Connect with us

LatestNews

மதுரையில் மல்லிகைபூ ஏற்றுமதி மையம்…

Published

on

மதுரையில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை மத்திய அமைச்சர் பியுஸ் கோயல்
விருதுநகர் நாடாளு மன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் தகவல்:

திருப்பரங்குன்றம்

மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

மதுரை மல்லியை பற்றிய ஒரு முக்கியமான செய்தி கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே அக்டோபர் 15 மற்றும் டிசம்பர் 15ஆம் தேதி பாராளுமன்றத்தில் ஜீரோ அவர் என்று சொல்வார்களே அந்த கேள்வி நேரத்தில் நான் கேள்வி எழுப்பியிருந்த மிக முக்கியமான விஷயம் மல்லிகை.
மதுரை மல்லியை பற்றி மதுரை மல்லிகை எக்ஸ்போர்ட் ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும்.

மதுரை மல்லிகையை உலக அளவில் கொண்டு செல்வதற்கு அதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்திலேயே எழுப்பி இருந்தேன் .அதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்பொருள் அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களுடைய கடிதம் வந்திருக்கிறது.

அந்த கடிதத்தில் பியூஸ் கோயல் சொல்லியிருப்பது என்னவென்றால் திருப்பரங்குன்றம்,திருமங்கலம் பகுதியில் (எக்ஸ்போர்ட் ஜாஸ்மின் ) மல்லிகை மலர் பொருட்கள் ஏற்றுமதி மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அதற்கான பணிகளை தொடங்க இருப்பதாகவும் . மல்லிகை உற்பத்தியாகும் மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதாகவும்

அதிலே மதுரை மல்லிகையை மத்திய அரசு வெளி மார்க்கெட்டிலும் ஏற்றுமதி செய்வதற்காகவும் மத்திய அரசோடு சேர்ந்து மாநிலஅரசு திட்டம் வகுக்கும் என்பதையும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்திருக்கிறார்.

அதைப்போல Apeda வேளாண் மற்றும் உணவு உற்பத்தி ஏற்றுமதி வளர்ச்சி மையம் மூலம் மல்லிகை ஏற்றுமதியை அதிகரிக்க குழு அமைக்கப்படும்.

இதன் மூலம் மல்லிகை பூக்கள் ஏற்றுமதி குறித்த வாய்ப்புகள் இடங்களை தேர்வு செய்து கண்காணித்து சர்வதேச அளவில் ஏற்றுமதி வளர்ச்சிக்கான பணிகள் துவக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

மல்லிகையை ஏற்றுமதி பற்றிய வருங்காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் அடுத்து அதில் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களையும் சேர்த்து திட்டத்தை தயாரிப்பதற்கும் மத்திய அரசு இசைந்து உள்ளது.

இந்த நல்ல செய்தி மதுரை மல்லியை பாதுகாக்கவும் அதை விவசாயிகள் விவசாயம் செய்கின்ற உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு முக்கியமான திட்டமாக நான் பார்க்கிறேன் இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

தொடர்ந்து திட்டம் நல்லபடியா நடப்பதற்கு மாநில அரசும் மாநில அரசும் இந்த திட்டத்திற்கு மதுரை மாவட்டத்தில் உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது .

முதல் தடவையாக மத்திய அரசினுடைய பார்வை மதுரை மல்லியில் மேல் பட்டிருக்கிறது இதுவரை வெறும் சட்டமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருந்த மதுரை மல்லியை பற்றி நான் பாராளுமன்றத்தில் பேசியதும் விளைவாக ஒரு குழு அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒருங்கிணைந்த மத்திய அரசினுடைய திட்டம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மல்லிகை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் அதே நேரத்தில் ஏற்றுமதி தரத்திற்கு கொண்டு செல்வதற்காக மிக முக்கியமானதாக இருக்கும்.
மல்லிகை பூ விற்கnன ஒரு குவிக்குள் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என்பதற்காக ஒரு திட்டம் மத்திய அரசு கொண்டு வர போகிறது என்று பாரத பிரதமர் மோடி அவர்கள் கடந்த சுதந்திர தின விழாவில் இந்த மல்லிகை திட்டமாக இருக்கிறது.
மத்திய அரசு அறிவித்திருந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாம் மல்லிகையை கொண்டு வந்திருக்கிறோம் என்பது மிக முக்கியமானது.
இனி வரும் காலங்களில் மல்லிகை பூ விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், விவசாய பரப்பளவு அதிகரிக்கும்.
இதே போல், சிவகாசி பட்டாசு தொழிலில் ஈடுபட்டுவரும் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் பாதிப்பிற்கான நாடாளுமன்றத்தில் இதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். வரும் காலங்களில் அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என நம்புகிறேன்.
இதேபோல் அங்கு விபத்துகள் ஏற்பட்டு ஏற்படும் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க முதல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் காலங்களில் அதற்கான கூடுதல் மையங்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறது .
ராகுல் காந்தி மதுரை வருகை அரசியல் உள்நோக்கம் என, அமைச்சர் செல்லுர் ராஜீ கேள்விக்கு அவர்களுக்கு தெரியும் எது உண்மை எது பொய் என்பது இன்று எப்படி முதல் முதலமைச்சராக அண்ணனிடம் பாடிவந்தேன் கூறுகிறார்கள் என்றால் உண்மையிலேயே மதுரைக்குப் பெருமை சேர்ப்பார்.
தற்போது, விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு வரும் காலங்களில் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படாது.
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தது தமிழர்களின் பெருமையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ள தான் இதனை தெரியாமல் பாஜாவினர், ராகுலுக்கு கறுப்புக் கொடி காட்டுவது போன்றவை அவர்களின் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
என , மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.

Published

on

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:

மதுரை:

மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோயில்கள்:
மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

LatestNews

பஸ்ஸில் கொரோனா விழிப்புணர்வு:

Published

on

திருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்
அனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

LatestNews

சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:

Published

on

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:

சோழவந்தான்:

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.
சிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
வணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா!

ஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஓலா வின் எலக்ட்ரிக் பைக்! முன்பதிவு ரூ.499 மட்டுமே!

ஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]

நாளை மின்தடை! உங்க பகுதி இருக்கா..?

சென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]

செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்!

குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: