LatestNews
ஜவுளிக் கடையில் திருட்டு 4 பெண்கள் கைது….
மதுரை ஜவுளிக்கடையில் சேலைதிருடிய பெண்கள் உள்பட நாலு பேர் கைது
கையும் களவுமாக பிடிபட்டனர்.
மதுரை டிச 28 ஜவுளிக்கடையில் சேலை திருடிய பெண்கள் உள்பட 4 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்
மதுரை மஹால் வடம்போக்கி தெருவில் ராமநாதன் என்பவர் ஜவுளிக்ககடை நடத்தி வருகிறார் இந்த கடைக்கு சேலை வாங்குவது போல இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் வந்து வாங்கிக் கொண்டு இருந்தனர் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அதன் உரிமையாளர் அவர்களை கண்காணித்து வந்தார் இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் எட்டுசேலைகளை திருடி உடையோடு மறைத்து வைத்துக் கொண்டனர். இதை கண்ட உரிமையாளர் ராமநாதன் ஊழியர்களுடன் அவர்களை மடக்கி பிடித்து தெற்குவாசல் போலீசில் ஒப்படைத்தார் போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது முத்துலட்சுமி 55 மோகன் 55 சுசீலா என்ற சுசி 55 செல்வி என்ற திடசெல்வி 49 என்றுதெரிய வந்தது அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 8 சேலையை தெற்குவாசல் போலீசார் பறிமுதல் செய்தனர்.
*****************
ஆனையூரில்
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கைது கைது
மதுரை.டிச.28.ஆனையூரில் வழிப்பறியில் ஈடுபட்டவாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஆனையூர் முத்துநகரைசேர்ந்தவர்தெய்வேந்திரன்24.இவர் மாரியம்மன்கோவில்தெருவில் சென்றபோதுஅவரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட அருண்குமார் என்ற கருவாயன்19 என்பவரை கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.
*************
மதுரையில்
கத்திமுனையில் வழிப்பறி
வாலிபர் கைது.
மதுரை.டிச.28.மதுரையில் கத்திமுனையில் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை கே.புதூர் காந்திபுரத்தைசேர்ந்தவர் கார்த்திக்ராஜா34.இவர் பரசுராம்பட்டி ரேசன்கடை அருகே சென்றபோது ஒத்தக்கடை அமீர்கான் என்பவர்கத்திமுனையில்கார்த்திக்ராஜாவை மிரட்டி ரூபாய் ஐநூறை பறித்துச்சென்றுவிட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து அமீர்கானை கைது செய்தனர்.
*******************
மதுரை அருகே
மீன்கடை வைப்பதில் தகராறு
பெண்கள் உட்பட எட்டுபேர்கைது.
மதுரை.டிச.28.மதுரைஅருகே மீன்கடை வைப்பதில் நடந்த தகராறில் பெண்கள்உட்பட எட்டுபேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் அருகே ஆர்.வி.பட்டி சந்திப்பில்மீன்கடை வைப்பதில் அதேபகுதியை சேர்ந்த பிரியங்கா28மற்றும் காயத்ரி28 ஆகிய இருவருக்கும்இடையே ததகராறு முற்றியது.இதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகறாறு தொடர்பாக திருநகர் போலீசார் வழக்குப்பதிவுசெய்துபிரியங்கா ,காயத்ரி உட்பட எட்டு பேரை கைது செய்தனர்
****************
அவனியாபுரத்தில்
பணம் வைத்து சூதாடிய நான்குபேர் கைது
மதுரைடிச.28.அவனியாபுரத்தில் பணம்வைத்து சூதாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வில்லாபுரம் எம.ஜி.ஆர்.தெருவில் பணம்வைத்து சூதாடுவதாக அவனியாபுரம் போலீசுக்கு தகவல்கிடைத்து.இதைத் தொடர்ந்து ராமலிங்கம் எஸ.ஐ. தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சூதாடிய சோலையழகுபுரத்தை சேர்ந்த அண்ணாதுரை51 உட்பட நான்குபேரை கைதுசெய்து சீட்டுக்கட்டுகளையும் சூதாடிய பணம் ரூபாய் ஆயிரத்துநூறையும் பறிமுதல் செய்தனர்.
***********************
மதுரை பழங்காநத்த்தில்
தந்தை இறந்த சோகத்தில்
மகள் விஷம் குடித்து தற்கொலை.
மதுரை.டிச.28.பழங்காநத்த்தில் தந்தை இறந்த சோகத்தில் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை பழங்காநத்தம் ராமலிங்க நகரைச்சேர்ந்தவர் சண்முகவேல் மனைவி பரணி30இவருக்கு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பரணியின் தந்தை இறந்து விட்டார்.இதனால் மனமுடைந்து காணப்பட்ட பரணி வீட்டில் விஷம் குடித்து மயங்கிக்கிடந்தார்.இந்நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றறிபரணி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
************
மதுரை கூடல் புதூரில்
முன் விரோதத்தில் அரிவாளால் வெட்டியவர் கைது.
மதுரை.டிச.28.மதுரை கூடல் புதூரில் முன்விரோதத்தில் அறிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கூடல்புதூர் பொதிகைநகர்வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அசோக்குமார் மகன் தமிழரசு.இவருக்கும் அதேபகுதியைச்சேர்ந்த அருண்பிரகாஷ்33என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.இந்நிலை அதேபகுதியில் நடந்துசென்ற தமிழரசுவை வழிமறித்து அருண்பிரகாஷ் அரிவாளால் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழரசு கொடுத்த புகாரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து அருண்பிரகாசை கைது செய்தனர்.
***************"
LatestNews
கொங்குநாட்டு பூப்பறிக்கும் விழா

கோவை மாவட்டத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பூப்பறிக்கும் திருவிழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தில் ஒரு அங்காளம்மன் உள்ளது. அக்கோவிலில் காணும் பொங்கலையொட்டி 40 ஆண்டுகளுக்குப் பின் "கொங்குநாட்டு பூப்பறிக்கும்" திருவிழா எனும் கலாச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து பொரி,சுண்டல் கடலை, பழங்கள் இனிப்புகள் ஆகியவற்றை கூடையில் போட்டு தலையில் வைத்து ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அதன்பின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்த பின் கூடையில் கொண்டு வந்த இனிப்புகள்,பழங்கள் போன்றவற்றை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.மேலும் இவ்விழாவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான வள்ளி கும்மி பாட்டு பாடி நடனம் ஆடினர்.
LatestNews
மதுரையில் கொரோனா தடுப்பூசி
உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், பிரதமரின் நடவடிக்கை வெற்றி பெற்று உள்ளதாகவும் மதுரையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி:
மதுரை
மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தடுப்பு ஊசி வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர், இந்தியா முழுதும் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் பணியை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார், மதுரையிலிருந்து கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர், தமிழகம் முழுதும் 166 மையங்களில் கோவிட் – 19 தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது, முதல் தடுப்பு ஊசி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது, ஒரு நாளுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, முதல் கட்டமாக தமிழகம் முழுதும் 6 இலட்சம் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படுகிறது, இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், இந்திய மருத்துவத்துறையின் வழிகாட்டுதல் படி கோவிட் – 19 தடுப்பு ஊசி போடப்படுகிறது, ஒரு தடுப்பு ஊசி பாட்டிலில் 5 மி.லி மருந்துகள் உள்ளன, ஒரு நபருக்கு 0.5 மி.லி தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படும், கோவிட் – 19 தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் மது அருந்த கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது, நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில் "பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளது, முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடப்படும், ஒவ்வொருவருக்கும் இரண்டு கட்டமாக தடுப்பு ஊசி போடப்படும், தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது, தமிழகம் முழுதும் 226 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்று இருக்கிறது, பிரதமரின் விட முயற்சியால் தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, முதல் கட்டமாக 5 இலட்சத்து 56 ஆயிரம் தடுப்பு ஊசிகள் தமிழகம் வந்துள்ளது, அனைவரும் தடுப்பு ஊசிகள் எடுக்க வேண்டும், உலகமே, நாடே எதிர்பார்த்த விசயம் தடுப்பு ஊசி, இன்று ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது, முழு ஆராய்ச்சி செய்யப்பட்டு தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது, நம்மை காக்கும் மருத்துவர்கள் தான் முதலில் தடுப்பு ஊசி போட்டு கொண்டு உள்ளார், தடுப்பு ஊசி போட்டு கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டும், மக்கள் கொரைனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தற்காலிக எம்.ஆர்.பி செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள், தமிழக அரசு தொடர்ந்து கொரைனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது" என கூறினார்
LatestNews
நந்திக்கு சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நந்திகேஷ்வரனுக்கு நடைபெற்ற பூஜை. காய்கனிகளுடன் காட்சி தருகிறார்.
பாலாஜி…திருவண்ணாமலை
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?