Connect with us

LatestNews

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா…

Published

on

மிதிவண்டிகள் வழங்கும் விழா:

மதுரை

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர்க்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது என்பது இயற்கையான ஒன்று தான். அதற்கெல்லாம் அஞ்சுபவர் முதலமைச்சர் இல்லை.
இது போன்ற சம்பவங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கும் வந்திருக்கிறது. அதனை காவல்துறை பார்த்துக் கொள்ளும். கனிமொழியின் பார்வை என்பது நாங்கள் எதுவும் செய்யாதது போல் இருந்து கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் பல்வேறு திட்டங்களை மதுரை மாநகருக்கு கொண்டு வந்துள்ளோம். கனிமொழியின் பார்வை எப்படி உள்ளது என தெரியவில்லை. வைகை ஆற்றுப் பாலத்தை கடக்கும் பொழுது கனிமொழி ஹெலிகாப்டர் மூலமாக சென்றாரா? இல்லையே தரைவழியாக தான் சென்றார் அப்பொழுது பல்வேறு திட்டங்களை அவர் பார்த்திருக்கலாமே எனவும் கூறினார். செல்லூர் ராஜூ இங்கே இருப்பதால் தான் 1300 கோடிக்கு முல்லைப்பெரியாறு அணை குடிநீர் திட்டம் வந்துள்ளது. கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்பது நியாயமான முறையிலும், தீர்க்கமான முறையிலும், தன்னிச்சையாக முதலமைச்சர் மட்டுமே எடுத்த முடிவு. இதில் அனைத்து விவசாயிகளும், பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாக்கப் படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கூட கடன் வாங்கி இருப்பவர்களுக்கு கூட விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது என்பது சாதனை. அதில் சிபிஐ விசாரணை கோருவது சரியானது அல்ல. ஒரு மாநில அரசு வரம்பு மீறி கடன் வாங்க முடியாது. ஒரு துறையை பற்றி தெரியாத ஸ்டாலின் எப்படி துணைமுதல்வராக மேயராக இருந்தார் என தெரியவில்லை. மத்திய வழிகாட்டுதல் படி குறைவாகவே கடன் வாங்கியுள்ளோம். தமிழக அரசு கடனில் தத்தளிக்கவில்லை. ஒரு முதலீட்டுக்கு கடன் வாங்கத்தான் செய்ய முடியும். கிருபானந்த வாரியார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. சில அமைச்சர்களை தவிர சசிகலா குறித்தான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பது ஏன் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்ட பொழுது,
கோபமாக இது அரசின் நிகழ்ச்சி. அரசு சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என்று சொன்னார். ஆனால் ஸ்டாலின் பற்றிய கேள்விக்கு மட்டும் தொடர்ந்து அமைச்சர் பதில் கூறி வந்தார். 234 தொகுதிகளில் வெற்றி என ஸ்டாலின் சவால் விடலாம் ஆனால் எங்களைத்தான் 234 தொகுதியிலும் மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது என்று தெரிவித்தார். அதிமுக அடுத்த முறையும் ஆட்சி அமைக்கும் என்பது கனவே என்று கனிமொழி கூறியதற்கு, நாங்கள் கனவு காணவில்லை. முதலமைச்சர் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்து கொடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்பதில் மாற்றமில்லை. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஐந்தாண்டுகள் மக்களுக்கு எந்தக்குறையும் நாங்கள் வைக்கவில்லை. எல்லோரும் மகிழ்வாக உள்ளனர். திட்டங்கள் மக்களை முறையாக சென்று சேர்ந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் கொடுப்பார்கள் என பேசினார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.

Published

on

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:

மதுரை:

மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோயில்கள்:
மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

LatestNews

பஸ்ஸில் கொரோனா விழிப்புணர்வு:

Published

on

திருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்
அனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

LatestNews

சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:

Published

on

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:

சோழவந்தான்:

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.
சிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
வணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா!

ஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஓலா வின் எலக்ட்ரிக் பைக்! முன்பதிவு ரூ.499 மட்டுமே!

ஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]

நாளை மின்தடை! உங்க பகுதி இருக்கா..?

சென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]

செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்!

குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: