Connect with us

LatestNews

உதயநிதிக்கு நிர்வாகம் பற்றி தெரியாது…அம ைச்சர்

Published

on

*உதயநிதி ஸ்டாலின்*
*நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்*
*அவருக்கு நிர்வாகம் குறித்து எதுவும் தெரியாது*

*மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி*.

மதுரை :

மதுரையில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அ.தி.மு.க.வினர், மாலையணிவித்து மரியாதை செய்தனர்.

அதன் பின் அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உதயநிதி ஸ்டாலின் ஊழல் குறித்து பேசலாமா? உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவும்,தந்தையும் ஊழலில் திளைத்தவர்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாகத்தை பற்றி ஒன்றும் தெரியாது.

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் சேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மக்கள் தான் எஜமானார்கள். மக்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால் கன்னியாகுமரி முதல் சென்னை வரைஒரே முடிவாகத்தான் இருக்கும்.

சென்னையிலேயே ஸ்டாலின் ஏன் சுற்றிக்கொண்டுள்ளார். மதுரைக்கும் வர சொல்லுங்கள்.

அதிமுக நிற்கும் இடங்களில் திமுக நிற்கும் என கூறியுள்ள நிலையில் ஸ்டாலினே நின்றாலும் மக்கள் அவரை தோற்கடிக்க தயாராகி விட்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறைகேடு குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது. விசாரணையின் முடிவினை வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டணி பேச்சுவார்த்தையை முன்கூட்டியே துவங்க வேண்டும் என்ற சகோதரி பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு முதல்வர், மற்றும்துணை முதல்வர் ஆகியோரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு விரைவில் முடிவடுத்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கண்மாயில் நீர் நிரப்பக் கோரி போராட்டம்…

Published

on

உசிலம்பட்டி அருகே குடிநீர் ஆதாரமாக உள்ள நான்கு கண்மாய்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி, கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்:

மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாய், ஆண்டிகுளம் கண்மாய் மற்றும் கடுக்காஞ்சி, பெத்தாங்குளம் என்ற நான்கு கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயின் இணைப்பு கால்வாய் மூலம் நீர் நிரப்ப அரசானை பிரபிக்கப்பட்டுள்ள சூழலில் கோவிலாங்குளம் கிராமத்திலிருந்து ஜோதிமாணிக்கம் கிராம அருகே செல்லும் கால்வாய் வரை சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள ஆக்கிரமிப்பால் கடந்த 40 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாத நிலையே நீடிப்பதாக கூறப்படுகிறது.நீரின்றி வறண்டு காணப்படும் நான்கு கண்மாய்கள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இருந்தாலும், இந்த கண்மாய்களை சார்ந்துள்ள 18 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காவது கண்மாய்களை நிரப்ப பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்காக வந்த அதிகாரிகள் தேர்தலை காரணம் காட்டி பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த வாரம் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்;டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்பும அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும எடுக்காததால் கோவிலாங்குளம் கிராம மக்கள் கிராமத்தில தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எந்த அரசியல் கட்சியினரும் தங்களது கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் கிராம மக்கள் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் ஆதார், ரேசன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Continue Reading

LatestNews

வாக்குப் பதிவு இயந்திரம் செயல்முறை விளக ்கம்..

Published

on

வாடிப்பட்டியில்
மின்னனுவாக்குபதிவு
செய்முறைவிளக்கம்.
வாடிப்பட்டி,மார்ச்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேர்தல்பிரிவு சார்பாக வரும்
சட்டமன்றதேர்தலில் மின்னனுவாக்குபதிவுசெய்யும் முறை பற்றி செய்முறை
விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தை
தேர்தல்அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால்,உதவிதேர்தல்அதிகாரி தாசில்தார்
பழனிக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் மண்டலதுணைதாசில்தார்
திருநாவுகரசு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வருவாய்ஆய்வாளர்
சஞ்ஜிவீநாதன் முன்னிலை வகித்தார். கிராமநிர்வாகஅலுவலர் கார்த்திக்
வரவேற்றார். கிராமஉதவியாளர்கள் வளர்மதி, ஜெயகுமார், அழகர், சண்முகவேல்,
புஷ்பம் ஆகியோர் கலந்துகொண்டு புதியவாக்காளர்களுக்கு மின்னனுஇயந்திரம்
மூலம் வாக்குபதிவு செய்யும்முறைபற்றி விளக்கிகூறி பயிற்சியளித்து
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.வாங

Continue Reading

LatestNews

கொரோனாநிதி அளித்த முதியவர்

Published

on

மதுரை மாவட்ட ஆட்சியரிடம்,

இதுவரை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 லட்சம் வரை நிதியாக வழங்கிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியன்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

சபாஷ் சரியான போட்டி: ஸ்டாலின் கொடுப்பது ஆயிரம் ரூவாதான்… எடப்பாடியோ மாசம் ரூ. 1500, வருசம் 6 சிலிண்டர் ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ!

ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறோம் சபாஷ் சரியான போட்டி: ஸ்டாலின் கொடுப்பது ஆயிரம் ரூவாதான்… எடப்பாடியோ மாசம் ரூ. 1500, வருசம்… [...]

கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி!

கரூரில் கடந்த 4 தினங்களாக நடைபெற்று வந்த மாநில அளவிலான அரைஸ் சுழற்கோப்பைக்கான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 95 : 83 என்கின்ற புள்ளி விகிதத்தில் தமிழ்நாடு… [...]

கரூரில் மகளிர் தின விழா: வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு செலுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்நிகழ்ச்சிகள் கரூரில் மகளிர் தின விழா: வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி! முதலில் தினசரி… [...]

கோவை ஈஷா யோகா மையத்தில்… யக்ஷா கலைத் திருவிழா!

கோவை ஈஷா யோகா மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா இன்று (மார்ச் 8) கோலாகலமாக தொடங்கியது. கோவை ஈஷா யோகா மையத்தில்… யக்ஷா கலைத் திருவிழா! முதலில்… [...]

நீ நெனச்சதெல்லாம் ஒவ்வொண்ணா நடக்குது தல: கவிதையால் வாழ்த்துக் கூறிய பாடலாசிரியர்!

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கும் அவர் தேர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. நீ நெனச்சதெல்லாம் ஒவ்வொண்ணா நடக்குது தல: கவிதையால் வாழ்த்துக் கூறிய பாடலாசிரியர்! முதலில்… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: