கொரோனா விழிப்புணர்வு…

கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டி

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார்

வாடிப்பட்டி:

வாடிப்பட்டி அருகே கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.

தனிச்சியம் பிரிவிலிருந்து நேரு யுவகேந்திரா சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன்மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் தனிச்சியம் பிரிவில் தொடங்கி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் நிறைவு பெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: