போதிய வசதிகள் இல்லை செவிலியர்கள் புலம்ப ல்?

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஒரு வாரப் பணி முடிந்ததும் தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்த மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்கிறார்கள்.
கொரோனா நோயாளிகளுக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றும் தங்களுக்கு தனிமைப்படுத்தும் ஹோட்டலில் போதிய வசதிகள் செய்து கொடுக்கபடவில்லை என்கிறார்கள்.
தங்களுக்கு எடுத்த ஸ்வாப் டெஸ்ட் ரிசல்ட் நாளை மதியத்துக்கு மேல்தான் கிடைக்கும் என்ற நிலையில் அதுவரை விடுதியில் அறைகள் ஒதுக்காமல், நாளைக் காலையே அறைகளை வெக்கட் செய்துவிட்டு ஹோட்டல் வாசலில் காத்திருக்க வேண்டும் என்று மருத்துவ மனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாம். கோவிட் நோயாளிகளுக்கு பணியாற்றும் தங்கள் பாதுகாப்புக்கு பல கோடி ரூபாய் செலவு செய்வதாக சொல்கிறது அரசு. ஆனால், மாவட்ட நிர்வாகமோ ஹோட்டல் வாசலில் உட்காருங்கள் என்று உத்தரவிடுகிறது, இதற்கு எங்களை வீட்டிலையே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிடலாமே என்று ஆதங்கப்படுகிறார்கள் தற்போது ஹெரிடேஜ் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள செவிலியர்கள்…..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: