Connect with us

LatestNews

கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

Published

on

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மத்திய அரசின் வரிக் கொள்கையால் ரூ. 80 ஆயிர ம் கோடி வருவாய் இழப்பு: அமைச்சர்

Published

on

மத்திய அரசின் வரிக்கொள்கையால் தமிழக அரசுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வரு வாய் இழப்பு: பழனிவேல் தியாகராஐன்:

மதுரை, ஜூன், 20 .

மத்திய அரசின் வரிக்கொள்கையால் தமிழக அரசுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வரு வாய்இழப்பு ஏற்பட்டுள் ளதாக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித் தார்.
தமிழக வணிகவரித் துறை சார்பில் மதுரைமண்டல வணிகர்களுட னான ஆலோசனைக் கூட்டம்
மதுரை மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் நடந் தது .
கூட்டத்திற்கு , வணிக வரித்துறை அமைச்சர் பி . மூர்த்தி தலைமை வகித்து பேசும் போது , ” முதல்வரின் உத்தரவின் பேரில் 11 ஆண்டுகளுக்கு பிறகு வணிகர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது . அவர்களின் கருத்து களைக் கேட்டு , புகார்கள் , குறைகள் நிவர்த்தி செய் யப்படும் . விரைவில் இத் துறை சார்பில் கட்டுப் பாடு அறை திறக்கப்பட உள் ளது . கடந்தாண்டு வணிக வரித்துறை மூலம் ரூ .96 ஆயிரம் கோடியும் , பத் திரப்பதிவு மூலம் ரூ .10 ஆயிரம் கோடியும் மட் டுமே அரசுக்கு வருமானம் கிடைத்தது . வணிகம் செய்வோர் இடையூ றின்றி வணிகம் மேற் கொள்ளலாம் .
முதலீ டின்றி , உற்பத்தி மற் றும் விற்பனையாளர் களுக்கு இடையே இடைத்தர கர்கள் போல் செயல்படு வோர்மீது உரிய நடவ டிக்கை எடுக் கப்படும் ” என்றார் .
கூட்டத்தில் , நிதி அமைச்சர் பிடிஆர் . பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்துப் பேசும்போது , ” மத் திய அரசின் வரிக் கொள் கையால் மாநில அரசுகள் சுய வருமா னத்தை இழந்து விட்டன . தமிழகம் 4 சத வீதத்தை இழந்துள்ளது . இது மொத்தம் ரூ .80 ஆயிரம் கோடியாகும் . கரோனா நிவாரண நிதி கொடுத் ததால் ரூ .9 ஆயிரம் கோடி செலவு , பெண்கள் இலவச பேருந்து பயணத் தால் ரூ .1,200 கோடி செலவு இவை யெல்லாம் அரசுக்கு ஒரு இழப்பே கிடையாது . டாஸ்மாக்கில் வரும் ரூ .35 ஆயிரம் கோடியை வைத்து தான் தமிழக அரசு இயங் குவதாகக் கூறுகின்றனர் .
மாநில அரசுக்கு வர வேண்டிய ரூ .80 ஆயிரம் கோடி வருமானம் , மத்திய அரசிடமிருந்து வந்தால் எதற்காக டாஸ்மாக் வரு மானம் ? நல்ல மேலாண்மை , கொள்கைக்காக , அடிப் படை தத்துவத்திற்காக , சமூக நீதிக்காக நாம் இருக்கும்போது , குறுக்கு வழியில் செல்ல வேண்டிய அவசியமில்லை . சட்ட மைப்பின்படி நேரடி வரிவிதிப்பு எல்லாம் ஒன்றிய அரசிடம் குவிந்துள்ளது . மாநில அரசிடம் அந்த உரிமை இல்லை . மறைமுக வரியை வைத்துதான் அரசு நடத்த வேண்டியுள் ளது . நேர்முக வரியாக 52 சதவீதம் , மறைமுக வரியாக 48 சதவீதம் என இருந்தது . ஒன்றிய அரசு , நேர்முக வரியை 60 சத வீதமாக உயர்த்திவிட் டது .
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் துவங்கு கிறது .
விரைவில், திருத்தப் பட்ட வரவு _ செலவு அறிக்கை தாக்கல் ஆகும் . வணிகர்களுக்காக பல நல்ல முடிவுகளை முதல்வர் அறிவிப்பார் ” என்றார் .

Continue Reading

LatestNews

வாலிபர் அடித்து கொலை..

Published

on

மதுரையில் முன்விரோதம் காரணமாக வாலிபர் அடித்து கொலை – போலீசார் விசாரணை ; மதுரையில் பரபரப்பு:

மதுரை

மதுரை எல்லிஸ் நகர் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வரும் முகமது சையது ஈசாக் என்கிற வாலிபர் இன்று காலை மதுரை பழங்காநத்தம் வி.கே. பி. நகர் பகுதியில் உள்ள விவசாய நிலைங்களில் மர்மமான நிலையில் இறந்து கிடந்ததாக எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்,
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.எஸ். காலனி காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா துணை ஆய்வாளர் மணிக்குமார் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். திலகர் திடல் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளர் ரமேஷ் மற்றும் மாநகர் சட்ட ஒழுங்கு துணை ஆணையர் தங்கதுரை தலைமையில் விசாரணை மேற்கொண்டு, தொடர்ந்து மேப்பநாயை லிங்கா வரவலைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் நடத்தி முதற்கட்ட விசாரனையில், இறந்தவர் மீது பல்வேறு திருட்டு வழக்கு இருப்பதாகவும் முன் விரோத காரணமாக கொலை செய்யப்பட்டாரா இல்லை.? வேற எதுவும் காரணமாக இருக்குமா..? என்று பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Continue Reading

LatestNews

அழகர்கோயில் மலையில் வனவிலங்குகளுக்கு தா கம் தீர்க்க சிறப்பு ஏற்பாடு..

Published

on

வனவிலங்குக்கு தாகம் தீர்க்கும் ஆலயம்:

மதுரை:

மதுரை மாவட்டம், அழகர் கோவிலில், வனவிலங்கின் தாகத்தை போக்க 25 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அழகர்கோவிலில் மலைபகுதியில் வனவிலங்குகள் உள்ளன.
இந்த விலங்குகள் அப்பகுதியில் உள்ள நூபுர கங்கைக்கு இரவு நேரங்களில் தாகத்தை தீர்த்துக் கொள்ளுமாம்.
அதாவது நூபுர கங்கையிலிருந்து வெறியேறும் தண்ணீரை மலையில் வசிக்கும் வனவிலங்குகள் பயன்படுத்தி வருகின்றன.
மலைகாலங்களில் நூபுர கங்கையில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்குமாம்.
தற்போது, மதுரை மாவட்டத்தில், மழை இன்றி பகல் பொழுது கடுமையான வெப்பம் நிலவுகிறது.
இதனால், அழகர் கோயில் மலையில் வசிக்கும் வனவிலங்குகள், மலையை விட்டு கீழே தண்ணீருக்காக அலைய நேரிடலாம், என கருதிய கோயில் நிர்வாகமானது, மலைப் பகுதியில் 25 இடங்களில் சிறிய தொட்டி அமைத்து, தினசரி குடிநீரையும் நிரப்பி வருகின்றனராம். இந்த தண்ணீர் தொட்டியானது திருக்கோயில் வளாகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கோயில் நிர்வாகமானது, வனவிலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் ஆலயமாக செயல்படுவதை, சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

பெட்ரோல், டீசல் விலை: தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது!

பெட்ரோல், டீசல் விலை: தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் பெட்ரோல், டீசல் விலை: தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது!… [...]

ஜூன் 20: தமிழகத்தில் 7,817 பேருக்கு கொரோனா; 182 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜூன் 20: தமிழகத்தில் 7,817 பேருக்கு கொரோனா; 182 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 5 பணியின் தன்மை… [...]

தந்தையர் தினம்: தந்தையுடன் சினி பிரபலங்கள்!

உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் நபரும் உங்கள் பெற்றோராக இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தந்தையர் தினம்: தந்தையுடன் சினி பிரபலங்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

e-pass ( இ-பாஸ் ) பெற்று திருமணங்களுக்கு செல்லலாம்! எந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் தெரியுமா?!

மேற்கண்ட இரு வகைகளைச் சேர்ந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் இபாஸ் பெற்று திருமணங்களுக்குச் செல்லலாம். e-pass ( இ-பாஸ் ) பெற்று திருமணங்களுக்கு செல்லலாம்! எந்த மாவட்டங்களில் உள்ளவர்கள்… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: