LatestNews
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..

On Mon, Jan 11, 2021, 13:36 Ravi Chandran <tmlravi> wrote:
மதுரையில், தமிழக நகர்புற வாழ்வதார இயக்கம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயணாளிகளுக்கு வழங்கினார், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. அருகில், கூட்டுறவு வங்கித் தலைவர்கள் எம்.எஸ்.பாண்டியன், வில்லாபுரம் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
LatestNews
தேர்தல் வந்துவிட்டால் ஸ்டாலின் வேல் குத் திக் கொண்டு கூட ஆடுவார்..அமைச்சர்
தேர்தல் வந்து விட்டால் ஸ்டாலின் வேல் குத்திக் கொண்டு கூட ஆடுவார்
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
தேர்தல் வந்து விட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டும் அல்ல , வேல் குத்த கூட செய்வார் , அம்மனுக்கு தீ கூட மிதிப்பார் , தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார்
பசும் பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டியவர் எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் , கபட வேடதாரி , அவர் ஒரு நாளும் முதல்வராக முடியாது .
கூட்டணியில் உள்ள பிரேமலதா விஜயகாந்த் பேசுயது குறித்து கேட்டதற்கு,
அவர்கள் சொந்த கருத்தை கூறுகிறார். கூட்டணியில் உள்ளவர்களை இப்படி பேசுங்கள் என கூற முடியாது.
குங்குமம் கொடுத்தா அழிப்பது , விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது , இது போன்ற செயலை மக்களும் கடவுளும் ஏற்க மாட்டார்கள் , தை பூசத்திற்கு விடுமுறை அனைத்து மதத்தினருக்கு தேவையான நலத்திட்டங்கள் செய்வதில் கடவுள் அதிமுக பக்கம் தான் இருப்பார்
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும் ,
மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார் என கூறினார்.
LatestNews
ரயில் சேவை நீட்டிப்பு..
தென் மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு:
மதுரை
தென் தமிழகத்திலிருந்து வெளிமாநில ரயில் நிலையங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
கொ
ரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு செய்யப்படுகிறது.
சில சிறப்பு ரயில்கள் ஜனவரி மாத இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது , அந்த ரயில்களின் சேவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் – மும்பை சிறப்பு ரயில் 04.02.2021 முதல் 28.03.2021 வரையும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06351 மும்பை – நாகர்கோவில் சிறப்பு ரயில் 05.02.2021 முதல் 29.03.2021வரையும் நீட்டிக்கப்படுகிறது.
வியாழக்கிழமைகளில் மதுரையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06053 மதுரை – பிகானீர் வாராந்திர சிறப்பு ரயில் 04.02.2021 முதல் 25.03.2021 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் பிகானீரிலிருந்து புறப்படும் வண்டி எண் 06054 பிகானீர் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் 07.02.2021 முதல் 28.03.2021 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 06733 ராமேஸ்வரம் – ஓகா வாராந்திர சிறப்பு ரயில் 05.02.2021 முதல் 26.03.2021 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் ஓகாவில் இருந்து புறப்படும் வண்டி எண் 06734 ஓகா – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் 09.02.2021 முதல் 30.03.2021 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06070 திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரயில் 07.02.2021 முதல் 28.03.2021 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் பிலாஸ்பூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06069 பிலாஸ்பூர் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 09.02.2021 முதல் 30.03.2021 வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06072 திருநெல்வேலி – மும்பை தாதர் வாராந்திர சிறப்பு ரயில் 03.02.2021 முதல் 31.03.2021 வரையும் வியாழக்கிழமை மும்பை தாதரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06071 தாதர் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 11.02.2021 முதல் 01.04.2021 வரையும், வெள்ளிக்கிழமைகளில் புவனேஸ்வரில் இருந்து புறப்படும் வண்டி எண் 08496 புவனேஸ்வர் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் 05.02.2021 முதல் 26.03.2021 வரையும் மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 08495 ராமேஸ்வரம் – புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் 07.02.2021 முதல் 28.03.2021 வரையும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது, நடைபெற்று வருகிறது என , தென்னக ரயில்வேயின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
LatestNews
திறக்கப்படாத சமுதாயக் கூடம்

சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய
சமுதாய கூடம் மக்கள் கொதிப்பு
மதுரை, ஜன. 24
புதூரில் தி.மு.க., சார்பில் பகுதி செயலாளர் அக்ரீ கனேசன், 46 வது வார்டு வட்ட செயலாளர் மருது ஆகியோர் ஏற்பாட்டில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. பொறுப்புக் குழு உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பொறுப்புக் குழு உறுப்பினர்கள் எஸ்ஸார் கோபி, வேலுச்சாமி, குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் 2010ல் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இங்குள்ள சமுதாயக்கூடம் 10 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராததால், சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவிட்டது. குப்பைத் தொட்டியின் அருகே சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால் பெண்கள் செல்ல அச்சமாக உள்ளது. இப்பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டும் போன்ற ஏராளமான புகார்களை தெரிவித்தனர்.