ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா

சோழவந்தானில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா

சோழவந்தான், :

சோழவந்தான் கள்ளர் தெருவைச் சேர்ந்தவர், சென்னை மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரிகிறார்.தொடர் காய்ச்சலால்,மதுரையில் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருந்துள்ளது.மேலும் அவரது மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து 4 பேர்களும், நேற்று மதுரை வேளாண்மை கல்லூரி சிறப்பு முகாமிற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குரு சங்கர் மற்றும் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் அப்பகுதி முழுக்க கிருமி நாசினி மருந்து தெளித்து தீவிர சுகாதார பணிகளை மேற்கொண்டனர். அந்த தெருவில் இரு பகுதிகளையும் தடுப்புகள் வைத்து பாதையை அடைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: