Connect with us

LatestNews

தடுமாறும் தலைவர் ஸ்டாலின்…அமைச்சர்

Published

on

தடுமாறும் தலைவர் ஸ்டாலின் –

அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு

திருமங்கலம் :

மதுரை மாவட்டம் டி. குன்னத்தூரில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெ. பேரவை சார்பில் 501 புதிய பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும், சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து அதனைத் தொடர்ந்து 7,300 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜெ.சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்து,நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,

பல்வேறு துறைகளில் முதல் இடத்தில் இருக்கும் தமிழக அரசு நிதி மேலாண்மை முதலிடத்தில் உள்ளது. அதே போல் கடன் சுமையும் கட்டுக்குள் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 7,000 கோடிக்கு மேல் பயிர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்றனர்.

பேரிடர் காலங்களில் விவசாய மக்களுக்காக சில விதியை தளர்த்தி மானாவாரி ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவியும், நீண்டகால பயிர்களுக்கு ஒரு ஏக்கர் 25,000 ரூபாய் உதவியும் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
நீர் மேலாண்மையில் முதலிடத்தை பிடித்து இருக்கிறோம்.

தேர்தல் வந்த உடன் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என்று கனவு காணலாம் ஆனால் அதற்கான ஒரு தகுதி வேண்டும்.4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக காணவேண்டிய வளர்ச்சிகளை தற்சமயம் செய்து முடித்துள்ளார் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளை 100% நிறைவேற்றியுள்ளோம்,தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியுள்ளோம். அமைச்சர்கள் மானிய கோரிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆட்சி அதிகார பசியோடு தற்சமயம் களத்தில் நின்று கொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின் . முன்னாள் முதல்வர் கலைஞர் இருந்த பொழுது முதலமைச்சராக ஆகிவிட வேண்டும் என்று நினைத்தார். அதை மக்கள் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2021 தமிழகத்தின் முதலமைச்சர் ஆக மாறிவிடலாம் என்று மு.க. ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் அப்போது மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். அதனால் எப்போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது.

முதலமைச்சருக்கு மந்திரவாதி என்று பெயர் சூட்டியுள்ளார் ஸ்டாலின். முதலமைச்சருக்கு மந்திரமும் தந்திரமும் தெரியாது. ஆனால் மக்களின் தேவை அறிந்து உழைக்க தெரியும்.

ஒவ்வொரு பகுதியாக செல்கிறார் ஸ்டாலின் அவர் சொல்கிற இடத்தில் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து வருகிறார். ஆனால் தமிழகத்தின் முதலமைச்சர் பொதுமக்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2021 தேர்தலுக்கு பிறகு திமுக அழிந்து விடும் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை. தகுதி வாய்ந்த தலைவர் திமுகவில் இல்லை. தடுமாறும் தலைவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்சமயம் நமக்கு உள்ள தலைவர் நிரந்தரமான எளிமையான தலைவர் என்பதில் மாற்றமில்லை.
கொங்கு நாடு, சோழநாடு கழகத்திற்கு வெற்றிக்கொடி நாட்டி வருவதைப்போல் பாண்டிய நாடும் வெற்றிக்கொடி நாட்டில் முதலிடத்தை பிடிக்கும் என்பது சாத்தியமாகும்.

மதுரை மாவட்டம் புறநகர் மேற்கு தொகுதியில் முழுநேர அரசு ஊழியர்கள் என்பது போல முழு நேர அரசியல் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

குறைந்தபட்ச ஊதியம் என்கிற அடிப்படையில் அவர்களது வாழ்வாதாரமான ஊதியம் வழங்கப்படும் என்பதில் மாற்றமில்லை.

இந்த இயக்கத்தில் நீண்ட நாட்கள் உழைத்துக் கொண்டிருக்கிற தகுதியானவர்களுக்கு இந்த அரசியல் ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

அழகர்கோயில் மலையில் வனவிலங்குகளுக்கு தா கம் தீர்க்க சிறப்பு ஏற்பாடு..

Published

on

வனவிலங்குக்கு தாகம் தீர்க்கும் ஆலயம்:

மதுரை:

மதுரை மாவட்டம், அழகர் கோவிலில், வனவிலங்கின் தாகத்தை போக்க 25 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அழகர்கோவிலில் மலைபகுதியில் வனவிலங்குகள் உள்ளன.
இந்த விலங்குகள் அப்பகுதியில் உள்ள நூபுர கங்கைக்கு இரவு நேரங்களில் தாகத்தை தீர்த்துக் கொள்ளுமாம்.
அதாவது நூபுர கங்கையிலிருந்து வெறியேறும் தண்ணீரை மலையில் வசிக்கும் வனவிலங்குகள் பயன்படுத்தி வருகின்றன.
மலைகாலங்களில் நூபுர கங்கையில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்குமாம்.
தற்போது, மதுரை மாவட்டத்தில், மழை இன்றி பகல் பொழுது கடுமையான வெப்பம் நிலவுகிறது.
இதனால், அழகர் கோயில் மலையில் வசிக்கும் வனவிலங்குகள், மலையை விட்டு கீழே தண்ணீருக்காக அலைய நேரிடலாம், என கருதிய கோயில் நிர்வாகமானது, மலைப் பகுதியில் 25 இடங்களில் சிறிய தொட்டி அமைத்து, தினசரி குடிநீரையும் நிரப்பி வருகின்றனராம். இந்த தண்ணீர் தொட்டியானது திருக்கோயில் வளாகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கோயில் நிர்வாகமானது, வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் ஆலயமாக செயல்படுவதை, சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Continue Reading

LatestNews

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன் ஜாமீன்.

Published

on

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு:

மதுரை:

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சாம் இன்பென்ட் ஜோன்ஸ். இவர் மீது, இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சாம் இன்பென்ட் ஜோன்ஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பி்த்த உத்தரவு:மனுதாரர் எம்இ பட்டதாரி, பிஎச்டி படித்து வருகிறார். சம்பவம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. செல்போன், சிம்கார்டு ஆகியவற்றை போலீஸாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, அவர் அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கில் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க , வேண்டியதில்லை. கொரோனா தொற்று காலமாக இருப்பதை மனதில் கொண்டு மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்வது என்பது தீவிரமாக அணுக வேண்டியது பிரச்சினை. முதல் முறை தவறில் ஈடுபடுவோர்களுக்கும், டிஜிட்டல் உலகில் தொடர்ந்து ஆபாச படங்களை பகிர்ந்து வருவோர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. போக்சோ சட்ட விதிகள் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இது மட்டும் போதுமானது அல்ல. நல்லொழுக்க கல்வி மட்டுமே இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் அரணாக இருக்கும். என உத்தரவில் கூறியுள்ளார்.

Continue Reading

LatestNews

சசிகலாவுடன் தொடர்பு: நடவடிக்கை வேண்டி தீ ர்மானம்..

Published

on

சசிகலோவுடன் தொடர்பு:
நடவடிக்கை வேண்டி தீர்மானம்.

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்திற்கு களங்கம் கற்பிப்போர் மீதுகழகஒருங்கிணைப்பாளர்கள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி

மதுரை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி மூலம் 18 மாவட்டங்களில் தீர்மானம்

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலம்வி.வி.ஆர் ராஜ் சத்யன் தலைமையில் நடைபெற்றது இதில் மண்டல பொறுப்பாளர்கள் மதுரை மண்டல நிர்வாகிகள் டி,செல்வகுமார் டி கௌரிசங்கர் ,கவின்ராஜ் ,மணிகண்டன் கிருஷ்ணன , நல்லகுமார் ஹாஜா அமீர் ஹுசைன் சாஹிப் ,விக்னேஷ் ,கருப்பசாமி பாண்டியன் ,மலேஷ் , துணைச் மந்திர மூர்த்தி , துணைச் தமிழ்ச்செல்வன் சிவ ஆனந்த் ,பான்பிரதாப் சேலம் நாமக்கல் கரூர் மதுரை சிவகங்கை ராமநாடு கன்னியாகுமரி தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கனகராஜ் ,ஜெயகாந்தன் ,முரளி பாலுசாமி , அபிஸ் செல்வம் , ஜெயபாலன் , சிங்கராஜ பாண்டியன் மாணிக்கம் ,கருப்பசாமி பாண்டியன் , பாண்டியராஜன் ,கோபி ,சரவணகுமார் , அருண்குமார் , மசூத் , ஸ்ரீதர் ,அருண் ஜெபராஜ் , செதீஷ் குமார் , மனோ , ஆகியோர் பங்கேற்றனர் இதில் கீழ்கண்ட தீர்மானத்தைவி.வி.ஆர்.ராஜ்சத்யன் நிறைவேற்றினார்

மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த பாதையில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுப்பாட்டோடு தொண்டர்களின் பேராதரவோடு கழகத்தை வழிநடத்தி வருகின்றனர் .

நாளுக்குநாள் கழகம் வலுவும் , பொழிவும் மக்கள் செல்வாக்கும் பெற்று சிறப்புடன் செயலாற்றி வரும் நிலையில் , கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த திருமதி . சசிகலா அவர்கள் ஒவ்வொரு நாளும் கழகம் குறித்து சம்பந்தமில்லாத கருத்துக்களை சிலருடன் தொலைபேசி வாயிலாக பேசி வருவதையும் அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக , ஒரு வினோத செயலை செய்து வருகிறார் ,

ஆனால் அஇஅதிமுக – வின் ஒன்றரை கோடி தொண்டர்களும் இதை நம்பவும் இல்லை , ரசிக்கவும் இல்லை . அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் பேரியக்கமாகவே வரலாற்றில் நிலை பெற்றுள்ளதே தவிர , ஒரு குடும்பத்தில் வசப்படுத்தி கொள்ள தன்னை ஒருபோதும் வசப்படுத்திக் கொள்ளாது என்பதை உறுதிபடுத்தி கொள்வதோடு , திருமதி.சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் புகழுக்கு கலங்கம் விளைவித்தவர்கள் அனைவரையும் கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ,

இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மதுரை மண்டலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்களையும் , மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டலத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு ,

நமது இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இடும் ஒவ்வொரு கட்டளைக்கும் இரவு பகல் பாராது பணியாற்றி கழகம் மீண்டும் வெற்றிச் சரித்திரம் படைக்க சூளுரை ஏற்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ .1000 / – வழங்குவதாக அறிவித்திருந்த திரு.ஸ்டாலின் அவர்கள் தாங்கள் வாக்குறுதி அளித்தது போல அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ .1000 உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
அதனைத் தொடர்ந்து, 18 மாவட்ட கழக செயலாளர்கள் காணொளி காட்சி மூலம் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஜூன் 19: தமிழகத்தில் 8,183 பேருக்கு கொரோனா; 180 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜூன் 19: தமிழகத்தில் 8,183 பேருக்கு கொரோனா; 180 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஊதியம் ரூ.76.000! TMP யில் வேலை!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) காலியாக உள்ள மூத்த நிதி அதிகாரி, டிஜிட்டல் ஆபிசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் கீழ்… [...]

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

Anna University அதிகாரபூர்வ இணையதளத்தில் Peon & Clerical Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 5th, 8th, Any… [...]

பல்கலைக்கழகத்தில் Website Designer பணி!

மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் பல்கலைக்கழகத்தில் Website Designer பணி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

மலைக்கோவிலில் ஸ்பெஷல் பூஜை! துர்கா ஸ்டாலின் ஏற்பாடு!

மலை மந்திர் அர்ச்சகரை சந்தித்து சிறப்பு பூஜைகளையும் நடத்தியுள்ளார் துர்கா. மலைக்கோவிலில் ஸ்பெஷல் பூஜை! துர்கா ஸ்டாலின் ஏற்பாடு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: