Connect with us

LatestNews

ஜெயலலிதா பிறந்த நாள் விழா..

Published

on

முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நகர் மாவட்ட அவைத்தலைவர் தங்கம் பொருளாளர் ராஜா அதிமுக மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம் எஸ் பாண்டியன் முன்னாள் மாவட்ட செயலாளர் வி ஆர் ராஜாங்கம் எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

வாக்காளரின் விழிப்புணர்வு..

Published

on

வாக்காளரின் விழிப்புணர்வு

மதுரை

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை அம்பேத்கர் காலணியை சேர்ந்தவர் லோகராஜ் இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களின் வீட்டு வாசல் கதவு முன்பு "எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல" என எழுதப்பட்ட வாசத்திலான பதாகையை தொங்கவிட்டுள்ளனர். இது குறித்து இவர் கூறுகையில் இந்த பதாகையை பார்க்கும் இப்பகுதியை சேர்ந்த பலரும் தாங்களும் இது போன்று வீட்டின் முன்பு எழுதி வைக்க வேண்டும் என கூறுவதுடன். அரசியல் கட்சியினர் பரிசு பொருள்களை வழங்குவதை தவிர்க்கவும் இந்த பதாகை வாய்ப்பாக உள்ளது. ல்வேறு அரசியல் கட்சியினர் அனைவருக்கும் வாக்களிக்கும் அவசியத்தை உணர்த்துவதுடன் எங்கள் வாக்கை நியாமாக செலுத்துவோம் என்பதை சக வாக்காளர்களுக்கு உணர்த்த இந்த பதாகையை வைத்துள்ளதாக கூறினர். பரிசு பொருள், வாக்குக்கு பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு மத்தியில் இந்த வாசகம் இப்பகுதியில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Continue Reading

LatestNews

தேர்தல் பணிமனை திறப்பு…

Published

on

|உசிலம்பட்டி தொகுதியில் பிஜேபி தேர்தல் பணிமனை திறந்து வைத்த மத்திய அமைச்சர் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்:

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணி உள்ளிட்ட
அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் பாண்டியம்மாள் மகேந்திரன் நீதிபதி ஆகியோர்களும்
திமுக கூட்டணியில் வல்லரசு ஆண்டித்தேவர் சந்தானம் ° கதிரவன் உள்ளிட்ட பலரும் போட்டியிட்டனர். 2021ல் அதிமுக வசம் இருந்த இந்த தொகுதி தற்போது அதிமுக கூட்டணி கட்சியான பிஜேபி வசம் தொகுதி கை மாறுவதற்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது .
இதை உறுதி செய்யும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினர் கடந்த ஆறு மாத காலமாக உசிலம்பட்டி தொகுதியில் பல்வேறு மத்திய அரசின் நலத்திட்ட பணிகளை வழங்க தொடங்கினர்.

குறிப்பாக 58 கிராம கால்வாய் பிரச்சனை பாஜக தான் முதலில் கையில் எடுத்தது உசிலம்பட்டி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைப்பதற்காக இதுவரையில் ஆளுங்கட்சியாக இருந்த எந்த எம்எல்ஏ வும் நிறைவேற்றாத பிரச்சனையை பாஜக சார்பில் வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்றுமனு அளித்தனர். இதுபோன்ற செயல்பாடுகள் உசிலம்பட்டி தொகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவை நிறைவேற்றுவதற்கு உசிலம்பட்டி தொகுதியில் பாஜகவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தது அதேபோல் தொகுதியில் தேசிய கட்சி தான் போட்டியிட வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பிரதான கோவில்களில் உள்ள கிராம முக்கியஸ்தர்கள் மூலம் பிஜேபி வேட்பாளர் உசிலம்பட்டியில் களம் இறக்குவதற்காக தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து சமுதாயநிர்வாகிகளை சந்திப்பது ஆன்மீக ரீதியாக ஒப்புதல் பெற்றது போன்ற நிகழ்வுகளை தேர்தலுக்கு முன்பிருந்தே பாஜகவினர் செய்துவந்தனர். தற்போது இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பாளரை தேர்வு செய்து அந்த வேட்பாளரை முன்னிறுத்த கூடிய வகையில் தற்பொழுது பிரச்சாரத்தை துவங்கி தேர்தல் பணிமனை திறந்து பாரதிய ஜனதா கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நேற்று மாலை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிடும் வகையில் உசிலம்பட்டி தொகுதியில் வேட்பாளராக செயல்பட்டுவரும் சாப்டூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் முத்துராமன் உசிலம்பட்டி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது .
இவர் இந்த பகுதி முழுவதும் கடந்த சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்க கூடிய நிகழ்ச்சிகள் உசிலம்பட்டி தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் கல்யாணம் முதல் காதுகுத்து வரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்து செய்து வந்துள்ளனர் .மேலும் கடந்த முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நீதிபதி என்பவர் உசிலம்பட்டி தொகுதிக்கு பெரிய அளவில் எந்தவிதமான மக்கள் நலத் திட்டங்களும் செயல்படுத்தவில்லை அதேபோல் இந்த பகுதி மக்களுடைய விவசாயத் தேவைகள் குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதது சாலை வசதி உள்ளிட்ட பொது சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் தொகுதி மக்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளார்.
எனவே, மீண்டும் அதிமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாக தெரிந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி முழுமூச்சாக இந்த தொகுதியில் செயல்பட்டு தேர்தல் வியூகம் வகுத்து வருவது காரணமாக பாரதிய ஜனதா கட்சி உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவதை உறுதிசெய்துள்ளது கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர்
வி கே சிங் பங்கேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களில் அணிவகுத்துச் சென்று அங்குள்ள மூக்கையாத்தேவர் நினைவு மண்டபம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருவுருவச்சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். தொடர்ந்து தமிழகத்தில் எந்த கட்சியும் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை முடிவு செய்யவில்லை தேர்தல் பணிமனைகளையும் திறந்து வைக்காத நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில்முதன்
முதலாக உசிலம்பட்டியில் தேர்தல் பணிமனை திறந்து வைத்து பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை மத்திய அமைச்சர் கே.என். சிஙா தலைமையில் நடத்தப்பட்டது.
இந்த முறை உசிலம்பட்டி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாக தெரிய வந்துள்ளது .இந்த நிலையில் வேட்பாளராக முத்துராமன்
நிறுத்ததப்படுவார் என்பதும், இப்பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ,
புறநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் மாநில விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமன் , ராணுவப் பிரிவு மாநிலத் தலைவர் பாண்டியன் மருத்துவர் அணி மாநிலத் தலைவர் சிவ பாண்டியன் மாவட்டச் செயலாளர்கள் சொக்கன் மொக்கராசு இன்பராணி உள்ளிட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

LatestNews

ஏடிஎஸ்பி பதவியேற்பு

Published

on

ஏடிஎஸ்பி பதவியேற்பு:

காரியாபட்டி

விருதுந கர் மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பே
ற்றுள்ள மணிவண்ணனை தொண்டு நிறுவன பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

பொது இடத்தில் மனைவியை கொல்ல முயன்ற கணவன்! காப்பாற்றிய பொதுமக்கள்!

நவ்யாவை உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி பொது இடத்தில் மனைவியை கொல்ல முயன்ற கணவன்! காப்பாற்றிய பொதுமக்கள்! முதலில் தினசரி… [...]

மார்ச் 06: தமிழகத்தில் 562 பேருக்கு கொரோனா; 4 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... மார்ச் 06: தமிழகத்தில் 562 பேருக்கு கொரோனா; 4 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஈஷா மஹாசிவராத்திரி… இந்த ஆண்டு ஆன்லைன் வழியேதான்!

மார்ச் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆதியோகிக்கு பொதுமக்கள் வழக்கம்போல் அனுமதிக்க ஈஷா மஹாசிவராத்திரி… இந்த ஆண்டு ஆன்லைன் வழியேதான்! முதலில் தினசரி தமிழ்… [...]

தமிழகத்தில் இடஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு: தேவரின கூட்டமைப்பு அறிக்கை!

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பதாக இருந்தால் பொதுப் பட்டியலில் உள் ஒதுக்கீடு செய்திருக்கலாம் தமிழகத்தில் இடஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு: தேவரின கூட்டமைப்பு அறிக்கை! முதலில் தினசரி… [...]

செராவீக் – மாநாட்டில் பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது!

ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது செராவீக் – மாநாட்டில் பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது! முதலில் தினசரி… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: