பல்கலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா:

மதுரை.

*மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு. கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.*

தமிழகத்தில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை அமலில் உள்ள நிலையில் 33% அலுவலர்கள் கொண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சான்றிதழ் துறையில் பணியாற்றி வந்த மேலும் ஒருவருக்கு தோன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வாரம் தொலைநிலைக் கல்வியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தொடர்ந்து மூன்று நாட்கள் முழு விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து ஜூலை 25 சனிக்கிழமை இன்று முழு விடுமுறை என்று பதிவாளர் வசந்தா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

மேலும் சான்றிதழ் துறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு. அவரிடம் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த உள்ளதாகவும் காமராஜர் பல்கலைக்கழகம் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: