Connect with us

LatestNews

மஞ்சளுக்கு போதிய விலை இல்லை…

Published

on

பொங்கல் பானையில் கட்டும் மஞ்சள் கிழங்கு ஆயிரம் ஏக்கரில் உற்பத்தி செய்த பிறகும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை:

சோழவந்தான்

மதுரை மாவட்டம் பாலமேடு அலங்காநல்லூர் மற்றும் எர்ரம்பட்டி கோவில்பட்டி மாணிக்கம்பட்டி கீழ சின்னம்பட்டி அழகாபுரி புதுப்பட்டி உள்பட சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் கிழங்கு கடந்த ஆடி மாதம் நடவு செய்து தற்போது, பொங்கலுக்காக மதுரை ராமநாதபுரம் ஈரோடு திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்து வருவதாகவும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், கடந்த ஆண்டை விட விளைச்சல் குறைவாகவே உள்ளது மேலும், இந்தப் பகுதியில் மஞ்சள் விவசாயம் முழுக்க முழுக்க சாத்தையாறு
அணையை நம்பி உள்ளது .
கடந்த 8 ஆண்டுகளாக சாத்தியார் அணையில் போதிய நீர் வரத்து இல்லாததால் போர்வெல்
மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது மஞ்சள் விவசாயம் எதிர்பார்த்த அளவு இல்லை.
மேலும் நோய் தாக்குதல் காரணமாகவும் விளைச்சல் குறைவாக உள்ளது .
மேலும் , 30 சென்ட் நிலத்தில் ரூபாய் 50 ஆயிரம் செலவு செய்து ரூபாய் 22 ஆயிரம் மட்டும் கிடைப்பதாக கூறுகிறார்கள் அடுத்த ஆண்டு மஞ்சள் விவசாயம் செய்யவே மிகவும் யோசனையாக உள்ளது அரசு உரிய நடவடிக்கை எடுத்து மஞ்சள் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூபாய்7 ஆயிரத்துக்கு மட்டுமே செல்வதால் எங்களால் உரிய லாபம் எடுக்க முடியவில்லை பொங்கலுக்காக பானையில் கட்டும் சிறப்புவாய்ந்த மஞ்சள் கிழங்கை விளைவித்து தரும் எங்களைப்போன்ற விவசாயிகளுக்கு போதிய உதவி செய்து கை தூக்கி விட்டால் அடுத்து வரும் காலங்களில் மஞ்சள் விவசாயம் செய்ய தயாராகவே இருக்கிறோம் என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

Continue Reading
Advertisement
1 Comment

1 Comment

  1. saree

    May 27, 2021 at 3:03 pm

    Turmeric is used for all kinds of Indian cooking recipes and healthy too. It’s used to making vitamin tablets also in this pandemic time. Government should take proper measures farmers should get their proper money and payment for this one apart from only MNCs got benefited

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.

Published

on

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:

மதுரை:

மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோயில்கள்:
மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

LatestNews

பஸ்ஸில் கொரோனா விழிப்புணர்வு:

Published

on

திருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்
அனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

LatestNews

சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:

Published

on

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:

சோழவந்தான்:

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.
சிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
வணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை! ஆட்டோ டிரைவர் கைது!

சில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை! ஆட்டோ டிரைவர் கைது! முதலில்… [...]

தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்!

இந்தாண்டு தீபாவளி அன்று படத்தை திரையரங்கில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு… [...]

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் முதல் பிரதமர்! முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை!

இந்தியப் பிரதமர் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதன்முறை. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் முதல் பிரதமர்! முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை! முதலில் தினசரி தமிழ்… [...]

வாட்டர் டேங்க் இடிந்து விழுந்த வீடியோ காட்சி!

இந்தக் காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. வாட்டர் டேங்க் இடிந்து விழுந்த வீடியோ காட்சி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாத காதலி! மனமொடிந்து காதலன் தற்கொலை!

அவர் அங்குள்ள சுடுகாடு ஒன்றின் அருகே வி‌ஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாத காதலி! மனமொடிந்து காதலன் தற்கொலை! முதலில்… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: