Connect with us

LatestNews

போலீஸ் கொடி அணிவகுப்பு…

Published

on

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:

Published

on

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

திருப்பரங்குன்றம்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.

மற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது

Continue Reading

LatestNews

தீரன் சின்னமலை பிறந்தநாள்:

Published

on

தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..

Continue Reading

LatestNews

திருப்பரங்குன்றத்தில், பக்தர்கள் இன்றி நடந்த சுவாமி புறப்பாடு:

Published

on

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்: ஆடி கார்த்திகை முன்னிட்டு சுவாமி புறப்பாடு:
பக்தர்களின்றி உள்திருவிழாவாக நடைபெற்றது:

மதுரை:

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வழக்கமாக. ஆடி கார்த்திகை அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி சன்னதி தெருவிலுள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருள்வர்.
மாலையில் அபிஷேகம், பூஜைகள் முடிந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி முடிந்து கோயில் சென்றடைவார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு இன்று முதல் ஆக. 8.ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதனால், இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு, கோவிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடு, பக்தர்கள் இன்றி கோவில் உள்ளே உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்றது.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்!

மணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]

ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன? ‘பகீர்’ வைரல் வீடியோ!

சிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]

மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை!

பல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை! முதலில்… [...]

உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை!

இதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை!… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: