Connect with us

LatestNews

மருத்துவமனை வாசலில் கேட்பாரற்ற கிடந்த சட லம்…

Published

on

*மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வாசலில் கேட்பாரற்று கிடந்த சடலம் – ஒரு மாதத்தில் மருத்துவமனை சுற்றி 5 சடலங்கள் மீட்பு:

மதுரை

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், இங்கு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் உறவினர் இல்லாத காரணத்தினாலும் உறவினர்கள் விட்டு செல்வதாகவும் சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனை சுற்றியே தங்கியிருப்பது வழக்கம்.
இந்த நிலையில், கடுமையான குளிரின் காரணமாக மருத்துவமனை வாசலில் தங்கியிருந்த அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த அவரது உடலானது மருத்துவமனை வாசலிலேயே சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக கேட்பாரற்று கிடந்ததுள்ளது.
மேலும், காவல்துறைக்கு முறையாக தகவல் கொடுக்காத காரணமாகவே ,
உடலை அப்புறப்படுத்துவது தாமதம் ஏற்பட்டதாகவும் இறந்தவர் யார்? என்பது குறித்தும் சிகிச்சைக்காக வந்தவரா? என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ,கடந்த ஒரு மாதத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சுற்றி உள்ள சாலை ஓரங்கள் குப்பைத் தொட்டிகள் சாக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:

Published

on

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Continue Reading

LatestNews

வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:

Published

on

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

திருப்பரங்குன்றம்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.

மற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது

Continue Reading

LatestNews

தீரன் சின்னமலை பிறந்தநாள்:

Published

on

தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்!

மணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]

ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன? ‘பகீர்’ வைரல் வீடியோ!

சிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]

மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை!

பல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை! முதலில்… [...]

உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை!

இதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை!… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: