LatestNews
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..

On Mon, Jan 11, 2021, 13:36 Ravi Chandran <tmlravi> wrote:
மதுரையில், தமிழக நகர்புற வாழ்வதார இயக்கம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயணாளிகளுக்கு வழங்கினார், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. அருகில், கூட்டுறவு வங்கித் தலைவர்கள் எம்.எஸ்.பாண்டியன், வில்லாபுரம் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
LatestNews
மூவர் விஷமருந்தி பலி
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை
இராஜபாளையம் தனியார் தங்கும் விடுதியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குருவையாராஜா தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன ராஜா (வயது 65 )பல ஆண்டுகளுக்கு முன்பே கோயம்புத்தூர் பகுதியில் நிரந்தரமாக குடியேறியுள்ளார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார் கொரோனா காலத்தில் கோயம்புத்தூரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்
இந்த நிலையில் நேற்று இராஜபாளையத்தில் குருபையா ராஜா தெருவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு ஜனார்ந்தன ராஜா இவரது மனைவி கலாவதி (வயது 45 )இவரது மகன் சித்தார்த் (17வயது )இவர்கள் 3 பேரும் உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் இராஜபாளையம் மருத்துவமனை ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்
இதில் 3 பேரும் விஷம் அருந்தியது விடுதி ஊழியர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து மூன்று பேரையும் காப்பாற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர் சிறுவன் சித்தார்த் விடுதியிலே உயிரிழந்ததுள்ளது தெரிய வந்துள்ளது ஜனார்த்தனா மற்றும் இவரது மனைவி கலாவதி இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கலாவதி உயிரிழந்தார் ஜனார்த்தன ராஜா இராஜபாளையம் அரசு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் மூன்று பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ராஜபாளையம் பகுதியில் உறவினர்கள் இருக்கும் நிலையில் இவர்கள் ஏன் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
LatestNews
ஜல்லிக்கட்டில் முதல் பரிசு

பாலமேடு ஜல்லிக்கட்டு: முதல் பரிசு காரும் காங்கேயம் பசுக்களும்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரருக்கு காரும் காளைகளுக்கு காங்கேயம் பசுமாடு பரிசாக வழங்கப்படும் என விழா கமிட்டி அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது பாலமேடு. இந்த கிராமத்தின் மஞ்சமலை ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. காலை 8 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை 8 சுற்றுக்களாக வீரர்களும் காளைகளும் களமிறங்குகின்றனர். இதுவரை 651 வீரர்களும் 800 காளைகளும் பங்கேற்கத் தயார் நிலையில் உள்ளனர்.
ஒவ்வொரு சுற்றும் ஒரு மணி நேரம் என வரையறுக்கப்ட்டு தலா 75 வீரர்கள் களமிறங்குகின்றனர். போட்டியில் பங்கு பெறும் வீரர்கள், காளை உரிமையாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கையைப் பொறுத்து, வீரர்கள் மற்றும் காளை மாட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கும்.
காயம்படும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் இருப்பர். அவர்களை உடனடியாக அழைத்துச் செல்ல 10 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. காயம்படும் காளைகளை அழைத்துச் செல்ல 2 கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.
வீரர்களுக்கு போக்குவரத்து போலீசார் முன்னிலையில் மது போதை பரிசோதனை, செய்யப்பட்டு, இரத்த அழுத்தம் சீராக உள்ளதா எனவும் , உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா எனவும் சோதனை செய்த பின்னரே வீரர்களுக்கு வரிசை எண்கள் கொண்ட டீ-சர்ட் அணிந்து ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்கப்பட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு போட்டிகள் தொடங்கும்.
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக களம் காணும் வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு எல்.இ.டி.டி வி , பிரிட்ஜ், தங்கக்காசு, இருசக்கர வாகனங்கள், கட்டில். மெத்தை, சைக்கிள் போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் வெற்றி பெற்று அதிக காளை மாடுகளை பிடிக்கும் வீரருக்கு முதல் பரிசாக வேகன் – ஆர் – காரும் சிறப்பாக விளையாடும் காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக காங்கேயம் பசுமாடும் பரிசாக வழங்கப்பட உள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் தென்மண்டல ஐ.ஜி. முருகன், தலைமையில், டிஐஜி ராஜேந்திரன், 3 எஸ்பிக்கள், 7 ADSPக்கள், 32 DSPக்கள், 65 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மதுரை மாவட்ட காவல்துறை பாலமேடு ஜல்லிக்கட்டை முகநூல், யூ டுயூப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலை செய்கிறது.
LatestNews
பொங்கல் விழாவில் ராகுல்…

மதுரை அருகே தென்பழஞ்சியில் பொங்கல் விழாவில் பங்கேற்று சகஜமாக நாற்காலியில் அமர்ந்து உணவறிந்தனராம், ராகுல் காந்தி எம்.பி.
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?