Connect with us

LatestNews

பிரதமர், தமிழக முதல்வருக்கு பாராட்டு..

Published

on

இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடு புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்றது, பாரத பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக வளர்ச்சி அரசியல் மாவட்ட மாநாடு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது

இந்த மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பட்டியல் இனத்தில் வெளியேறுவது குறித்து மாற்றுக் கருத்து உடையவர்கள் சிந்திக்க வேண்டும் என பேசினார் மேலும் இந்திய நாட்டின் பிரதமர் ஒரு சமுதாயத்தைப் பற்றியும் சமுதாயம் எதற்காக போராடுகிறது என்பது குறித்தும் மிகத் தெளிவாக இன்று சென்னையில் பேசியுள்ளார் நாம் நம் சமுதாயம் தன்மானத்திற்க்காக போராடுகிறோம் அதற்கு இன்று தமிழக முதல்வரும் மோடி அவர்களும் நமக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் விதமாக பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என பேசினார்

இதை தொடர்ந்து பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி இந்த சமுதாயம் தேவேந்திர குல சமுதாய இனிமேல் அழைக்கப்படுவது பெருமைக்குரியது அதற்காக நம் சமுதாய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும் இனிமேல் மிகவும் கவனமாக கையாளவேண்டும் பல காலங்களில் நம்மை கலவரக்காரர்கள் என கூறினார்கள் அப்போது நமக்கு வளர்ச்சி இல்லை கலவரம் செய்ததால் தான் நாம் இந்த அளவுக்கு வளர முடிந்தது இப்போது அதற்கு அவசியமில்லை நாம் ரோட்டில் மறியல் செய்ய வேண்டிய அவசியமில்லை போராட வேண்டிய அவசியம் இல்லை நம்முடைய கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் தேவேந்திர வேளாளர்களின் அறிவிக்கப்படுவதற்கு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இது கடந்த 15 ஆண்டுகளாக போராடியதற்காக கிடைத்த வெற்றி

இந்த வெற்றிக்கு வழிவகுத்தார் தமிழக முதல்வருக்கும் பாரத பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார் மேலும் இந்த சமுதாயம் பல நூற்றாண்டுகள் முன்பு மன்னர் ஆட்சி காலத்தில் ஆண்ட சமுதாயம் ஆனால் மன்னர் காலத்தில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு நிலங்களில் பண்ணைத் தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது அதற்கு பின்பு ஆங்கிலேயரும் இந்த இனத்திற்காக எந்த முயற்சியும் எடுக்காமல் இந்த இனத்தின் வரலாறு அறியாமல் செட்டில் காஸ்ட் என்ற பிரிவில் சேர்த்துவிட்டனர்

தற்போது நாம் பட்டியில் பிரிவில் வெளிவர அனைத்து பணிகளும் செய்து போராடி வெற்றி நோக்கி செல்கிறோம்

திமுக ஆட்சி காலத்தில் பள்ளன் பறையன் என்று அழைப்பதை பள்ளர் பறையர் என்று அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தபோது செவிசாய்க்கவில்லை திமுக அதற்கு பதிலாக அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் ஆதிதிராவிடர் என அழைத்ததால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை நாம் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் பட்டியலில் இருந்து வெளிவரவேண்டும் நமக்கு மற்ற சமுதாயத்தில் கிடைப்பதுபோல் 8 சதவீதமும் அல்லது 9 சதவீதம் முதல் 10 சதவீதம் கிடைத்தால் போதும்

இந்த சமுதாயத்தை உடைய வரலாறு எங்கு ஆய்வு செய்தாலும் கீழடி அல்லது எங்கு ஆய்வு செய்தாலும் அந்த ஆய்வில் நாம் தான் முதலில் இருப்போம் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் இனத்திற்காக ஜாதியைச் சொல்லி மதமாற்றம் கூடாது மதம் மாறுவதை தவிர்க்க வேண்டும் இந்துக்கள் என்று ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் நாம் ஆதிகாலத்தில் இந்துக்களை வழிபட்டு தான் வந்தோம் அதையே தொடர்ந்து இந்துவாக இருக்க வேண்டும்

நமது இன பெண்கள் அரசியலில் ஈடுபட உடன் இருக்க வேண்டும் உதாரணத்திற்கு சிறையில் நான்கு ஆண்டு காலம் இருந்து வெளியே வந்த பெண்மணி (சசிகலா )தனக்கு உடல் நாலகுறைவாக உள்ளது என ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தொடர்ந்து கட்சியை கைப்பற்ற வேண்டும் அரசியல் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார் அதேபோல் நமது இன மக்களும் அரசியல் களத்திலும் செயல்பட வேண்டும் என பெண்களுக்கு அறிவுரை வழங்கினார்

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் இனிமேல் பச்சை சிவப்பு புதிய கட்சி கொடியை மட்டுமே கையில் பிடிக்கவேண்டும் நாளைக்கே வேறொரு கட்சியினர் 500 ரூபாயும் பிரியாணியும் கொடுப்பதாக கூறி உங்களை அழைத்தால் நீங்கள் செல்லக் கூடாது அப்படி சென்றால் தேவேந்திரகுல வேளாளரில் இருந்து நீக்கப்படுவார்கள் மேலும் நமது சமுதாயத்தினர் இனிமேல் மாற்று சமுதாயத்திடம் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் யாரிடமும் சண்டை போடுவதோ பிரச்சனை செய்வதோ இருக்கக்கூடாது நீங்கள் அமைதியாக இருந்து மற்றவர்களும் சண்டையிடாமல் இருக்க வேண்டும் என கூறினார் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் அனைவரும் கிராமந்தோறும் சென்று நமது சமுதாயத்திற்காகவும் சமுதாய கொடியையும் புதியதாக காட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்

கூட்டத்தில் இறுதியாக பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி நாம் தேவேந்திரகுல வேளாளர் என்று இன்றுமுதல் அழைக்கப்படும் வகையில் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பாரத பிரதமர் மோடி அமிர்ஷா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கைதட்டி நன்றியை தெரிவிக்க வேண்டும் என கோரி அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

சடலம் அருகே வசித்த வந்த மனநலம் பாதிக்கப் பட்ட பெண்…

Published

on

சகோதரன் உயிரிழந்தது தெரியாமல் துர்நாற்றத்துடன் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி:

மதுரை:

மதுரை முனியாண்டிபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயச்சந்திரன் (65) என்பவருடன் அவரது சகோதரி சுப்புலட்சுமி (55) தனியாக வீட்டில் வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில், அண்ணன் வழுக்கிவிழுந்து உயிரிழந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி தன் அண்ணன் தூங்குவதாக நினைத்து.
அண்ணனின் உடல் மேல் ஏறி நின்றபடி சமையல் செய்து வாழ்ந்து வருகிறார்.
இறந்தவர் உடல் அழுகியதால், கால்கள் உடல் பகுதியில் சிக்கியதால் சேதமடைந்த இருந்தது.
அவர் வீடு அருகே வசித்து வந்தவர்கள் உடலில் துர்நாற்றம் வீசியதையடுத்து, கதவை உடைத்து காவல்துறையினர் உடலை மீட்டு சுப்ரமணியபுரம் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

LatestNews

கிரைம் செய்திகள்..

Published

on

அவனியாபுரத்தில்
பைக் மோதி நடந்து சென்றவர் பலி :
மதுரை ஜூன் 17

மதுரை
மண்டேலா நகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் காஜா மைதீன் 50.ஆவர் மண்டேலாநகர் சந்திப்பில் சாலையை கடந்த போது, அந்த வழியாக சத்தியமங்கலத்தை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காஜாமைதீன் பலியானார் .
இந்த விபத்து குறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை முன்பு பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது :
பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்:

மதுரை.ஜூன்17.

மதுரை அருகே
திருப்பரங்குன்றம் கூடல் மலை தெருவை சேர்ந்தவர் சத்யா 28. இவர் அரசு மருத்துவமனை மெயின் கேட் அருகே சென்றபோது, கத்தி முனையில் மிரட்டி வாலிபர் ஒருவர் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டார்.
அப்போது, சத்யா கூச்சல் போடவே பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்தனர். .அந்த வாலிபரை தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரித்தபோது , அவர் சிவகங்கை மாவட்டம் பழையனேந்தலை சேர்ந்த பெரிய பாண்டி மகன் நாகராஜன் 26 என்று தெரிய வந்தது .அவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை செல்லூரில்
லோடுமேன் பூச்சி மருந்தை தின்று தற்கொலை
போலீஸ் விசாரணை:

மதுரை ஜூன் 17 :

மதுரை
செல்லூர் அருள்தாஸ்புரம் தேங்காய் கடை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 32. இவர் லோடுமேன் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்தது. தற்போது, லாக்டவுன் காரணமாக இவருக்கு வேலை இல்லை.
இதனால் , வருமானம் இன்றி சிரமப்பட்டார். இதன் காரணமாக, மனமுடைந்து பூச்சிமருந்தைதின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

LatestNews

கிணற்றில் மிதந்த ஆண் சடலம்..

Published

on

ராஜபாளையம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த, அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…..

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியில் இருந்து, சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் செல்லும் வழியில், தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் சடலமாக மிதந்தது. அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள், கிணற்றில் ஆண் சடலம் மிதப்பது குறித்து சேத்தூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் சடலமாக மிதந்த உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை யாரவது கொலை செய்து உடலை கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து, சேத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

மது போதையில் நடுச்சாலையில் மலைப்பாம்பைப் பிடித்து இளைஞர் நடனம்!

மது போதையில் பாம்பை தூக்கி சாலைக்கு கொண்டு வந்து நடனமாடினர், மது போதையில் நடுச்சாலையில் மலைப்பாம்பைப் பிடித்து இளைஞர் நடனம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

கஞ்சா விற்ற காதலர்கள்! போலிஸிடம் சிக்கிய சிட்டுக்கள்!

அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. கஞ்சா விற்ற காதலர்கள்! போலிஸிடம் சிக்கிய சிட்டுக்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆண் நண்பருடன் ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை கைது!

அந்த அறைக்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். ஆண் நண்பருடன் ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை கைது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஜாடிக்கேத்த மூடி: யூடியூப் மதன் மனைவி கைது!

கணவன் - மனைவியும் இணைந்தே யூடியூபில் சிறார்களை கெடுக்கும் ரீதியில் குற்றங்களை செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. ஜாடிக்கேத்த மூடி: யூடியூப் மதன் மனைவி கைது! முதலில் தினசரி… [...]

கொரோனா: இளம் நடிகர் உயிரிழப்பு!

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் கொரோனா: இளம் நடிகர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: