Connect with us

LatestNews

மரகதலிங்கம் மாயம்…பொது வழக்காக மாற்றி நீ திமன்றம் உத்தரவு..

Published

on

பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் மாயமான வழக்கை பொது நல வழக்காக மாற்றி நீதி மன்றம் உத்திரவு:

மதுரை

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர். வக்கீல். முத்துக்குமார். இவர் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் 2014 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எதிரே பழமையான குன்னத்தூர் சத்திரம் இருந்தது. அதில் மதுரை மாநகராட்சியின் வரி வசூல் அலுவலகம் இயங்கி வந்தது.
அதற்குள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் இருந்தது. தினமும் அங்கு பூஜை, வழிபாடு மற்றும் அன்னதானம் நடை பெற்று வந்தது. நாளைடைவில் , அந்த பழமையான சத்திரம் ஸ்திர தன்மை இல்லாதாதை காரணம் காட்டி இடிக்கப் பட்டது.
அதிலிருந்த மரகத லிங்கம் மற்றும் சந்தன பேழை, செப்பு பட்டயம் அனைத்தும் மதுரை மாநகராட்சி அலுவலக கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்க பட்டது.
சில நாட்கள் கழித்து அந்த மரகத லிங்கம் மாயமாகி விட்டது. இந்த மரகத லிங்கம் வெளி நாட்டிற்கு கடத்தப் பட்டு விட்டதாகவும் அதை கண்டு பிடித்து மீண்டும் பொது மக்களின் வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென மதுரை. அண்ணாநகரை சேர்ந்த வக்கீல். முத்துக்குமார் தல்லாகுளம் காவல் நிலைய குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.
போலீசார் நடவடிக்கை எடுக்காதாதால், மதுரை உயர் நீதி மன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.
இதை விசாரித்த அப்போதையை நீதிபதி. கிருபாகரன் மதுரை மாநகராட்சி கமிஷனர் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராக உத்திரவிட்டார்.
விசாரணை குழுவும் அமைக்க பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி. பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் வாதிடும்போது ஸ்ரீரெங்கத்தில் ஒரு மரகத லிங்கம் கண்டு பிடிக்க பட்டுள்ளதாகவும், நீதி மன்றத்தில் ஒப்படைக்க முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக வக்கீல். முத்துக்குமார் கொடுத்த புகார் மனு மீது ஏன்? இதுவரை வழக்கு பதிவு செய்ய வில்லையென கேள்வி எழுப்பிய நீதிபதி. பார்த்திபன் இந்த வழக்கை பொது நல வழக்காக இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சக்கு மாற்றி உத்திரவிட்டார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

சடலம் அருகே வசித்த வந்த மனநலம் பாதிக்கப் பட்ட பெண்…

Published

on

சகோதரன் உயிரிழந்தது தெரியாமல் துர்நாற்றத்துடன் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி:

மதுரை:

மதுரை முனியாண்டிபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயச்சந்திரன் (65) என்பவருடன் அவரது சகோதரி சுப்புலட்சுமி (55) தனியாக வீட்டில் வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில், அண்ணன் வழுக்கிவிழுந்து உயிரிழந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி தன் அண்ணன் தூங்குவதாக நினைத்து.
அண்ணனின் உடல் மேல் ஏறி நின்றபடி சமையல் செய்து வாழ்ந்து வருகிறார்.
இறந்தவர் உடல் அழுகியதால், கால்கள் உடல் பகுதியில் சிக்கியதால் சேதமடைந்த இருந்தது.
அவர் வீடு அருகே வசித்து வந்தவர்கள் உடலில் துர்நாற்றம் வீசியதையடுத்து, கதவை உடைத்து காவல்துறையினர் உடலை மீட்டு சுப்ரமணியபுரம் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

LatestNews

கிரைம் செய்திகள்..

Published

on

அவனியாபுரத்தில்
பைக் மோதி நடந்து சென்றவர் பலி :
மதுரை ஜூன் 17

மதுரை
மண்டேலா நகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் காஜா மைதீன் 50.ஆவர் மண்டேலாநகர் சந்திப்பில் சாலையை கடந்த போது, அந்த வழியாக சத்தியமங்கலத்தை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காஜாமைதீன் பலியானார் .
இந்த விபத்து குறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை முன்பு பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது :
பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்:

மதுரை.ஜூன்17.

மதுரை அருகே
திருப்பரங்குன்றம் கூடல் மலை தெருவை சேர்ந்தவர் சத்யா 28. இவர் அரசு மருத்துவமனை மெயின் கேட் அருகே சென்றபோது, கத்தி முனையில் மிரட்டி வாலிபர் ஒருவர் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டார்.
அப்போது, சத்யா கூச்சல் போடவே பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்தனர். .அந்த வாலிபரை தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரித்தபோது , அவர் சிவகங்கை மாவட்டம் பழையனேந்தலை சேர்ந்த பெரிய பாண்டி மகன் நாகராஜன் 26 என்று தெரிய வந்தது .அவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை செல்லூரில்
லோடுமேன் பூச்சி மருந்தை தின்று தற்கொலை
போலீஸ் விசாரணை:

மதுரை ஜூன் 17 :

மதுரை
செல்லூர் அருள்தாஸ்புரம் தேங்காய் கடை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 32. இவர் லோடுமேன் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்தது. தற்போது, லாக்டவுன் காரணமாக இவருக்கு வேலை இல்லை.
இதனால் , வருமானம் இன்றி சிரமப்பட்டார். இதன் காரணமாக, மனமுடைந்து பூச்சிமருந்தைதின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

LatestNews

கிணற்றில் மிதந்த ஆண் சடலம்..

Published

on

ராஜபாளையம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த, அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…..

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியில் இருந்து, சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் செல்லும் வழியில், தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் சடலமாக மிதந்தது. அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள், கிணற்றில் ஆண் சடலம் மிதப்பது குறித்து சேத்தூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் சடலமாக மிதந்த உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை யாரவது கொலை செய்து உடலை கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து, சேத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

மது போதையில் நடுச்சாலையில் மலைப்பாம்பைப் பிடித்து இளைஞர் நடனம்!

மது போதையில் பாம்பை தூக்கி சாலைக்கு கொண்டு வந்து நடனமாடினர், மது போதையில் நடுச்சாலையில் மலைப்பாம்பைப் பிடித்து இளைஞர் நடனம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

கஞ்சா விற்ற காதலர்கள்! போலிஸிடம் சிக்கிய சிட்டுக்கள்!

அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. கஞ்சா விற்ற காதலர்கள்! போலிஸிடம் சிக்கிய சிட்டுக்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆண் நண்பருடன் ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை கைது!

அந்த அறைக்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். ஆண் நண்பருடன் ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை கைது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஜாடிக்கேத்த மூடி: யூடியூப் மதன் மனைவி கைது!

கணவன் - மனைவியும் இணைந்தே யூடியூபில் சிறார்களை கெடுக்கும் ரீதியில் குற்றங்களை செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. ஜாடிக்கேத்த மூடி: யூடியூப் மதன் மனைவி கைது! முதலில் தினசரி… [...]

கொரோனா: இளம் நடிகர் உயிரிழப்பு!

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் கொரோனா: இளம் நடிகர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: