LatestNews
ரயில் சேவை நீட்டிப்பு..
தென் மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு:
மதுரை
தென் தமிழகத்திலிருந்து வெளிமாநில ரயில் நிலையங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
கொ
ரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு செய்யப்படுகிறது.
சில சிறப்பு ரயில்கள் ஜனவரி மாத இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது , அந்த ரயில்களின் சேவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் – மும்பை சிறப்பு ரயில் 04.02.2021 முதல் 28.03.2021 வரையும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06351 மும்பை – நாகர்கோவில் சிறப்பு ரயில் 05.02.2021 முதல் 29.03.2021வரையும் நீட்டிக்கப்படுகிறது.
வியாழக்கிழமைகளில் மதுரையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06053 மதுரை – பிகானீர் வாராந்திர சிறப்பு ரயில் 04.02.2021 முதல் 25.03.2021 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் பிகானீரிலிருந்து புறப்படும் வண்டி எண் 06054 பிகானீர் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் 07.02.2021 முதல் 28.03.2021 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 06733 ராமேஸ்வரம் – ஓகா வாராந்திர சிறப்பு ரயில் 05.02.2021 முதல் 26.03.2021 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் ஓகாவில் இருந்து புறப்படும் வண்டி எண் 06734 ஓகா – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் 09.02.2021 முதல் 30.03.2021 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06070 திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரயில் 07.02.2021 முதல் 28.03.2021 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் பிலாஸ்பூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06069 பிலாஸ்பூர் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 09.02.2021 முதல் 30.03.2021 வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06072 திருநெல்வேலி – மும்பை தாதர் வாராந்திர சிறப்பு ரயில் 03.02.2021 முதல் 31.03.2021 வரையும் வியாழக்கிழமை மும்பை தாதரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06071 தாதர் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 11.02.2021 முதல் 01.04.2021 வரையும், வெள்ளிக்கிழமைகளில் புவனேஸ்வரில் இருந்து புறப்படும் வண்டி எண் 08496 புவனேஸ்வர் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் 05.02.2021 முதல் 26.03.2021 வரையும் மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 08495 ராமேஸ்வரம் – புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் 07.02.2021 முதல் 28.03.2021 வரையும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது, நடைபெற்று வருகிறது என , தென்னக ரயில்வேயின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
LatestNews
கண்மாயில் நீர் நிரப்பக் கோரி போராட்டம்…

உசிலம்பட்டி அருகே குடிநீர் ஆதாரமாக உள்ள நான்கு கண்மாய்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி, கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்:
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாய், ஆண்டிகுளம் கண்மாய் மற்றும் கடுக்காஞ்சி, பெத்தாங்குளம் என்ற நான்கு கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயின் இணைப்பு கால்வாய் மூலம் நீர் நிரப்ப அரசானை பிரபிக்கப்பட்டுள்ள சூழலில் கோவிலாங்குளம் கிராமத்திலிருந்து ஜோதிமாணிக்கம் கிராம அருகே செல்லும் கால்வாய் வரை சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள ஆக்கிரமிப்பால் கடந்த 40 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாத நிலையே நீடிப்பதாக கூறப்படுகிறது.நீரின்றி வறண்டு காணப்படும் நான்கு கண்மாய்கள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இருந்தாலும், இந்த கண்மாய்களை சார்ந்துள்ள 18 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காவது கண்மாய்களை நிரப்ப பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்காக வந்த அதிகாரிகள் தேர்தலை காரணம் காட்டி பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த வாரம் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்;டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்பும அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும எடுக்காததால் கோவிலாங்குளம் கிராம மக்கள் கிராமத்தில தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எந்த அரசியல் கட்சியினரும் தங்களது கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் கிராம மக்கள் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் ஆதார், ரேசன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
LatestNews
வாக்குப் பதிவு இயந்திரம் செயல்முறை விளக ்கம்..

வாடிப்பட்டியில்
மின்னனுவாக்குபதிவு
செய்முறைவிளக்கம்.
வாடிப்பட்டி,மார்ச்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேர்தல்பிரிவு சார்பாக வரும்
சட்டமன்றதேர்தலில் மின்னனுவாக்குபதிவுசெய்யும் முறை பற்றி செய்முறை
விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தை
தேர்தல்அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால்,உதவிதேர்தல்அதிகாரி தாசில்தார்
பழனிக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் மண்டலதுணைதாசில்தார்
திருநாவுகரசு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வருவாய்ஆய்வாளர்
சஞ்ஜிவீநாதன் முன்னிலை வகித்தார். கிராமநிர்வாகஅலுவலர் கார்த்திக்
வரவேற்றார். கிராமஉதவியாளர்கள் வளர்மதி, ஜெயகுமார், அழகர், சண்முகவேல்,
புஷ்பம் ஆகியோர் கலந்துகொண்டு புதியவாக்காளர்களுக்கு மின்னனுஇயந்திரம்
மூலம் வாக்குபதிவு செய்யும்முறைபற்றி விளக்கிகூறி பயிற்சியளித்து
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.வாங
LatestNews
கொரோனாநிதி அளித்த முதியவர்

மதுரை மாவட்ட ஆட்சியரிடம்,
இதுவரை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 லட்சம் வரை நிதியாக வழங்கிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியன்.