Connect with us

LatestNews

கட்டிடத் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு…

Published

on

வைகை வடகரையில் கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு.
மதுரை டீசர் 26 வைகை வடகரையில் வேலை செய்துகொண்டிருந்த கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து பலியானார்.
திருப்புவனம் அருகே கழுகார் கடை ஊரைச் சேர்ந்தவர் சோனை 55 இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .வண்டியூர் வைகை வடகரையில் கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த சோனை திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .இதுதொடர்பாக அவரது மனைவி போதும் பொண்ணு கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*****************************
மதுரை கூடல் புதூரில்
கணவர் இறந்த சோகத்தில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை
மதுரை டிச 26 கூடல் புதூரில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை கூடல்புதூர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நவநீதம் 64 இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார் கணவர் இறப்பு மனைவி நவநீதத்தை பாதித்தது. இதனால் மனமுடைந்து சோகமாக காணப்பட்டார் இந்நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது சாவு குறித்து மகள் அஞ்சுகம் கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
***********************
மதுரை தத்தநேரியில் குடிபோதையில் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அடி உதை 2 பேர் கைது
மதுரை டிச 26 தத்தனேரி பகுதியில் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பாலமுருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி 35 அதே பகுதியை சேர்ந்த காசிமாயன் 68 தெய்வம் 36 ஆகிய இருவரும் குடித்துவிட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் அதை சீதாலட்சுமி தட்டி கேட்டார் இதனால் ஆத்திரமடைந்த காசிமாயன்மற்றும் தெய்வம் ,மீனாட்சி, காசி மாயனின் மகன் அருண்,மீனாட்சியின் சகோதரி ஆகிய 5 பேரும் செங்கல்லால் சீதா லட்சுமியை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சீதாலட்சுமி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காசிமாயன் ,தெய்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
****************
அண்ணா நகர் கே புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஆறுபேர் கைது போலீசார் அதிரடி
மதுரை டிச 26 அண்ணாநகர் மற்றும் கே புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் விற்பனை செய்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
வண்டியூர் சுடுகாட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்திரா நகரைச் சேர்ந்த அஜித் குமார் 20என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர் இவரைப்போல வண்டியூர் சினிமா தியேட்டர் பின்புறம் விற்பனை செய்த லோகேஸ்வரன் என்ற போதை லோகேஷ் 21 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் சர்வேயர் காலனி 120 அடி ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த திருஞானம் 24 பாலமுருகன் 27 வேல்முருகன் 29 அரவிந்தன் 27 ஆகியோரை கைது செய்தகே.புதூர்போலீசார்கைதுசெய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்த பணம் ரூபாய் 3080 மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்தனர் .மொத்தம் மூன்றறைகிலோகஞ்சாவும் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
*********************
பெரியார் பேருந்து நிலையம் அருகே சர்ச்சிற்கு சென்ற வரிடம் செயின் பறிப்பு.
மதுரை டிச 26 கிறிஸ்மஸ் தினத்தில் சர்ச்சுக்கு சென்ற சென்ற நபரிடம் செயின் பறித்த ஆசாமியை போலீசார் தேஏடிவருகின்றனர்.
அவனியாபுரம் குருதேவ் நகரை சேர்ந்தவர் ஜான்எட்வர்ட்46 இவர் திருப்பரங்குன்றம் ரோடு பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள சர்ச்சிற்கு பிரார்தனைக்காக சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மர்ம நபர் அவர் அணிந்திருந்த மூன்றரைபவுன் செயினை பறித்து தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஜான் எட்வர்ட் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.
***************
சுப்பிரமணிய புரம் ரயில்வே தண்டவாளம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த சிறுவன் உள்பட 7பேர் கைது
மதுரை டிச 26சுப்பிரமணிய புரம் ரயில்வே தண்டவாளம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த சிறுவன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுப்பிரமணியபுரம் வெங்கடாசலபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் கும்பல் ஒன்று பதுங்கி இருப்பதாக சுப்பிரமணியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்து சுற்றிவளைத்து 6 பேரை கைது செய்தனர் அவர்களில் மணி நகரத்தைச் சேர்ந்த குரு சுராஜ் 19 ஜீவா நகர் முதல் தெரு வை சேர்ந்த ஹரிஹரன் 21 ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவை சேர்ந்த அஜய் 21புலி பாண்டியன் தெருவைச் சேர்ந்த பாலகுமாரன் 21 விளாங்குடி பொதிகை வீதியைச் சேர்ந்த ராகுல் 19 ராமையா தெருவைச் சேர்ந்த கணேஷ் சிங் 19 மற்றும் ஆண்டாள் புரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்தனர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளைமற்றும் வழிப்பறிசெய்ய அந்தகும்பல் திட்டமிட்டு பதுங்கிஇருந்ததாக தெரிய வந்தது .அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
**************

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

சடலம் அருகே வசித்த வந்த மனநலம் பாதிக்கப் பட்ட பெண்…

Published

on

சகோதரன் உயிரிழந்தது தெரியாமல் துர்நாற்றத்துடன் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி:

மதுரை:

மதுரை முனியாண்டிபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயச்சந்திரன் (65) என்பவருடன் அவரது சகோதரி சுப்புலட்சுமி (55) தனியாக வீட்டில் வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில், அண்ணன் வழுக்கிவிழுந்து உயிரிழந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி தன் அண்ணன் தூங்குவதாக நினைத்து.
அண்ணனின் உடல் மேல் ஏறி நின்றபடி சமையல் செய்து வாழ்ந்து வருகிறார்.
இறந்தவர் உடல் அழுகியதால், கால்கள் உடல் பகுதியில் சிக்கியதால் சேதமடைந்த இருந்தது.
அவர் வீடு அருகே வசித்து வந்தவர்கள் உடலில் துர்நாற்றம் வீசியதையடுத்து, கதவை உடைத்து காவல்துறையினர் உடலை மீட்டு சுப்ரமணியபுரம் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

LatestNews

கிரைம் செய்திகள்..

Published

on

அவனியாபுரத்தில்
பைக் மோதி நடந்து சென்றவர் பலி :
மதுரை ஜூன் 17

மதுரை
மண்டேலா நகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் காஜா மைதீன் 50.ஆவர் மண்டேலாநகர் சந்திப்பில் சாலையை கடந்த போது, அந்த வழியாக சத்தியமங்கலத்தை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காஜாமைதீன் பலியானார் .
இந்த விபத்து குறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை முன்பு பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது :
பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்:

மதுரை.ஜூன்17.

மதுரை அருகே
திருப்பரங்குன்றம் கூடல் மலை தெருவை சேர்ந்தவர் சத்யா 28. இவர் அரசு மருத்துவமனை மெயின் கேட் அருகே சென்றபோது, கத்தி முனையில் மிரட்டி வாலிபர் ஒருவர் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டார்.
அப்போது, சத்யா கூச்சல் போடவே பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்தனர். .அந்த வாலிபரை தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரித்தபோது , அவர் சிவகங்கை மாவட்டம் பழையனேந்தலை சேர்ந்த பெரிய பாண்டி மகன் நாகராஜன் 26 என்று தெரிய வந்தது .அவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை செல்லூரில்
லோடுமேன் பூச்சி மருந்தை தின்று தற்கொலை
போலீஸ் விசாரணை:

மதுரை ஜூன் 17 :

மதுரை
செல்லூர் அருள்தாஸ்புரம் தேங்காய் கடை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 32. இவர் லோடுமேன் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்தது. தற்போது, லாக்டவுன் காரணமாக இவருக்கு வேலை இல்லை.
இதனால் , வருமானம் இன்றி சிரமப்பட்டார். இதன் காரணமாக, மனமுடைந்து பூச்சிமருந்தைதின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

LatestNews

கிணற்றில் மிதந்த ஆண் சடலம்..

Published

on

ராஜபாளையம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த, அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…..

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியில் இருந்து, சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் செல்லும் வழியில், தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் சடலமாக மிதந்தது. அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள், கிணற்றில் ஆண் சடலம் மிதப்பது குறித்து சேத்தூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் சடலமாக மிதந்த உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை யாரவது கொலை செய்து உடலை கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து, சேத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

மது போதையில் நடுச்சாலையில் மலைப்பாம்பைப் பிடித்து இளைஞர் நடனம்!

மது போதையில் பாம்பை தூக்கி சாலைக்கு கொண்டு வந்து நடனமாடினர், மது போதையில் நடுச்சாலையில் மலைப்பாம்பைப் பிடித்து இளைஞர் நடனம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான… [...]

கஞ்சா விற்ற காதலர்கள்! போலிஸிடம் சிக்கிய சிட்டுக்கள்!

அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. கஞ்சா விற்ற காதலர்கள்! போலிஸிடம் சிக்கிய சிட்டுக்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆண் நண்பருடன் ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை கைது!

அந்த அறைக்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். ஆண் நண்பருடன் ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை கைது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஜாடிக்கேத்த மூடி: யூடியூப் மதன் மனைவி கைது!

கணவன் - மனைவியும் இணைந்தே யூடியூபில் சிறார்களை கெடுக்கும் ரீதியில் குற்றங்களை செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. ஜாடிக்கேத்த மூடி: யூடியூப் மதன் மனைவி கைது! முதலில் தினசரி… [...]

கொரோனா: இளம் நடிகர் உயிரிழப்பு!

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் கொரோனா: இளம் நடிகர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: