் நடத்தியுள்ளார் துர்கா. மலைக்கோவிலில் ஸ்பெஷல் பூஜை! துர்கா ஸ்டாலின் ஏற்பாடு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: